பங்காளிங்க..

Saturday, March 8, 2014

ஸ்டாலின் கண்டுபிடிச்ச விஷயம்??

தேர்தல்  வந்திடுச்சாம்....ரொம்ப பரபரப்பா இருக்காங்க....

பெரிய பெரிய தலைகள் எல்லாம் யாரை பாராட்டுறது, யாரை வசை பாடுறதுன்னு குழம்பி போய் இருக்காங்க...

என்ன காரணம்?  எந்த நேரத்துல கூட்டணி மாறும்னு தெரியலை....இந்த லட்சணத்துல நாம ஏதாவது வசை பாட கடைசியிலே அவங்க கூடவே கூட்டணி வச்சிட்டா என்ன பண்றதுன்னு குழப்பத்துல இருக்காங்க....வடிவேலு  போன தேர்தல்ல அம்மாவை வசை பாடிட்டு இப்போ முழிச்சிகிட்டு இருக்காரே...அந்த மாதிரி...

அம்மா ஒரே மூச்சா தனித்து போட்டின்னு சொல்லிடுச்சு...இன்னும் அய்யா பல சட்டமன்றம் பார்த்த மனுஷன் இன்னமும் கூட்டணிக்கு ஆள் தேடிக் கிட்டுதான் இருகாரு....பதவி பணம் மேல அவ்வளவு வெறி...என்ன செய்யுறது? 

காங்கிரஸ் கூட கூட்டணி வைக்க கூடாதுன்னு ஸ்டாலின் சொல்றாரு...ஆனா கனிமொழி அக்கா அங்கே போய் ஏதோ விசாரிச்சிக்கிட்டு இருக்காக...

அழகிரி அண்ணன் என்ன முடிவு செஞ்சிருக்காக, யாருக்கு தெரியும்? 

திருமா அண்ணனும் போகிற போக்கில கழண்டுவிடுவாருனு நினைக்கிறேன்...அதாவது ரொம்ப நம்பிக்கையா இருந்தா கலைஞரும் சரி இந்த  அம்மாவும் சரி கழட்டி விட்டுருவாங்க னு என்னிக்குத்தான் இந்த கூட்டணி காரங்களுக்கு தெரிய போகுதோ தெரியலை??

ஏதாவது ஒரு கட்சி நாட்டு  மக்களுக்காக நிக்குறாங்களா, எல்லாம் அவனவன் செல்வாக்கை உசத்துரதுக்குத் தான் நிக்குறாக....

தேமுதிக பாஜ கூட சேரப் போகுதாம், அப்போ காங்கிரஸ் கூட யாருதான் சேரப் போறாங்க தெரியலையே....

ஒன்னு மட்டும் உறுதி, கடைசி நேரத்துல தயாளு அம்மாவை சிபிஐ விசாரிக்கும், உடனே இனியாவது காங்கிரஸ் திருந்திடும் னு சொல்லி அய்யா அந்தர் பல்டி அடிக்கத்தான் போறாரு....அன்னிக்கு மத்த கூட்டணி கட்சி திண்டாடி போகும்!

இதுல மதிமுக, பாமக, விசிக, சமக எல்லாம் காணாம ஆயிடும்...திருப்பியும் திமுக அல்லது அதிமுக தான் தமிழகத்தை தாக்க போகுது....

மூணாவது கட்சி சத்தியமா உருவாகப் போறதில்லை....

கடைசி நேரத்துல பாஜக கூட அதிமுக சேர்ந்துச்சுனா  வேற வழியே இல்லே தேமுதிக எந்த கட்சி கூடையும் சேர முடியாது....

இப்போ விஷயம் என்னானா? ஸ்டாலின் கூடங்குளம் பக்கம் பிரச்சாரம் போனா அங்கெ எவனும் மதிக்க மாட்டான்னு யாரோ ஐடியா சொல்லிருக்காக...

அதுக்காக திடீருன்னு இடிஞ்சகரை மக்கள் மீது இந்த அம்மா போட்ட வழக்கை  வாங்கலைன்னு கண்டுபிடிச்சி சொல்லிருக்காரு...ஏன் சாமி, அவங்க போராட ஆரம்பிச்சி கிட்டத்தட்ட  வருஷம் ஆகப் போகுது...அந்த அம்மா எப்போ போட்ட வழக்கு....அதை அந்த அம்மா வாபஸ் வாங்கலைன்னு அப்போ உங்களுக்கு தெரியலையாக்கும்? நேற்றுதான் உங்களுக்கு இந்த ரகசியம் தெரிஞ்சதாக்கும்...

நீங்க என்னதான் பரிதாப பட்டாலும் இடிஞ்சகரையில் இருந்து ஒரு வோட்டு கூட யாருக்கும் விழ போறதில்லை...அதுல அவங்க தெளிவா இருக்காங்க...

ஒரு பவுடர் போட்ட *********** வந்து நாளைக்கு கரண்ட் வந்திடும், இன்னிக்கு உலை கொதிசிடுச்சி, நாளைக்கு உலை கொதிச்சிடுச்சி சொன்னது எதுவுமே திமுக விற்கு தெரியாதது மாதிரியே பேசிக்கிட்டு இருக்கீங்களே....அது எப்படி? 

உங்ககிட்டே மக்கள் இன்னும் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு, உச்சநீதிமன்றம், இடிஞ்சகரை மக்கள் மீது போட்ட வழக்குகளை வாபஸ் பெற சொல்லியும் இந்த அம்மா செய்யலை என்று பேட்டியளிக்கின்றார் சென்னை திமுக தலைவர்....இதுக்கு மதுரை திமுக தலைவரு என்ன சொல்லப் போறாருன்னு தெரியலை...

நீங்க எதை வேண்டாம் வேண்டாம் என்று சொல்கின்றீர்களோ...அதுதான் உங்களைத் தேடி வரும்னு போலிச் சாமியார் சொல்லியிருக்காரு....

நீங்க காங்கிரஸ் வேண்டாம் வேண்டாம் நு சொன்னா அதுவே உங்களுக்கு கூட்டணியா வரும்...இனிமேல் கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டாச்சு என்று சொன்ன பிறகு தலைவரு கம்யுனிஸ்டுகள் வந்தால் வரவேற்போம் நு பேசுறாரு....எப்போதான் கூட்டணி கட்சி கதவை நிரந்தரமா சாத்தப் போறீங்க நு தெரியலை....புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட்டாம்...ஆனா இத்தனை நாள் ஜால்ரா போட்ட விசிக வுக்கும் ஒரே ஒரு சீட்டுதானாம்....

நாளைக்கு விசிக தலைவரு தனியா பிரிஞ்சி போய் பாமக கூட கூட்டு சேர்ந்தா கூட ஆச்சரியபடுரதுக்கு இல்லே.... ஒவ்வொரு நாளும் காமெடியா இருக்கு!!!

14 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. உங்க கேள்விக்கான பதிலை திரு. வானரம் அவர்கள் சொல்லி விட்டார்கள்....

   Delete
 2. "ஒரு பவுடர் போட்ட *********** வந்து"
  who is this?

  எனக்கு தெரியும் எனக்கு தெரியும் . அது நாரவாய்சாமி தானே.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை...அவர் ரொம்ப பேமஸா த்தான் இருந்திருக்காரு....எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கே , வருகைக்கு நன்றி

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. //ஒரு பவுடர் போட்ட *********** வந்து"
  who is this?
  எனக்கு தெரியும் எனக்கு தெரியும் . அது நாரவாய்சாமி தானே.//
  ஏம்பா ரோஸ் நிறத்துல பவுடர் பாத்துருக்கேன். கருப்பு நெறத்துல கூடவா பவுடர் தயாரிக்குறாங்க?.

  ReplyDelete

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு கரி ன்னு கூட இன்னொரு பெயரு இருக்கு மக்கா....

   Delete
 5. IDDENDHA KKARAI; ORU VOTE 'varalai-ennaralum D.M.K. 'katchai -AZHAIYADH'A; -----MA-RAI' 'kalanda --SIVA 'vaiea ;'mudee; dumuk; V...C.K another seat alloated DMK ----------------

  ReplyDelete
  Replies
  1. என்னவோ சொல்ல முயற்சி பண்றீங்க!

   Delete
 6. IDDENDHA KKARAI; ORU VOTE 'varalai-ennaralum D.M.K. 'katchai -AZHAIYADH'A; -----MA-RAI' 'kalanda --SIVA 'vaiea ;'mudee; dumuk; V...C.K another seat alloated DMK ----------------
  மீரா நாராயணன் என்ன சொல்றாங்கனா ,
  இடிந்தகரையிலே ஒரு ஓட்டு வரலைனாலும் dmk கட்சி அழியாது . மறை கழண்ட சிவா வாயை மூடு . vck கு இன்னொரு தொகுதி கொடுத்திருக்கு.

  இப்ப நான் என்ன சொல்றன்னா,
  தமிழ் நாட்டுல ஒரு ஓட்டு வரலைனாலும் dmk கட்சி அழியாது . ஏன்னா நீங்க கொள்ளைஅடிச்சத வச்சி வேற ஒரு நாடே வாங்கிரலாம் .
  மூளை நிரம்பி வழியும் மீரா நாராயணனே இப்ப திறங்க உங்க வாய .

  ReplyDelete
  Replies
  1. நன்றி, தோழரே! உங்கள் உதவிக்கு! விசிக கேட்டது 5, கொடுத்தது 1, ஸ்டாலின், கலைஞர் கொடும்பாவியை எரிச்சதுக்கு ஒன்னு இன்னிக்கு கொடுத்திருக்காங்க போல, கனிமொழி, தயாளு அம்மாள் கொடும்பாவியை எரிச்சிருந்தா கூட ரெண்டு தொகுதி கிடைச்சிருக்கும்...அதை விட அழகிரி கொடும்பாவியை எரிச்சிருந்தா ஸ்டாலின் குளிர்ந்து போய் 5க்கும் மேலேயே கொடுத்திருப்பாரு....

   இடிஞ்சகரைல ஒரு வோட்டு விழலேனா அப்புறம் எதுக்கு அவங்களை பத்தி கவலைப்படணும்....இடிஞ்சகரைல மட்டும் இல்லே, இவங்க மட்டும் காங்கிரஸ் கூட கூட்டு சேர்ந்தாங்கன்னா எந்த கரையிலும் வோட்டு விழாது...

   Delete
 7. எட்சூச்மி, நா அவங்க பேர தப்பா டைப் பண்ட்டதா நெனகாதிங்க . மீரா, நாரா னு நல்லா ரைமிங்கா இருந்ததுனால அதையே டைபிட்டேன்.
  ( அப்பாடா சமாளிச்சாச்சு)

  ReplyDelete
  Replies
  1. கலைஞரை பத்தி எழுதினாலே ரைமிங் எல்லாம் டைமிங்குல வந்திடும்...எல்லாம் கொடுத்ததுதானே...தப்பே கிடையாது...!

   Delete
 8. எல்லாம் அவர் சொல்லிக்கொடுத்ததுதானே ...தப்பே கிடையாது...!

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...