பங்காளிங்க..

Thursday, January 30, 2014

பிப்ரவரியில் அக்னி நட்சத்திரம்??!


எந்த ஆண்டும் இல்லாத வகையில் அக்னி நட்சத்திரம் 2014 துவக்கத்திலேயே உருவாகி விட்டது...

யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் இந்த தடவை மிக விரைவில் வருடத்தின் ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டது...

ரொம்ப குழம்பிடாதீங்க! நான் சொன்னது அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நமது அரசியலில் வந்திருப்பதை சொன்னேன்...

ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் நடந்து வந்த பனிப்போர் இப்போது விசுவரூபம் எடுத்திருப்பதை உலகமறியும்...

பெரும்பாலோனோர் இது ஒரு அரசியல் நாடகம் என்றே சொல்கின்றார்கள்...ஆனால் இருவருக்குள்ளும் உள்ள பனிப்போர் என்றாவது ஒரு நாள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு விரைவில் ஒரு சிறிய கருத்து தெரிவிக்கப் பட்டதற்காக இருக்குமா என்றால் கொஞ்சம் நம்ப முடியாமல்தான் இருக்கின்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு விசயகந்தைப் பற்றி பேசிய பேச்சினை ரசித்து கைகொட்டி சிரித்த வர்கள் கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, அழகிரி மற்றும் திமுக தலைவர்கள் அனைவருமே...
இன்றும் அதை மனதில் கொண்டு அழகிரி தேமுதிக விடம் கூட்டணி வைக்க வேண்டாம் என்று சொல்லும் போது கலைஞர் மற்றும் ஸ்டாலின் தரப்பு விசயகாந் தோடு கூட்டணி வைக்க ஆசைப்படுவது ஒரு முதிர்ந்த தலைவருக்கு அழகல்ல என்பது பெரும்பாலான திமுக தொண்டர்களுக்கு இருக்கும் நப்பாசைதான்....

அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது உண்மைதான்...ஆனால் இப்படி தடாலடியாக காலில் விழுவது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது...கட்சிக்கு என்று ஒரு கண்ணியம், கட்டுப்பாடு இருக்கின்றது என்றும் அதனை அழகிரி மீறி விட்டார் என்றும் அவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அழகிரி தரப்பினால் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது...அந்த ஒழுங்கு நடவடிக்கை ஏன் ஸ்டாலின் தரப்பின் மீது எடுக்கப் படவில்லை என்பதும் எல்லோரும் கேட்கும் கேள்வியே? 

கலைஞர் மிரட்டப் பட்டாரா? அல்லது தடுமாருகின்றாரா? என்பதும் மக்களிடையே தோன்றும் கேள்விகள்...

அழகிரி தன்னையும், திமுக பொருளாளரையும் தகாத வார்த்தைகளில் திட்டி விட்டார் என்று சொல்லும் கலைஞரை, அழகிரி கலைஞரின் மகனாக சென்று பார்த்தாரா அல்லது திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராக சென்று பார்த்தாரா? 

தன்னை இடை நீக்கம் செய்த திமுகவின் ஊழல்களை வெளியிடுவேன் என்று அழகிரி பேட்டி அளித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன...அப்படி எனில் இத்தனை நாளும் ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதானா? அதை ஏன் இத்தனை நாள் கேட்கவில்லை...தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழகிரி அப்ரூவராக மாறுகின்றாரா என்று எதிர்கட்சிகள் கேட்கின்றது...ஜனவரி 31ல் உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பேன் என்று அழகிரி பேட்டி அளித்ததன் பின்னணி என்ன? ஏன் அன்றே தெரிவிக்கலாமே? 

அதன் பிறகு 3 திமுக எம்பிக்கள் அழகிரியை சந்தித்து என்ன பேசப் போகின்றார்கள்...பேரமா? என்ற பல எண்ணங்கள் திமுக தொண்டர்களுக்கு உண்டாகியுள்ளது! கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களோடு யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமை அறிவித்த பிறகும் 3 எம்பி க்கள் என்ன பேசப் போகின்றார்கள்?? என்று எதிர்கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது....

கடந்த பிறந்த நாளில் அழகிரின் சஷ்டியப்த பூர்த்தியின் போது  கலைஞரின் கண்கள் பனித்து இதயம் குளிர்ந்து...இன்று இந்த தடவை என்ன நடந்ததது, நடக்கப் போகின்றது...என்ற பல கேள்விகள் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்....

அழகிரி மன்னிப்பு கேட்டு ஸ்டாலினின் வெற்றிக்காக போராடுவாரா? அல்லது அஞ்சா நெஞ்சன் அவரது தொண்டர்களுக்கு என்று தலைவராக நீடிப்பாரா? 

அக்னி நட்ச்சத்திரம் வெற்றி விழா காணுமா? அல்லது அக்னி நட்சத்திரம் ரிலீசே ஆகாதா? பத்திரிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கின்றது....

3 comments:

  1. நமக்கு கொஞ்ச நாள் பொழுதுப் போகும்

    ReplyDelete
  2. தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

    எங்களின் இணையதள முகவரி : FromTamil

    ReplyDelete
  3. என்னவோ போங்கோ, கடைசி வரைக்கும் மக்களை பற்றி எவருக்கும் கவலை இல்லை, கருணாநிதியின் மூத்த மகன் முக முத்துவை போல நாமும் சரக்கடித்து விட்டு மட்டையாக வேண்டும் என நினைத்துவிட்டார்கள் போலும்..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...