"நிர்பயா" - இந்த பெயரை கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?
2013 இல் கிரிமினல் லா என்ற சட்டம் இயற்றப்பட்டது....அதனைத்தான் நிர்பயா சட்டம் என்று பெயரினை மட்டும் வைத்துக் கொண்டார்கள்...
ஏதோ மிகப் பெரிய சாதனை செய்து விட்டதாக மத்திய அரசு நினைத்து தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டது...
இந்த சட்டம் இயற்றப் பட்ட பிறகு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்து விடும் என்று சொல்லிக் கொண்டார்கள்...ஆனால் இந்த நிமிடம் இந்த மாதிரியான பாலியல் குற்றங்கள் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது...
விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
இதில் என்ன கொடுமை எனில் சட்டம் நிறைவேற்றிய பிறகு இதுவரை ஒரே மட்டுமே நிர்பயா ஆக்ட் மூலமாக தண்டனை கொடுக்கப்பட்டிருக்கின்றது...
மற்ற இடங்களில் எல்லாம் விசாரணை மட்டுமே நடைபெற்றுக் கொண்டு வருகின்றது, தீர்ப்பு வரவில்லை...
அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் உலுக்கிய சம்பவம் தமிழ் நாட்டின் தலை நகரில் நடைபெற்றது.... மென்பொருள் வல்லுனரை வன்புணர்வு கொண்டு மார்பிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தி கொலை செய்து எரித்தும் கொன்று விட்டார்கள்....குற்றவாளிகளையும் கைது செய்து விட்டார்கள் .காவல்துறையினர்...ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்ற தகவல்களை இதுவரை பத்திரிகை வெளியிட வில்லை...அது என்னாவாயிற்று என்ற விளக்கமும் இதுவரை இல்லை....
இது போல ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் வீட்டினில் இருந்து தூக்கிச் சென்று கற்பழித்து கடைசியில் அவளை நிர்வாணமாக தூக்கில் தொங்க வைத்து கொன்றிருக்கின்றார்கள். காவல்துறை அவர்களை கைது செய்து விட்டது....ஆனால் இன்னமும் தண்டனை கொடுக்கப் படவில்லை....
இது மிக கொடுமையான விஷயம்...ஆனால் இந்த செய்தி பத்திர்க்கையின் மூன்றாம் பக்கத்தில் கடைசி செய்தியாக வந்திருப்பதே ஆச்சரியம்....
ஏன் இந்த பாகுபாடு? பத்திரிகை தலையங்கத்தில் தேர்தல் கூட்டணி என்ற வியாபாரத்தில் நாட்டம் ..கொண்டிருக்கின்றார்கள்...
டெல்லி நிர்பயா கற்பழிப்பு சம்பவத்திற்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் ஏன் தமிழ் நாட்டு சிறுமிக்கு கொடுக்கப் படவில்லை???
நிர்பயா ஆக்ட் எப்போதுதான் நடைமுறைக்கு வருமோ தெரியவில்லை....
ஒரு வேளை நிர்பயா ஆக்ட் எல்லா மாநிலத்திலும் நீதிமன்றத்திலும் நடைமுறைக்கு வந்து விட்டது என்றால் அது ஏன் பத்திரிக்கைகள் கண்களுக்கு முக்கியத்துவமானதாக தெரியவில்லை என்றும் தெரியவில்லை....
வீணாய் போன அரசியல் கட்சிகள் கொள்கைகளை மறந்து மக்களின் நலனை மறந்து கூட்டணிக்காக அலையும் இந்த வீணாய் போன செய்திகள்தான் பத்திர்க்கையை அலங்கரித்து கொண்டிருக்கின்றது.....
இந்த கேடுகெட்ட உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல் என்றுதானோ என்னவோ நிர்பயா, அவள் பெயரில் சட்டத்தை மட்டும் ஏற்படுத்தி விட்டு உலகத்தை விட்டு சென்று .விட்டார்.....
No comments:
Post a Comment
நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...