பங்காளிங்க..

Monday, February 13, 2012

உன் வாழ்க்கை என்னால் அழியப்போகின்றது , மைன்ட் இட்.


இதை சொன்னவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியோ அல்லது ஏதோ ஒரு பிரபல கொலை, கொள்ளைக்காரனோ அல்ல? 

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடும் ஒரு மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றது. அது யார், என்ன என்ற விவரம் இன்னமும் யாருக்கும் புலப்படவில்லை. 

ஆனால் அவனால் அல்லது அவளால் அல்லது அதுவால் ஏற்படும் ஆபத்துக்களை பாருங்கள், தவிர்த்து விடுங்கள். 

அந்த ஆபத்து இணையதளம் வழியாக, உங்கள் மின்னஞ்சல் வழியாகவே வருகின்றது. SIMON25@HOTMAIL.CO.UK  இதுதான் அந்த மின்னஞ்சல். இதில் இருந்து வரும் எந்த ஒரு மெயிலையும் திறந்து பார்த்து விடாதீர்கள். அது ஒரு மிகப் பெரிய ஆபத்தான மெயில் ஆகும். அவனுடைய பெயர் சைமன் ஆஸ்தான் என்ற பெயராகும்.

இது மைக்ரோசாப்ட் மற்றும் நார்ட்டான் ஆல் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அந்த மின்னஞ்சலின் தலையங்கம் மெயில் சர்வர் ரிப்போர்ட் என்று போடப்பட்டிருக்குமாம். 

சரி நாம பிரவுசிங் சென்டரில் இருந்துதானே ஓபன் பண்றோம், பிரச்சினை நமக்கில்லையே, சிஸ்டத்துக்கு தானே  என்று நினைத்தால் அது உங்கள் தலை எழுத்தை மாற்றும் கடைசி மெயிலாகவே இருக்கும். 

ஒருவேளை அதையும் மீறி நீங்கள் ஓபன் செய்தீர்களே யானால் முதலில் அது உங்கள் மெயிலில் இருக்கும் அனைத்து மெயில் காண்டாக்டுகளை தேடி அழிக்குமாம், பின்னர் சிறிது சிறிதாக அனைத்தையும் அழித்து உங்கள் ஹார்ட் டிஸ்க் ஜீரோ செக்டாரை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுமாம்.

அந்த மெயிலை திறந்தவுடனே உங்களுக்கு ஒரு பெட்டி செய்தி தோன்றுமாம். அதாவது காலம் கடந்து விட்டது. இனி உன் வாழ்க்கை என் கையால் அழியப் போகின்றது என்பதுதான் அது. இதுவரை எந்த ஒரு ஆண்டி வைரஸ் சாலும் இதனை தடுக்க, அழிக்க இயலவில்லை. அதனால் இந்த மெயிலை ஓபன் செய்யாமல் மூடி விடுவது மிக நல்லது என்று எச்சரித்திருக்கின்றது. 

அதனால் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை வெளியிட்டு அவர்களை காப்பாற்றுங்கள். காரணம் அவர்கள் மெயிலில் உங்கள் மெயில் அட்ரஸ் இருந்தால் ஆபத்து உங்களுக்கும் வரும்.

1 comment:

  1. நல்ல தகவல்.. நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...