தலையங்கம் அதிர்ச்சியை தருகின்றதா? விசயமும் அப்படித்தான்....இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியேறினால் அது ஆபத்து...அதைப் போலவே இந்தியாவை சார்ந்த்த எந்த ஒரு விசயமும் வெளி நாட்டவர்க்கு தெரிந்தால் அதனால் நமக்கு பாதகம் என்றால் இதுவும் ஒரு வியாபாரமே...
அப்படி என்ன வியாபாரம் என்று யோசிக்கின்றீர்களா? விளையாட்டு த் துறையினில் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன?
இந்தியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டி கொடுப்பதில் முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட் விளையாட்டுதான்...
ஆறிலிருந்து தொண்ணூறு வரை கிரிக்கெட் விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கின்றது...
விளையாட்டினில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது உண்மையே...ஆனால் இந்தியாவின் வெற்றி ரகசியம் விற்கப்பட்டு தோற்கப்படும் போது அது வியாபார மாகின்றது.
எங்கே துவங்குகின்றது வியாபாரம்...ஐபிஎல் போட்டியில் தொடங்குகின்றது வியாபாரம் மற்றும் சூதாட்டம்...சூதாட்டம் எல்லாம் சாதாரணத் தொகையில் அல்ல...கோடியினில் தான் புரளுகின்றது...
இந்தியாவில் உள்ள வணிக ஜாம்பவான்கள் எல்லோரும் இந்திய ரகசியங்களை போட்டி போட்டு விற்கத் தொடங்குகின்றார்கள்...
வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்கின்றார்கள்...ஆனால் இந்திய வீரர்கள் அதிக அளவினில் இதில் பங்கு பெறுகின்றார்கள்...
சர்வதேச விளையாட்டினில் கூட இந்த அளவிற்கு உழைக்க மாட்டார்கள்...ஐபிஎல் போட்டி ஒவ்வொன்றிலும் அதிகமாய் உழைக்கின்றார்கள்...
என்ன பிரச்சினை எனில்...இந்தியாவின் ஆடுகளங்கள் எல்லா நாட்டு அணியினருக்கும் மிகவும் பழகி விடுகின்றது....இந்த ஐபிஎல் போட்டிகளை அவர்கள் பயன்படுத்தி இந்திய ஆடுகளங்கள் மற்றும் இந்திய வீரர்களின் ஆட்டத் திறமைகளை நன்கு கற்றுக் கொள்கின்றார்கள்...
அடுத்த முறை சர்வதேச போட்டியில் எளிதாக இந்திய வீரர்களை பந்தாடுகின்றார்கள் ....விளைவு எளிதாக ஜெயிக்க கூடிய போட்டியிலும் தோல்வியை சந்தித்து வருகின்றார்கள்....
இப்படி கூவி கூவி இந்திய ரகசியங்களை விற்கும் கும்பலை நாம் என்னவென்று சொல்வது???
விளையாட்டினில் வெற்றி தோல்வி சகஜம்...தோல்வி ஏற்படும்போது விமர்சனம் செய்யக் கூடாது என்று சொல்பவர்கள் ஒரு பக்கம் சிந்திக்க வேண்டும்....வெற்றி பெறும்போது நீங்கள் விளம்பரங்களை வாங்கிக் குவிக்கின்ரீர்கல்...அதுவே தோல்வியின் போது ரசிகர்களின் கண்டனங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே...அதை மட்டும் ஏன் கூடாது என்று தப்பிக்க முயற்சி செய்கின்றீர்கள்...
இந்த ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு வீரரும் கோடி ரூபாயில் ஏலத்தில் எடுக்கப் படுகின்றார்கள்...அந்த பணத்தினில் ஏன் லட்சக் கணக்கான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யக் கூடாது.!!!
அதில் ஏன் அக்கறை காட்ட மறுக்கின்றார்கள்...இன்றும் நமது கிராமங்களில் அதிவேக பவுலர்களும், அதிரடி பேட்ஸ்மேன் களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சரியான வழிகாட்டி இல்லாமல் , கல்வி இல்லாமல், மொழி தெரியாமல் அவர்கள் தவித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்...அவர்களின் திறமையை ஊக்குவிக்கலாமே....
இப்படி இந்திய ரகசியங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பதில் இந்தியாவிற்கு அழிவைத்தான் தேடித் தரும்.....
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...