பங்காளிங்க..

Saturday, February 22, 2014

அம்மா ஒகே! அய்யாவுக்கு வசதி எப்படி?

23 ஆண்டு கால சிறை வாழ்க்கைக்கு பிறகு தூக்கு மேடையின் அருகே வரை சென்றவர்களை தேர்தலில் கிடைக்கும் ஒட்டு பிச்சைக்காக இத்தனை காலம் சிறையினில் வைத்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் மக்களின் அனுதாப ஓட்டிற்காக  காத்திருந்து தூக்குத் தண்டனையை ரத்து செய்திருக்கின்றார்கள்.... இப்படி செய்தால் நாம் ஆளும்கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றுவிடலாம் என்று தப்புக் கணக்கும் போட்டு விட்டது காங்கிரஸ்...அந்த தலைமைக்கு எந்த முட்டா பயலோ தவறான தகவலை கொடுத்து விட்டான்...உண்மையில் 23 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்த அவர்களுக்காக எத்தனை எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள்...வைகோ, பழ நெடுமாறன், செங்கொடி என்று அடுக்கி கொண்டே செல்லலாம்....

நாற்பதும் நமதே என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மாவை விட அதிக வாக்குகள் பெற்றிட வேண்டும் என்ற தப்புக் கணக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அந்த மூவரின் பெற்றோருக்கு நிம்மதியை கொடுத்தது....இருந்தாலும் இது மிக காலம் கடந்த சுயநலமாய் எடுத்த முடிவுதான் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்....

இத்தனை ஆண்டுகளாய் கருணை மனுவை பரிசீலிக்காத காங்கிரசிற்கு திடீரென்று இந்த மூவரின் அவலக் குரல் கேட்டு விட்டதாம்....ஆச்சரியமாக இருக்கிறதே! இது தேர்தலுக்காக அவர்கள் எடுத்த தப்பான ஆயுதம்...இதன் மூலம் இந்த அம்மாவை காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்த அதே நேரத்தில்...தமிழக முதலமைச்சர் அடுத்த காயை நகர்த்தினார்.....அதாவது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய உத்திரவிடுவதாகவும் அறிக்கை வாசிக்கப் பட்டது....

மத்திய அரசு தனது உரிமையை பயன்படுத்தி தூக்குத் தண்டனையை ரத்து செய்த அதே நேரத்தில்...மாநில அரசு தனது அதிகார வரம்புக்குள் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது....

இப்போது காங்கிரசிற்கு பெரிய நெருக்கடி..எதிர்கட்சிகள் அவர்களை உசுபேத்த மீண்டும் ராகுல் காந்தி பிரதமருக்கே பாதுக்காப்பு இல்லை என்றால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்...உண்மைதான்., ஆனால் இந்த ஞானோதயம் திடிரென்று எப்படி வந்தது? 

உடனே கலைஞரிடம் பத்திர்ககையாளர்கள் கேட்டதற்கு நளினியை பரோலில் விடக் கூடாது என்று சொன்னவர் இதே செயலலிதா தான் என்றும் நாங்கள் டெசோ மாநாட்டில் எடுத்த தீர்மானத்திற்கு பயந்து போய் காங்கிரஸ் தூக்குத் தண்டனையை ரத்து செய்ததாக அவரும் சொல்லிக் கொள்கின்றார்...

ஆனால் உண்மையில் மனசார அவர்கள் வெளியே வர வேண்டும் என்று போராடியவர்கள் வெற்றியை கொண்டாடி விட்டு பேசாமல் அமர்ந்து ..கொண்டார்கள்.பெரிய கட்சிகள்தான் இன்று தன்னால்தான் தூக்குத் தண்டனை ரத்து ஆனதாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றது....

அம்மா பதவியை பயன்படுத்தி அனைவரையும் விடுதலை செய்து விட்டார்கள்...அய்யா கூட்டணியிலே இருந்த போதும் செய்யலை...நா அப்போ செஞ்சேன் என்று சொன்னாரே தவிர வேற எதுவும் செய்யலை...மிஞ்சி போனா பத்திர்க்கையை கூப்பிட்டு பேட்டி  மட்டும் கொடுத்துகிட்டு இருகாரு....

இப்போ காங்கிரஸ், அம்மா செஞ்சது தப்பு னு சொல்லுது...நம்ம அய்யா இப்போ இதுக்கு எந்த வருசத்து செய்தியை சொல்லப் போறாரோ??


**நன்றி : படம் மைசே.இன் 

1 comment:

  1. காலம் கடந்த கருணை மனுவினால் தூக்கு தண்டனையை ஆயுளாக மாற்றியது நீதிமன்றம். ஆயுள் தண்டனை காலத்தை தாண்டியும் அவர்கள் சிறையில் இருந்து விட்டதனால் மத்திய,மாநில அரசுகள் விரும்பினால் விடுதலை செய்து கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது நீதிமன்றம். அதனை உடனே செயல் படுத்தியது மாநில அரசு.தடுத்து நிறுத்தியுள்ளது மத்திய அரசு. ஆனால் நீதி மன்ற உத்தரவை யாருமே பேச மாட்டேன்கிறார்களே ஏன்?

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...