பங்காளிங்க..

Wednesday, October 19, 2011

தமிழ்மணம் ரமணிதரனுக்கு எனது ஆதரவு

எல்லோருக்கும் கருத்து சொல்லும் உரிமை இருக்கின்றது. அதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ரமணீதரன் எதையும் தவறாக சொல்லவில்லை...அவர் மனதில் பட்டதைத்தான் சொன்னார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதற்காக யாரும் கோவப்பட வேண்டாம். இது எங்கள் தளம். நாங்கள் அப்படித்தான் சொல்லுவோம். யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால் தமிழ்மணத்து நிர்வாகி திரு.ரமணிதரனுக்கு எனது முழு ஆதரவு உண்டு.

இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம். ஆனால் முகம் தெரியாத எத்தனையோ இசுலாமிய சகோதர,  சகோதரிகளுக்கு நல்ல பதிவர்களுக்கு நிச்சயம் இது கடுமையான வேதனையை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை. 

பன்னிக்குட்டி ராமசாமி எழுதிய பயோடேட்டா இத்தனை பிரச்சினைக்குள்ளாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு  பதிவருக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. அதில் அவர் மிகவும் ஜாலியாக பொழுதை கழிக்கும் ஒரு மனிதர் என்றே நான் நம்புகின்றேன். சிலர் மிக சீரியஸாக பதிவிடுவார்கள், சிலர் ஜாலியாய் பதிவிடுவார்கள். அப்படி நினைத்து தான் அவர் அந்த பயோடேட்டாவை தயாரித்திருக்க வேண்டும். அதை வெளியிடுவதற்கு அவர் எத்துணை சிந்தித்திருக்க வேண்டும். ஒரு மனிதனின் செய்கையை வேடிக்கை பார்க்கும் போது சிரிக்க வைத்தல் என்பது வேறு..அதையே தனது எழுத்தால், தனது பதிவில் ஒவ்வொரு நாளும் சிரிக்க வைப்பது என்பது வேறு. அந்த திறமை அவருக்கு இருக்கின்றது. அவருக்கென்று ஒரு தனிப்பட்டாளம் இருப்பது மிகப் பெரிய விஷயம். ஒருவேளை தமிழ்மணத்தில் அறிமுகம் ஆன ஒருவருக்கு இத்துனை புகழ்ச்சியா என்று ஒரு நிமிடம் ரமணிதரன் பொறாமைப் பட்டிருக்க வேண்டும். அதனால் கூட அந்த வார்த்தைகள் வந்து விழுந்திருக்கலாம். இல்லை அவசரத்தனத்தில் எழுதி இருந்தால் அதை தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கலாம். எதுவுமே நடக்காதது போல் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. 


அதுமட்டுமல்லாமல் தமிழ்மணத்தில் இருந்து இது அவரது சொந்த கருத்து என்று வெளியிட்டிருப்பதன் பின்னணியையும் நாம் கவனிக்க வேண்டும். ரமணிதரன் அவ்வாறு பின்னூட்டம் இட்டிருப்பது தவறு என்று தெரிந்திருந்ததால்தான் அவர்கள் ரமணிதரனை தனியே கழட்டி விட்டு இது அவரது சொந்த கருத்து என்று பின்வாங்குகின்றார்கள்.

தமிழ்மணம் இந்த அளவிற்கு புகழ் பெறுவதற்கு காரணம் இவர்களை போன்றவர்களின் ஜாலியான பதிவுகளே. பெயரிலி என்ற தலைப்பில் வந்த  அந்த பின்னூட்டம் எல்லோரையுமே சற்று முகம் சுழிக்க வைக்கின்றது. அது என்னை போன்ற புதியவர்களையும் கூட, அப்படி சிந்திக்க வைக்கின்றது. ஒரு ஆபாசமான அல்லது தகாத வார்த்தையை கூறினால் அந்த பதிவு தடைசெய்யப்படும் என்று தமிழ்மணத்தின் விதிமுறைகளில் படித்த நியாபகம். அப்படி இருக்கும் போது அந்த தமிழ்மணத்தின் நிர்வாகி என்ற பொறுப்பில் இருப்பவர் எப்படி பின்னூட்டம் கொடுத்திருக்க வேண்டும். மிக எளிதாக பன்னிக்குட்டி ராமசாமிக்கு தனிப்பட்ட முறையில் கண்டனம் தெரிவித்து இருக்கலாம். அதை விடுத்து பின்னூட்டம் கொடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லி ஒரு மதத்தின் அடிப்படைகளில் ஊடுருவுவது தவறு என்றே நான் நினைக்கின்றேன்.

தமிழ்மணம் என்பது படைப்பாளிகள் கூடும் சந்தை என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த மோசமான பின்னூட்டம் இசுலாமிய மதத்து பதிவர்களை, நண்பர்களை பயங்கரமாக பாதித்து இருக்கின்றது.

எப்போதுமே தனிமனித சாடல் இருக்கும்...ஆனால் இன்னாரின் சார்பாக நான் இதை சொல்கின்றேன் என்று சொல்லும்போது அந்த சாடலுக்குஅந்த மொத்த குழுவும் பொறுப்பாகின்றது. அதை யாராலும் மறுக்க இயலாது. அப்படி இருக்கும் போது இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று சொல்வது விநோதமாய் இருக்கின்றது.  அதனால் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுப்பதற்கு முன்பு ரமணிதரன் அதே தமிழ்மணம் சார்பாக மன்னிப்பு பதிவு இடுதல்அவசியம். இன்று இந்த தளம் இந்த அளவிற்கு பெயர் பெறுவதற்கு எத்தனையோ இசுலாமிய, இந்துத்துவ, கிருத்துவ சகோதரர்கள்தான் காரணம். யாரும் இதை இந்துத்துவ தளம் என்று எதிர்பார்த்து தன்னை இணைக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இது தமிழர்கள் தளம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். 
அப்போதுதான் தமிழ்மணம் நிசமாகவே மணம் கமழும் என்று சொல்லலாம்.


ரமணிதரனோ அல்லது தமிழ்மண நிர்வாக குழுவோ இதற்க்கு தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோரினால் எனது முழு ஆதரவு அவருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் நிச்சயம் உண்டு. 


செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோருவது மிகப் பெரிய விஷயம். அந்த மன்னிப்பினை பெருந்தன்மையோடு ஏற்று கொள்ள இசுலாமிய சகோதரர்கள், பதிவர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் மனதார நம்புகின்றேன். 


தமிழ்மணத்திற்கு, திரு ரமணிதரனுக்கு இது ஒரு சோதனை தான் என்று நாங்கள் நினைக்கின்றோம். முடிவு அவர்களிடம் ஒப்படைக்கின்றோம்.


இப்போதும் சொல்கின்றேன் ரமணிதரன் மன்னிப்பு கோரினால் எனது ஆதரவு அவருக்கே. நீ நேற்று வந்தவன், உன்னுடைய உபதேசம் எனக்கு தேவை இல்லை என்று கூட அவர் நினைக்கலாம். ஆனால் காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும்.


62 comments:

 1. //எப்போதுமே தனிமனித சாடல் இருக்கும்...ஆனால் இன்னாரின் சார்பாக நான் இதை சொல்கின்றேன் என்று சொல்லும்போது அந்த சாடலுக்குஅந்த மொத்த குழுவும் பொறுப்பாகின்றது. அதை யாராலும் மறுக்க இயலாது. அப்படி இருக்கும் போது இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று சொல்வது விநோதமாய் இருக்கின்றது.//

  இது உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தார்மீக நெறிமுறையாகும். ஆனால் தமிழ்மணம் "நாங்கள் இப்படித்தான் இருப்போம். எங்களைப் பிடிக்காதவர்கள் விலகிச் செல்லுங்கள்" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களே. ஆகவே அந்தக் குழுவில் ஒருவருக்கும் பொது நிறுவனம் நடத்தும் தகுதி இல்லை என்றுதான் முடிவு எடுக்கவேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 2. /// DrPKandaswamyPhD said...
  இது உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தார்மீக நெறிமுறையாகும். ஆனால் தமிழ்மணம் "நாங்கள் இப்படித்தான் இருப்போம். எங்களைப் பிடிக்காதவர்கள் விலகிச் செல்லுங்கள்" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களே. ஆகவே அந்தக் குழுவில் ஒருவருக்கும் பொது நிறுவனம் நடத்தும் தகுதி இல்லை என்றுதான் முடிவு எடுக்கவேண்டியிருக்கிறது.///

  உண்மைதான் அய்யா....இத்துனை எதிர்ப்புகள் வந்தபோதும் அவர்கள் பிடிவாதமாக இருந்தால் நட்டம் அவர்களுக்குத்தான் என்பதை அவர்கள் விரைவில் உணருவார்கள்.

  ReplyDelete
 3. அதனால் இந்த பிரச்சினை விசுவரூபம் எடுப்பதற்கு முன்பு ரமணிதரன் அதே தமிழ்மணம் சார்பாக மன்னிப்பு பதிவு இடுதல்அவசியம். இன்று இந்த தளம் இந்த அளவிற்கு பெயர் பெறுவதற்கு எத்தனையோ இசுலாமிய, இந்துத்துவ, கிருத்துவ சகோதரர்கள்தான் காரணம். யாரும் இதை இந்துத்துவ தளம் என்று எதிர்பார்த்து தன்னை இணைக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்று கொள்ள வேண்டும். இது தமிழர்கள் தளம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
  அப்போதுதான் தமிழ்மணம் நிசமாகவே மணம் கமழும் என்று சொல்லலாம்.

  ReplyDelete
 4. நேற்று தமிழ்மணத்தில் வெளியிடப் பட்டிருந்த விளக்கத்துக்கு பதில் பின்னூட்டம் இட்ட மாடல மரையன் என்பவர் பதிவர்களை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார், மட்டுறுத்தி வெளியிடப் பட்ட கருத்து என்பதால் அதற்கும் தமிழ்மனத்திர்க்கும் சம்பந்தம் உண்டு... ஆகையால் மன்னிப்பு கேட்டாலும் நான் பிச்சைக்காரனாக இருக்க விரும்பவில்லை...

  ReplyDelete
 5. எங்கள் நட்சத்திர இடுகைகளில் சொல்லப்பட்ட முடிவுகளை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறோம். தமிழ்மணம் காத்திரமான பதிவுகளைத் திரட்டும் தளமாகப் பயணிக்க விரும்புகிறது. வெற்று ஆரவார மொக்கைப் பதிவுகள் தமிழ்மணம் முகப்பை ஆக்கிரமிப்பது குறித்து பல பதிவர்களும் வாசகர்களும் எங்களுக்கு விடுத்த வேண்டுகோள்களைச் சார்ந்தே தற்பொழுது சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தமிழ்மணத்தை ஒரு ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறோம். தமிழ்மணத்தின் இந்தக் கருத்தினைச் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கும் அதே நேரத்தில் இந்த கொள்கை முடிவினை விரும்பாதவர்கள் தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வதையும் வரவேற்கிறோம்

  ReplyDelete
 6. இப்போதும் கூட, ஒரு சிலர் தலையங்கத்தை பார்த்ததும் உடனே நெகடிவ் ஓட்டு அளித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அவசரத்தனம் நன்றாகவே தெரிகின்றது. இதுவரை நடந்த நிகழ்வுகளுக்கு தமிழ்மணம் வருத்தத்தை தெரிவித்து இருக்கின்றது. இதற்க்கு மேல் இந்த பிரச்சினைகளுக்கு முடிவுரை கொடுக்கலாமே.

  ReplyDelete
 7. ///ஒரு ஆபாசமான அல்லது தகாத வார்த்தையை கூறினால் அந்த பதிவு தடைசெய்யப்படும் என்று தமிழ்மணத்தின் விதிமுறைகளில் படித்த நியாபகம். அப்படி இருக்கும் போது அந்த தமிழ்மணத்தின் நிர்வாகி என்ற பொறுப்பில் இருப்பவர் எப்படி பின்னூட்டம் கொடுத்திருக்க வேண்டும்.///

  இது மேட்டரு...

  ReplyDelete
 8. நடுநிலையோடு எழுதப்பட்ட பதிவாகவே கருதுகிறேன்

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 9. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 10. நடுநிலையோடு எழுதியமைக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 12. ஒரு மதத்தின் அடிப்படைகளில் யார் தமிழ்மணத்தில் செயல்பட்டார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள்.உங்கள் கருத்து நடுநிலையோடு எழுதப்படாமல் இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக எழுதபட்டிருப்பதால் எனது கண்டனங்கள்.

  ReplyDelete
 13. /// Anonymous said..

  ஒரு மதத்தின் அடிப்படைகளில் யார் தமிழ்மணத்தில் செயல்பட்டார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள்.உங்கள் கருத்து நடுநிலையோடு எழுதப்படாமல் இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக எழுதபட்டிருப்பதால் எனது கண்டனங்கள். ///

  உங்களது பகிர்விற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...நான் இசுலாமிய சமுதாயத்தை சார்ந்தவன் அல்ல...நான் ஒரு தமிழன். எனக்கு இசுலாமிய, இந்துத்துவ, கிறித்துவ சகோதர சகோதரிகள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் இசுலாமியர்களின் வாசகங்களை முதலில் கொச்சைப்படுத்தி விமர்சித்தது யார்? மேலும் தமிழ்மணத்தில் இருக்கும் மற்ற நிர்வாகிகளே அதை தவறு என்று முன்னிறுத்தி வருத்தத்தை தெரிவித்து விட்டார்கள். இதற்கு மேலும் நீங்கள் மீண்டும் என்னை இசுலாமிய மதவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை வரவழைக்கின்றது.

  ReplyDelete
 14. /// Mohamed Faaique said...

  இது மேட்டரு...///

  இது(தான்) மேட்டரு...

  ReplyDelete
 15. /// ஆமினா said...

  நடுநிலையோடு எழுதப்பட்ட பதிவாகவே கருதுகிறேன்

  மிக்க நன்றி சகோ ///

  நடுநிலையோடு இருந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே...

  ReplyDelete
 16. /// அருள் said...தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்///

  உங்கள் வருகைக்கு எனது நன்றி...

  ReplyDelete
 17. /// கார்பன் கூட்டாளி said...

  நடுநிலையோடு எழுதியமைக்கு பாராட்டுக்கள்.///

  நடுநிலையோடு எழுதினால் தமிழர்களின் ஒற்றுமை பலப்படும் என்று நம்புகின்றேன்...நான் இந்து, நீ முஸ்லிம், அவன் கிறித்துவன் என்று நான் பார்க்கவில்லை..தவறு செய்தால் திருத்திகொள்வோம் என்று நினைப்பவன் நான்

  ReplyDelete
 18. அதுமட்டுமல்லாமல் இசுலாமியர்களின் வாசகங்களை முதலில் கொச்சைப்படுத்தி விமர்சித்தார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த தகவலை யார் உங்கலுக்குச் சொன்னார்கள்?

  நடந்தது எல்லாம் வாசித்தீர்களா? இந்த தகவல் பொய் என்று சொல்கிரவர்கல் சொல்வதை வாசித்த பிரகா இதை எழுதினீர்கள்

  ReplyDelete
 19. ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே.
  http://dondu.blogspot.com/2011/10/blog-post_18.html

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. /// Anonymous said...

  அதுமட்டுமல்லாமல் இசுலாமியர்களின் வாசகங்களை முதலில் கொச்சைப்படுத்தி விமர்சித்தார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த தகவலை யார் உங்கலுக்குச் சொன்னார்கள்?

  நடந்தது எல்லாம் வாசித்தீர்களா? இந்த தகவல் பொய் என்று சொல்கிரவர்கல் சொல்வதை வாசித்த பிரகா இதை எழுதினீர்கள் ///

  பெயர் தெரியா என் அன்பு நண்பருக்கு,

  ரமணிதரன் அவர்கள் அப்படி ஒரு பின்னூட்டமே கொடுக்கவில்லை என்று நீங்கள் மறுதலிக்கின்றீர்களா? தமிழ்மண நிர்வாகி எந்த அளவிற்கு பொறுப்பாய் பதில் அளித்திருக்க வேண்டும்...அவரே இவ்வளவு அவசரப்பட்டிருக்க கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அந்த பின்னூட்டத்திற்குத்தானே இத்தனை எதிர்ப்புகள். இதை நிச்ச்ச்சயம் அவரே உணர்ந்திருப்பார். இருந்தாலும் உங்களுடைய கருத்திற்கும் நான் செவிசாய்க்கின்றேன். உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்..இந்த பிரச்சினை இப்படியே நீடிக்க வேண்டுமா? இதற்கு முடிவு என்பது தான் என்ன?

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. அதுமட்டுமல்லாமல் இசுலாமியர்களின் வாசகங்களை முதலில் கொச்சைப்படுத்தி விமர்சித்தார்கள் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இந்த தகவலை யார் உங்கலுக்குச் சொன்னார்கள்?

  நடந்தது எல்லாம் வாசித்தீர்களா? இந்த தகவல் பொய் என்று சொல்கிரவர்கல் சொல்வதை வாசித்த பிரகா இதை எழுதினீர்கள்

  ReplyDelete
 24. Siva , they are making group and in TAMIZMANAM and nothing was wrong in " PEYARILI" side. Please read this post for clear understanding!

  http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

  1) இந்த சாந்தி சமாதானம் எல்லாமே இந்த5 வருடத்தில் அரபு நாட்டுக்கு சென்றவர்களின் கைவண்ணம்தான்.
  சரி இப்ப "சாந்தி அப்புரம் நித்யா"னு ஒரு சூப்பர் படம் வந்திருக்கு அதுக்கும் பிரச்சினை பண்ணுவார்களா?

  ReplyDelete
 25. Dear All ,

  Please go and read this POST and if you have real........... ( fill your self), please go away from TAMILMANAM.

  " தன் மதத்தை இழிவுபடுத்தியதாக் குற்றம் சாட்டி, "என் மதம், என் மதம்" என்கிற முக்கியத்துவம் கொடுக்கும் அந்த மதரீதியான எண்ணம் ஒழியனும்னா, மதச்சார்பற்ற தமிழ்மணத்தைவிட தன் மதம்தான் உயர்ந்தது என்று எண்ணி பதிவுப்பட்டையை தூக்கியவர்கள் அப்படியே ஒதுங்கி இருப்பதுதான் எல்லாராலும் விரும்பப்படுகிறது.

  கண்மணிகளா! எங்கேயாவது போய் நல்லா இருங்க! தயவு செய்து மறுபடியும் பதிவுப்பட்டையை மாட்டிக்கிட்டு வந்திடாதீங்க! ஏன் என்றால், உங்களைப் பதிவர்கள் பார்க்கும் பார்வை மாறிவிட்டது! இல்லை நீங்களே உங்கள் மேலே மதச்சாயத்தைப்பூசிக் காட்டி எல்லோரையும் மாற்றிவிட்டீர்கள்! "

  http://timeforsomelove.blogspot.com/2011/10/blog-post_18.html

  also this,

  http://maniyinpakkam.blogspot.com/2011/10/blog-post_18.html

  ReplyDelete
 26. @Anonymous

  +1

  சரி! மற்ற மதங்களுக்கு எதிராக எழுதுபவர்களையும் இப்படியே கும்முவீர்களா?

  ReplyDelete
 27. /// Anonymous said..

  Siva , they are making group and in TAMIZMANAM and nothing was wrong in " PEYARILI" side. Please read this post for clear understanding!///

  சாந்தி அப்புறம் நித்யா என்பது ஒரு குறிப்பிட்ட பெயரை, தலைப்பை குறிப்பிடுவது அது ஒரு திரைப்படம்...அந்த ஒரு வாக்கியத்தை வார்த்தையை மட்டும் வைத்து கொண்டு வாதாடுவது முறை ஆகாது...ஆனால் அந்த குறிப்பிட்ட பதிவர் தனது இசுலாமிய வாக்கியத்தை அதில் பிரசங்கம் படுத்தும் போது அந்த வாக்கியத்தை குறிப்பாய் கிண்டலடிப்பது என்பது முறையாகாது என்பதே எனது கருத்து..இந்த பெயர் தெரியா நண்பர் தமிழ்மண நிர்வாகிகள் தவறை ஏற்றுகொண்ட பிறகும் திருப்பி திருப்பி அதை சுட்டிக்காட்டி கொண்டே இருந்தால் அதற்க்கு தீர்வாகாது...அதை சுமூகமாய் முடித்து கொள்ளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமக்கு இந்துவும், முஸ்லீமும், கிறித்துவனும் வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

  மனைவிகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று பதிவிடுவது எப்படி? உனது மனைவிக்கு ஓர் எச்சரிக்கை என்று பதிவிடுதல் எப்படி வித்தியாசப் படுகின்றதோ அது போலத்தான் இதுவும்.

  மேலும் தமிழ்மண நிர்வாகிகளுக்கும், மற்ற பதிவர்களுக்கும் சற்று வித்யாசம் காணப்படுதல் வேண்டும். சாதாரணமாய் ஒரு பதிவர் இதைபோன்ற பின்னூட்டம் கொடுப்பதற்கும், ஒரு தலைமை பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகி பின்னூட்டம் கொடுப்பதற்கும் வித்யாசம் காணப்படுகின்றது என்றே நான் நினைக்கின்றேன்.


  அவர்கள் ஒரு தனி குழுவை உருவாக்கி அப்படி செய்கின்றார்கள் என்றே வைத்து கொள்வோம்..அந்த குழுவினில் அவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இல்லையே...நிறைய மாற்று மத நண்பர்களும் அதில் வாசகர்களாக இருக்கின்றார்களே..எல்லோருமே தமிழ்மணம் வாயிலாகவே உருவாக்கப்பட்டவர்கள்தானே. அந்த பெருமை எப்போதுமே தமிழ்மனத்தைதானே சாரும்

  ReplyDelete
 28. /// சீனு said...+1

  சரி! மற்ற மதங்களுக்கு எதிராக எழுதுபவர்களையும் இப்படியே கும்முவீர்களா? ///

  நியாயமான சந்தேகம்தான்...

  மதங்களை மீறியதுதான் மனம். அந்த மனம் நிம்மதி பெறவே இந்த மாதிரியான இணையதளங்களை நாடி வருகின்றோம். அப்படி இருக்கும் போது மீண்டும் ஒரு மதப் பிரச்சினையை தேடி அதை அலசுவானேன். அதை தவிருங்கள் என்றுதான் வேண்டி கொள்கின்றேன். இந்த பிரச்சினை இத்தோடு முடிந்து விட வேண்டும் என்று நான் எல்லா கடவுள்களையும் வேண்டி கேட்டு கொள்கின்றேன். நிறைய பதிவர்கள் தனது கடவுள் பக்தியை இங்கே பிரசங்கப்படுத்தி இருப்பார்கள்..அது அவர்களது விருப்பம். அதை செய்யக்கூடாது என்று தடுப்பதோ அல்லது அந்த மத போதனைகளை மறுப்பதோ தவறு என்பதே எனது விருப்பம். போதனைகளை படித்து விட்டு பிடித்திருந்தால் ஏற்றுகொள்ளலாம், பிடிக்காவிட்டால் ஒதுங்கி செல்லலாம். தாஜ்மகாலை உருவாக்கியதில் பல லட்சம் பேர் இந்துக்கள்..தஞ்சாவூர் கோயிலை கட்டியதில் பல லட்சம் பேர் இசுலாமியர்கள். திருப்பதி கோயிலுக்கு இன்றும் பல லட்சம் கிறித்துவர்கள் நன்கொடை வழங்குகின்றார்கள்.

  நம்மால் ஏன் இந்த தமிழ்மணத்தில் ஒன்று சேர முடியாது...நாமெல்லாம் தமிழர்கள் என்றுதான் அறிமுகப்படுத்தி கொள்ளல் வேண்டும்..நான் இசுலாமிய தமிழன், இந்துத்துவா தமிழன், கிறித்துவ தமிழன் அல்ல, தமிழ்மணம் இன்று பல நாடுகளில் இருந்து பார்க்கப்படுகின்றது. எல்லோரும் எல்லாமும் தெரிந்து கொள்வதற்கு ஒரு சரியான நண்பன், வழிகாட்டி. தவறுகள் செய்வது இயல்பு. தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பது சிறப்பு. மன்னிப்பு கேட்டதும் அதை அளிப்பது பெருந்தன்மை. தமிழ்மணம் அந்த சிறப்பை ஏற்கனவே செய்துவிட்டது. மீண்டும் மீண்டும் அதை ஊதிப் பெரிதாக்கினால் தமிழ்மணத்தின் கோபுர உச்சி புகழ் மங்கி விடும். நான் எல்லோரும் வேண்டும் என்றுதான் இந்த பிரச்சினையில் என்னை ஈடுபடுத்தி கொண்டேன்.

  ReplyDelete
 29. பிரச்னையை முடிவுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் பொதுவாக நீங்கள் எழுதிய பதிவிலும் வாதங்கள் தொடர்வது வேதனை தருகிறது.


  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/

  ReplyDelete
 30. /// தமிழ்வாசி - Prakash said...
  பிரச்னையை முடிவுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் பொதுவாக நீங்கள் எழுதிய பதிவிலும் வாதங்கள் தொடர்வது வேதனை தருகிறது.

  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/ ///

  இதனால்தான் பெரும்பான்மையான நண்பர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி செல்கின்றார்கள். நம் தமிழர்களிடையே இருக்கும் பலகீனத்தில் இதுவும் ஒன்று...நமக்குள் நாம் விட்டு கொடுக்கமாட்டோம்..ஆனால் மற்ற மாநிலத்திற்கு விட்டு கொடுத்து விட்டு இப்போது வேதனை பட்டு கொண்டிருக்கின்றோம். அவன் திருந்த வேண்டும் என்று நினைக்கும் நாம், சற்று விட்டு கொடுத்து செல்வோமே என்று எதிர்பார்ப்பதில்லை.

  இங்கே காட்டும் ஒற்றுமையை ஆந்திரா, கர்நாடக, கேரளா அரசோடு மோதி பார்த்து இருந்தால் நம்மை அசைக்க யாராலும் முடியாது. இது ஒரு சாதாரண பிரச்சினைதான். தமிழர்களின் உணர்வுகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் புதைந்துவிடக் கூடாது என்றுதான் நான் என்னால் ஆன முயற்சியினை எடுத்து இருக்கின்றேன்.

  ReplyDelete
 31. ///ரமணிதரன் அவர்கள் அப்படி ஒரு பின்னூட்டமே கொடுக்கவில்லை என்று நீங்கள் மறுதலிக்கின்றீர்களா? ///

  சிவா ரமனிதரன் என்ன பின்னூட்டம் போட்டார் என் வாசித்திர்கலா எங்கே போட்டார் என வாசித்திர்கலா

  அவர் என்ன விளக்கம் சொல்லி இருக்கிரார் என வாசித்திர்கலா

  அப்படி பின்னூட்டம் போட்டது தப்பு என்கிரீர்கலே அவர் ஏதொ அர்தத்தில போட்டதை இவர்கல் மாற்ரி சொல்கிரார்கலே என அவர் சொல்கிராரே அவர் சொன்னதையும் வாசிங்கலேன். அரைகுரையாக விஸயத்த கேட்டு கொண்டு எடுத்தேன் கவிழ்த்தென் என கருத்து சொல்லகூடாது

  ReplyDelete
 32. முடிஞ்சு போன பிரச்சினை., மறக்க நினைத்தாலும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன இது போன்ற பதிவுகள்.,

  ப்ளீஸ்...உங்கள் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை., மன்னிப்பு கேட்பது அதை ஏற்றுக்கொள்வது என்பதெல்லாம் நீங்கள் சொன்ன அர்த்தம் எனக்குப் புரியவில்லை. இது ஏற்றதாழ்வையே உருவாக்கும்.  மன்னித்தல் என்ற வார்த்தையை ஏறத்தாழ அனைவருமே ஒதுக்கிவிட்டனர். மனிதனின் அடிஆழத்தில் உள்ள அகந்தை இதற்கு சம்மதிக்காததே காரணம்.

  ஆரம்பித்து வைத்துவிட்டு குத்துதே குடையுதே மன்னிப்பு கேள் என்றால் சரியில்லை. இதை அப்படியே கடந்து போகவேண்டியதுதான்.,

  தமிழ்மணத்தை பிடிக்கவில்லை எனில் மின்னஞ்சல் செய்தால் மட்டுமே பதிவை விலக்குவோம். வெறும் ஓட்டுப்பட்டையை எடுப்பது ஓட்டுகளை மட்டுமே தடுக்கும். ஆனால் பதிவு வெளியாகியே தீரும். என்று அவர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கறார்கள்.,

  எனக்குத் தெரிந்து பலபதிவுகளில் ஓட்டுப்பட்டையைத்தான் நீக்கி இருக்கிறார்கள். தமிழ் மணம் தொடர்பான எதிர்கருத்து இடுகைகளே நேற்று சூடான இடுகைகளில் இடம் பெற்று இருந்தது. இதற்கு மட்டும் தமிழ்மணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் போல.,

  தலைப்போடு மட்டும் உடன்படுகிறேன். இது போன்ற இடுகைகளை படித்து படித்து வெறுத்துப்போய்.,

  சிவா., என் கருத்து இந்த இடுகை குறித்து மட்டுமே...:)))))

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 33. எழுத்தாளுமை என்பது....வாசிப்போருக்கு புரியும் படி எழுதுவது.... வித்துவச்செறுக்கை சுமந்துவரும் எழுத்துக்கள் மக்களுக்கு புரியாமல் இருக்கும்பட்சத்தில்....

  எழுதுவதன் நேக்கம் என்ன???....

  இதுவொரு திரந்த ஊடகம்....

  தனிப்பட்ட கருத்துக்களை சொல்லியிருந்தாலும்...பிறர் கண்பார்வைக்கு வருகிறபோது வரும் பிரச்சனைகளை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்....

  அப்படி அல்லாத பட்சத்தில் தனி மெயில் போட்டு வஞ்சம் தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும்....
  அதை பொருப்பான பதவியில் உள்ள ரமனிதரன் புரிந்து கொண்ருக்க வேண்டும்....

  அவருக்கு சப்போர்ட் பண்கிறேன் என்று கண்முடித்தனமாய் கை தட்டினால் தகுமா....சகோதரர்களே....

  தமிழ்மணமே அவரை கண்டித்துவிட்டது....
  பிறகென்ன....

  இங்கு அனைவரும் போராடுவது....
  மதவாதமென்று சூட்டினால் அதுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியுமா என்ன???
  ....
  ஒரு தப்பை சுட்டிக்காட்டும் நல்ல முயற்சியே. இது....
  ஒரு தப்பை கண்டிக்காமல் விடும் பட்சத்தில்
  ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொருத்தரால் இழிவாகப் பேசப்படும் சூழ்நிலை இயல்பாகவே தோன்ற அடித்தளமாகிவிடும்....

  இதைத்தடுக்க நினைத்த எங்களுக்கு கிடைக்கும் வசைப் பேச்சுக்களைப் பார்த்தீர்களா....

  மதங்களைத்தாண்டிய....
  மனித மனங்களை வளர்க்கப்பாருங்கள்....
  தமிழ்பேசும் மக்களாய் ஒன்றினைவோம்....

  ReplyDelete
 34. // //பன்னிக்குட்டி ராமசாமி எழுதிய பயோடேட்டா இத்தனை பிரச்சினைக்குள்ளாகும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்... அதில் அவர் மிகவும் ஜாலியாக பொழுதை கழிக்கும் ஒரு மனிதர் என்றே நான் நம்புகின்றேன். சிலர் மிக சீரியஸாக பதிவிடுவார்கள், சிலர் ஜாலியாய் பதிவிடுவார்கள். அப்படி நினைத்து தான் அவர் அந்த பயோடேட்டாவை தயாரித்திருக்க வேண்டும். அதை வெளியிடுவதற்கு அவர் எத்துணை சிந்தித்திருக்க வேண்டும். ஒரு மனிதனின் செய்கையை வேடிக்கை பார்க்கும் போது சிரிக்க வைத்தல் என்பது வேறு..அதையே தனது எழுத்தால், தனது பதிவில் ஒவ்வொரு நாளும் சிரிக்க வைப்பது என்பது வேறு.// //

  நகச்சுவை என்பது வேறு, அடுத்தவர் மனதை, அதுவும் முன்பின் தெரியாதவர் மனதை காயப்படுத்துவது என்பது வேறு (நான் தமிழ்மணம் விவகாரத்தை குறிப்பிடவில்லை). கேலியும் கிண்டலுமாக, பலநேரங்களில் ஆபாசமான வார்த்தைகளையும் மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி சிலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.

  தனது முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?

  இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு": http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

  தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள்.

  ReplyDelete
 35. arul onga friend dondo patti sollareengalaa?

  ReplyDelete
 36. /// Anonymous said..
  சிவா ரமனிதரன் என்ன பின்னூட்டம் போட்டார் என் வாசித்திர்கலா எங்கே போட்டார் என வாசித்திர்கலா

  அவர் என்ன விளக்கம் சொல்லி இருக்கிரார் என வாசித்திர்கலா

  அப்படி பின்னூட்டம் போட்டது தப்பு என்கிரீர்கலே அவர் ஏதொ அர்தத்தில போட்டதை இவர்கல் மாற்ரி சொல்கிரார்கலே என அவர் சொல்கிராரே அவர் சொன்னதையும் வாசிங்கலேன். அரைகுரையாக விஸயத்த கேட்டு கொண்டு எடுத்தேன் கவிழ்த்தென் என கருத்து சொல்லகூடாது///

  பெயர் தெரிவிக்கா நண்பரே...

  அவர் என்ன வாக்கியம் சொன்னார் தெரியுமா என்று கேட்டு விட்டு அதற்க்கு அடுத்த வரியிலேயே அவர் ஏதோ அர்த்தத்தில் போட்டார் என்று ஒப்புக்கொள்கிண்றீர்கள். அது போதும். அடுத்தது அவர் தெளிவாக போட்டிருந்தால் நிச்சயம் தமிழ்மணம் வருத்தம் தெரிவித்து இருக்காது என்றே நான் நம்புகின்றேன். நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க வில்லை. ஒரு நல்ல கடைக்கு சின்ன வாடிக்கையாளரும் முக்கியம், பெரிய வாடிக்கையாளரும் முக்கியம்..அதை போலத்தான் இந்த தளத்திற்கு எல்லா பதிவர்களும், நண்பர்களும் முக்கியம்..ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதை பலப்படுத்தினால் நிச்சயம் தமிழ்மணம் மேலும் சிறக்கும் என்பதே எனது எண்ணம்.

  ReplyDelete
 37. /// சுவனப்பிரியன் said.

  சிறந்த பகிர்வு! ///

  நன்றி! நான் எடுக்கும் இந்த முயற்சி தவறு எனில் மன்னிக்கவும்

  ReplyDelete
 38. /// நிகழ்காலத்தில்... said..

  முடிஞ்சு போன பிரச்சினை., மறக்க நினைத்தாலும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன இது போன்ற பதிவுகள்.,

  சிவா., என் கருத்து இந்த இடுகை குறித்து மட்டுமே...:)))))

  வாழ்த்துகள்.. ///

  நன்றி தோழரே...

  நான் இதை மீண்டும் மீண்டும் கிளற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கவில்லை..இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று எண்ணித்தான் இந்த பதிவினை வெளியிட்டேன்...உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றி...

  ReplyDelete
 39. /// Anonymous said..

  மதங்களைத்தாண்டிய....
  மனித மனங்களை வளர்க்கப்பாருங்கள்....
  தமிழ்பேசும் மக்களாய் ஒன்றினைவோம்.... ///

  புரிதலுக்கும், தெளிவான பகிர்விர்க்கும் நன்றி..

  ReplyDelete
 40. /// அருள் said..
  தமிழ் மணத்திற்கு பயோடேட்டா வெளியிட்ட வகையில் - தொடர் விளைவுகள் நிகழ்ந்துள்ளன. எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற அவர்களது தலைப்பை காப்பாற்றி விட்டார்கள். ///

  நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை..ஒரு பதிவினை வெளியிடும்போது அவர்களுக்கு அந்த பதிவினைப் பற்றிய நிறை குறைகளை சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வர வேண்டும்..தவறு என்று சொல்லும் பட்சத்தில் திருத்தி கொள்ள அல்லது மன்னிப்பு கேட்கும் மனோபாவம் வளர வேண்டும், சரி என்று பாராட்டும் போது ஏற்றுக்கொள்ளும் மனம், தவறு என்கின்ற போது ஏற்று கொள்ள மறுக்கிறது. அது தமிழ்மண நிர்வாகிக்கும் பொருந்தி விட்டது என்றே நம்புகின்றேன்.

  ReplyDelete
 41. ///ஒரு பதிவினை வெளியிடும்போது அவர்களுக்கு அந்த பதிவினைப் பற்றிய நிறை குறைகளை சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வர வேண்டும்///


  ஒரு விடயத்தை பத்தி எழுதும்பொது அத பத்தி எவ்வளோ தெரிஞ்சிகிட்டு எழுதரோமனு உனர்ந்துகிட்டு எழுதனும். நீங்க அதுபோல தோனல. மொதலுல அந்தாளு தான் என்ன சொன்னேன்னு வெளக்கிருக்காரே போயி வாசிச்சி பாத்துட்டு பதிவ நீங்க போட்டிருக்க வேனாமா? ஒங்க இஷ்டபடி எதேஷ்டமா ஆட்வைஸ் மட்டும் பன்னிக்கிட்டிருக்கீங்க
  http://wandererwaves.blogspot.com/2011/10/blog-post_5638.html

  ReplyDelete
 42. //நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை..ஒரு பதிவினை வெளியிடும்போது அவர்களுக்கு அந்த பதிவினைப் பற்றிய நிறை குறைகளை சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் வர வேண்டும்..தவறு என்று சொல்லும் பட்சத்தில் திருத்தி கொள்ள அல்லது மன்னிப்பு கேட்கும் மனோபாவம் வளர வேண்டும்//
  இரண்டு தரப்பிற்கும் பொருந்தும் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும்

  ReplyDelete
 43. //காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும். //
  நாளைக்கு தமிழில் ஒரு பதிவும் போடமுடியாது எல்லா வார்த்தைகளும் எங்கள் மதம் சார்ந்து என்று இணையத்தை முடக்குவார்கள். அன்று உங்களுக்கு புரியும்

  ReplyDelete
 44. Anonymous said..
  மதங்களைத்தாண்டிய....
  மனித மனங்களை வளர்க்கப்பாருங்கள்....
  தமிழ்பேசும் மக்களாய் ஒன்றினைவோம்..

  சிவா said...
  புரிதலுக்கும், தெளிவான பகிர்விர்க்கும் நன்றி..

  Anonymous2 நான் சொல்வது என்னவென்றால்
  உங்கள் புரிதல்கள் மிக சரியானவை. ஆனால் சிவா மதவாதிகளுக்கு சப்பைகட்டு கட்டி இந்த கட்டுரை எழுதியுள்ளார்.

  ReplyDelete
 45. //@DrPKandaswamyPhD
  இது உலக முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தார்மீக நெறிமுறையாகும். ஆனால் தமிழ்மணம் "நாங்கள் இப்படித்தான் இருப்போம். எங்களைப் பிடிக்காதவர்கள் விலகிச் செல்லுங்கள்" என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்களே. ஆகவே அந்தக் குழுவில் ஒருவருக்கும் பொது நிறுவனம் நடத்தும் தகுதி இல்லை என்றுதான் முடிவு எடுக்கவேண்டியிருக்கிறது.//
  முனைவர் கந்தசாமி அய்யா,
  பெயரிலி இட்ட பின்னூட்டங்கள் அநாகரீகமானவை என்று நீங்கள் வேறு சில இடங்களிலும் நீங்கள் எழுதியதைப் படித்ததாக நினைவு. அதற்கு தமிழ்மணம் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதனால் உங்கள் கூற்றுப்படி தமிழ்மணம் குழுவில் இருக்கும் ஒருவருக்கும் தகுதி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். இதைச் சொல்வதற்கான உங்கள் தகுதியைப் பார்க்கலாமா?

  2009 மே மாதம் நீங்கள் இட்ட ஒரு பதிவு இங்கே . என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று படிக்கலாமா?

  “ஆக மொத்தம் தேவ.......யாக்களுக்கு இந்த தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கும்.” என்று ஜெயலலிதாவையோ, அல்லது அவரை ஆதரித்த இராமதாசையோ இப்படி “தேவ.......யாக்கள்” குறிப்பிட்டிருந்தீர்கள். என்னவொரு நாகரீகம் உங்களுக்கு என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை இதற்கும் “அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடக்கும். எனக்கும் அதனால் லாபம் உண்டு. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நான் வரவேற்கிறேன்.
  இது சுயநலம் அல்லவா என்று கேட்கலாம். எனக்கு உரிமையானதைப் பெறுவது எப்படி சுயநலமாகும்? அடுத்தவனை ஏமாற்றி தன்னுடைய காரியத்தை செய்வதுதான் சுயநலம் என்று நான் நினைக்கிறேன்”
  என்பதுபோல் ஒரு தருக்கம் வைத்திருப்பீர்களோ என்னவோ!!

  நன்றி - சொ.சங்கரபாண்டி

  ReplyDelete
 46. ***இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம்.***

  மொதல்ல உங்க தலைப்பை சரியாக வைத்து இருக்கலாம். அட் லீஸ்ட் ஒரு கேள்விக்குறி போட்டு இருக்கலாம். இவ்வளவு கேவலமாக (முற்றிலும் எதிர்மறையான) தலைப்பு வைக்கிற- தரமோ தகுதியோ இல்லாத உங்கள் ஆதரவு நல்லவேளை தமிழ்மணத்திற்கு இல்லை!

  ReplyDelete
 47. Siva: Whatever you have done (misleading title) is a CRIME. Do you know that? I don't think you care about anything!

  ReplyDelete
 48. அப்ப, முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பிரச்சினையா? வேறயாரையும் பத்தி ஒண்ணுமே சொல்லலையா?

  //
  டெரர்கும்மியா இருந்தாலும் அடுத்தபக்கம் மகளோட போட்டோவைப் போட்டு நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனேயெனப் பொங்கிப் பதிவு போட்டிருக்கானே என்ற இக்குணி இரக்கமேதான். இப்போ உப்பு தின்றிருக்கிறதாலே சொல்கிறேன். கழட்டிடடுமா?

  நானும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் உங்களுக்குப் பதிலெழுதிவிட்டு வந்தால், உமக்கு பயடேட்டா சூப்பரா மட்டுமிருக்காது; சூப்புறமாதிரியுமே இருக்கும்.....

  ஏங்கவண்டிக்காரன் மகனுல, முரட்டுக்காளையில ஜெய்சங்கரோட ஏதாச்சும் சவால்விட்டுக்கிட்டிருற சீன் பாக்கறப்ப உங்க அம்மா உங்கள பெத்தாங்களா?
  //

  இந்த முத்துக்களை எல்லாம் உதிர்த்தது யார் ராசா?, பொறுப்புமிக்க ஒரு திரட்டியின் நிர்வாகி இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளால் சக பதிவர்களை திட்டலாமா?

  ReplyDelete
 49. சஹா: எல்லா எடத்திலேயும் இதே பின்னூட்டத்தையே (தலையும் இல்லாம வாலும் இல்லாம) எடுத்துப்போயி பிரசுரிக்கிறீங்க??? :)

  ReplyDelete
 50. இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம். ஆனால் முகம் தெரியாத எத்தனையோ இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல பதிவர்களுக்கு நிச்சயம் இது கடுமையான வேதனையை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை

  loosaadaa neeyi

  ReplyDelete
 51. /// Mahen said... Best Blogger Tips

  இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம். ஆனால் முகம் தெரியாத எத்தனையோ இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல பதிவர்களுக்கு நிச்சயம் இது கடுமையான வேதனையை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை

  loosaadaa neeyi///
  நீங்கள் அறிவாளி என்றே ஒப்புக்கொள்கின்றேன், இந்த பிரச்சனைகளை இப்படியே இழுத்து கொண்டு செல்ல வேண்டுமா?
  அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். இப்படிக்கு,
  தமிழ்மணம் நிர்வாகிகள்
  தமிழ் சசி
  செல்வராசு
  சொ. சங்கரபாண்டி
  இரமணீதரன்
  இது தமிழ்மணத்தில் இருந்து வெளியிட்ட கருத்து. இதைத்தான் நான் கவனத்தில் எடுத்து கொண்டு இனிமேல் இந்த பிரச்சினை வராமல் சுமூகமாய் முடித்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

  ரமணிதரனே இதற்க்கு ஒப்புதல் அளித்ததாகத் தான் அர்த்தம். அதன் பிறகு எதற்கு வீண் தர்க்கம். எனக்கு அனுப்பிய கருத்து, எனக்கு அனுப்பியதல்ல, தமிழ்மண நிர்வாகிகளுக்கு அனுப்பியதாகவே கருதுகின்றேன். nanri...

  ReplyDelete
 52. /// வருண் said..

  ***இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம்.***
  மொதல்ல உங்க தலைப்பை சரியாக வைத்து இருக்கலாம். அட் லீஸ்ட் ஒரு கேள்விக்குறி போட்டு இருக்கலாம். இவ்வளவு கேவலமாக (முற்றிலும் எதிர்மறையான) தலைப்பு வைக்கிற- தரமோ தகுதியோ இல்லாத உங்கள் ஆதரவு நல்லவேளை தமிழ்மணத்திற்கு இல்லை! ///

  உங்கள் ஆலோசனைக்கு நன்றி...முற்றிலும் எதிர்மறையான தலைப்பு அல்ல அது...உங்கள் பொறாமை உங்கள் வார்த்தைகளில் தெரிகின்றது. நீங்களும் முயற்சியுங்கள்...வெற்றி கிடைக்கும்..

  ReplyDelete
 53. /// வருண் said..

  Siva: Whatever you have done (misleading title) is a CRIME. Do you know that? I don't think you care about anything!///

  நான் தலைப்பு அவ்வாறாக வைத்தது குற்றம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். எதை வைத்து அப்படி சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை..ஆனால் அது விதிமுறைகள் மீறியது என்றால் ஏன் தமிழ்மண நிர்வாகிகள் எனக்கு கண்டனமோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. நீங்கள் தமிழ்மணத்தை எப்படி நினைக்கின்றீர்கள் என்று தெரியாது? ஆனால் நான் இந்த தமிழ்மணம் மேலும், மேலும் உயர்ந்து, ஜாதி, மதச் சார்பற்ற ஒரு தளமாக வலம் வர வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த தமிழ்மணம் மூலமாய் பல வெவ்வேறு இடங்களில் வசிக்கும் பல மதத்தினர் ஒன்று கூடுகின்றார்கள் என்றால் அது மிகப் பெரிய விசயமே..அது மட்டுமல்லாமல் பயோடேட்டா என்ற தலையங்கம் தமிழ்மணத்திற்கு எதிராக இருப்பதாக தோன்றினால் அதை நிர்வாகிகள் தடை செய்திருக்கலாம்..அது சம்பந்தப்பட்ட விவரங்களையும் அளித்திருக்கலாம். இதை விடுத்து தமிழ்மண நிர்வாகி என்று போட்டு மறுப்பு பின்னூட்டம் கொடுத்திருக்க வேண்டாம் என்பதே எனது தாழ்மையான கருத்து..

  ReplyDelete
 54. /// smart said..
  இரண்டு தரப்பிற்கும் பொருந்தும் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் ///

  நிச்சயமாக தோழரே...இரண்டு தரப்பு மட்டுமல்ல எல்லா தரப்பிற்கும் பொருந்தும், இன்று நான் பேசுவது அதிகப்பிரசங்கித்தனம் என்று தோன்றினால் எல்லோரும் என்னை மன்னியுங்கள்....முகம் தெரியாமல் எத்தனயோ கருத்து பரிமாற்றங்கள் நிகழ்கின்றது. இந்த நட்பு நீடிக்க வேண்டும் நான் விரும்புகின்றேன்.

  ReplyDelete
 55. அவரின் சொந்தக் கருத்துகளுக்கும், தமிழ்மணம் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவாகக்கூறி இக்குழப்பம் நிகழ்ந்ததற்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
  itukku arttham

  இப்படி எழுதி இருந்தால் ஒருவேளை ரமணிதரன் வேண்டுமானால் சந்தோசப்படலாம். ஆனால் முகம் தெரியாத எத்தனையோ இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல பதிவர்களுக்கு நிச்சயம் இது கடுமையான வேதனையை தரும் என்பதில் துளியும் ஐயமில்லை

  ituvaa?

  loosu maatari peesaata. tamilmanam elutinata mutra vaasisiyaa? half boil eggu maatri peesurayee

  ReplyDelete
 56. /// Anonymous said..

  உங்கள் புரிதல்கள் மிக சரியானவை. ஆனால் சிவா மதவாதிகளுக்கு சப்பைகட்டு கட்டி இந்த கட்டுரை எழுதியுள்ளார். ///

  நான் எந்த மதவாதிகளுக்கும் சப்பை கட்டுபவன் அல்ல...நான் கடவுளே இல்லை என்று நினைப்பவன்..நான் இந்த பிரச்சினையை முடிக்க நினைக்கின்றேன், அதுதான் பிரச்சினை..ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை நான் குலைக்க மாட்டேன்..அது அவர்களது விருப்பம்..

  சரி...அவர்கள் மதவாதிகள் என்று சொல்வதாக வைத்து கொள்வோம்...இன்று தினமும் அனைத்து முக்கிய தொலைக்காட்சிகளிலும் காலையில் இந்து, முஸ்லிம், கிருத்துவ மதபோதனைகள். ஆலய தரிசனங்கள் ஒலி, ஒளி பரப்பு செய்யப்படுகின்றது..உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீங்கள் வேறு சானலுக்கு மாறுகின்றீர்கள் அல்லவா...அது போலத்தான் இதுவும், உங்களுக்கு அந்த பதிவு பிடிக்கவில்லை எனில் அதை விட்டு அடுத்த பதிவுகளுக்கு செல்லலாமே...ஏன் அதை முழுக்க படித்து அதில் குறை கண்டுபிடித்து சுட்டி போட வேண்டும். தமிழ்மணத்தில் ஒருநாளைக்கு சராசரியாக 401 இடுகைகள் இடப்படுகின்றதாம்...எல்லோருமே ஒரு குறிப்பிட்ட பதிவுகளை படித்து விட்டு செல்கையில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றது. சமீபத்தில் கூட ஒரு பதிவர் எங்கள் பதிவுகளை எல்லாம் யாரும் சீண்டி கூட பார்ப்பதில்லை என்று சொல்லி இருந்தார்.

  ReplyDelete
 57. ///Mahen said ituvaa?

  loosu maatari peesaata. tamilmanam elutinata mutra vaasisiyaa? half boil eggu maatri peesurayee ///

  நான் அவர்கள் பதிவினில் இருந்து இரண்டு வரிகளை எடுத்து போட்டுகொண்டு செய்தி அனுப்பினேன்..இதே தவறைத்தான் அன்று ரமணிதரன் அவர்களும் செய்துவிட்டார்கள். பதிவர் அனுப்பிய இரண்டு வாக்கியங்களை எடுத்து ரமணிதரன் அதற்க்கு பின்னூட்டம் வழங்கினார். அதுதான் பிரச்சினைகளுக்கு விதையானது. அதே செயலைத்தான் நானும் செய்திருக்கின்றேன். நான் என் மனதில் இருப்பதை எழுதுகின்றேன்..அது உங்கள் பார்வையில் வேறு மாதிரியாக திரும்புகின்றது. அன்று அந்த பதிவர் எழுதியது ரமணிதரன் பார்வைக்கு வேறு விதமாய் புரிந்து வேறு விதமாய் கருத்து தெரிவித்து விட்டார். நீங்கள் சொன்னதை நான் தவறாக புரிந்துகொண்டேன் என்று விமர்சிக்கின்றீர்கள்..ரமணிதரன் சொன்னது தவறு என்று அவர்கள் வாதிடுகின்றார்கள். இதில் யார் பக்கம் தவறு என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான் அரைகுறையாக புரிந்து கொண்ட ஹாப் பாயில் முட்டை என்று சொல்லி விட்டீர்கள்..எல்லோரையும் அப்படித்தான் சொல்கின்றீர்களா?

  ReplyDelete
 58. நான் அரைகுறையாக புரிந்து கொண்ட ஹாப் பாயில் முட்டை என்று சொல்லி விட்டீர்கள்..எல்லோரையும் அப்படித்தான் சொல்கின்றீர்களா?

  illea half boil egga mattumea solrean

  ReplyDelete
 59. @வருண்

  முஸ்லிம் பதிவர்களுக்கு மட்டும் தான் தமிழ்மணத்துடன் பிரச்சினை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்த ஒருசிலர் முயலுகிறார்கள். பிரச்சினைக்கு காரணமான அதே terrorkummi பதிவில் பெயரிலி என்கிற திரு.இரமணிதரன் அவர்கள் தமிழ்மண நிர்வாகி என்கிற அறிமுகத்துடன் கொடுத்த பின்னுட்டங்களிளிருந்துதான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

  ReplyDelete
 60. ***நான் தலைப்பு அவ்வாறாக வைத்தது குற்றம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். எதை வைத்து அப்படி சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை..ஆனால் அது விதிமுறைகள் மீறியது என்றால் ஏன் தமிழ்மண நிர்வாகிகள் எனக்கு கண்டனமோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. நீங்கள் தமிழ்மணத்தை எப்படி நினைக்கின்றீர்கள் என்று தெரியாது? ***

  தமிழ்மண நிர்வாகிகள் ஒவ்வொரு பதிவிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக், கருத்துப்பிழை எல்லாம் பார்க்கமாட்டாங்க. அவங்களுக்கு வேற வேலைகள் இருக்கு பாருங்க. நீங்க பண்ணுகிற முட்டாள் மற்ரும் புத்திசாலித்தனத்திற்கு நீங்கள்தான் பொறுப்புனு தமிழமணத்தில் தெளிவாக டிஸ்க்ளைமெர் சொல்லியுள்ளது.

  என்னவோ சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்.
  நீங்க எனக்குப் பொறாமை, புரியலைனு சொல்லி காமெடி பண்ணுறீங்க. அப்படியே வாழுங்கள் உங்க உலகத்தில்! :)

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...