பங்காளிங்க..

Thursday, January 19, 2012

நாங்க என்ன பாவம் செஞ்சோம்????

நான் கடந்த ஒரு வார காலமாய் பதிவிட முடியவில்லை. அதற்க்கு காரணம் எனக்கு திடீரென்று உடல்நலம் சரி இல்லாமல் போனதுதான். அந்த ஒரு வார காலத்தில் நான் மருத்துவமனையில் சென்று பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை பதிவாகவும் இருக்க வேண்டும் என்பதனாலே எனது நண்பர்களை கலந்தாலோசித்து இதனை வெளியிடுகின்றேன்.

கடந்த வாரம் முதல் எனக்கு தொண்டை கர கரப்பாய் இருந்தது. பின்னர் அன்று  காலையில் இருந்தே என்னால் எதையும் முழுங்க முடியவில்லை. உடனே அருகில் இருக்கும் 24 மணி நேர மருத்துவமனைக்கு சென்றோம். அவர் உடனே ஒரு மாத்திரை எழுதி கொடுத்து சாப்பிட சொன்னார். சாப்பிட்டு பார்த்தேன். அதை சாப்பிட்ட பிறகு ஜுரம் அதிகரித்தது. கை கால்கள் நடு நடுங்கியது. எதற்கும் அசராத என் அப்பாவே பயந்து அழத் தொடங்கி விட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு என்னால் தண்ணீர் கூட முழுங்க முடியவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் என்னால் என் முக வாய்ப் பகுதியை முழுமையாய் திறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னால் ஒரு சின்ன கரண்டியின் பின் பகுதி மட்டுமே உள்ளே செல்லும் அளவிற்குத்தான் வாய் திறக்க முடிந்தது. உடனே அப்பா மருந்து சீட்டை எடுத்து கொண்டு மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். உடனே அவர், உங்க பையனுக்கு அந்த மருந்து ஒத்து கொள்ளவில்லை போலிருக்கு, நீங்க என்ன பண்ணுங்க, இந்த மாத்திரையை ட்ரை பண்ணுங்க என்று வேறு ஒரு மருந்தினை எழுதி கொடுத்தார். அதையும் என் அப்பா வாங்கி வந்து மதிய உணவிற்கு பிறகு கொடுத்தார். அவ்வளவுதான் உடல் தூக்கி தூக்கி போட்டது. யாருடைய மூச்சு காற்று பட்டால் கூட எனக்கு குளிர் காற்று அடிப்பது போன்ற உணர்வு. சாப்பிட்டது என்னவோ ரசம் சாதம். (மருத்துவரின் அறிவுரைப் படி) ஆனால் அதன் பின்னர் பேதி, வாந்தி நிற்கவே இல்லை. மாலையில் உடலில் தெம்பே இல்லாமல் சோர்ந்து போனேன். 

மீண்டும் மருத்துவரை அணுகியபோது ஒருவேளை அவருக்கு தைபாய்டா இருக்கலாம் என்று சொல்லிவிட்டு திருப்பியும் வேறு சில மருந்துகள் வாங்க சொன்னார். அதுவும் ஏற்று கொள்ளவில்லை. அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்து கொண்டுதான் இருந்தேன். காலை விடிந்ததும் மருத்துவரை சென்று பார்த்தோம். அவர் ஒருவேளை  ஜான்டிசா கூட இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். 

அப்போது பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் வந்து அந்த டாக்டர் உங்களை வச்சு பாடம் படிக்கிற மாதிரி இருக்கு, அவர் என்னெல்லாம் டெஸ்ட் எடுக்க சொன்னாரு? ஸ்கேன் எடுக்க சொன்னாரா? யூரின் டெஸ்ட் எடுத்தீங்களா? பிளட் டெஸ்ட் எடுத்தீங்களா? என்று கேட்கவும் அதை பற்றி அவர் எதுவுமே கேட்கவில்லையே என்று வீட்டினில் அனைவரும் யோசித்தார்கள். வேறு ஏதாவது பெரிய மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். அந்த மருத்துவர் கொடுத்த மாத்திரை சீட்டுகள் அனைத்தையும் எடுத்து கொண்டு சற்று தொலைவில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே டூட்டி டாக்டர் மட்டுமே இருந்தார். அவர் மருந்து சீட்டுக்களை பார்த்து விட்டு பின்னர் என்னை வாய் திறக்க சொன்னார். முடிந்த வரை திறந்து காண்பித்தேன். அவர் உடனே என் அம்மா, அப்பாவிடம், தம்பி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, உடனே அட்மிட் பண்ணிடுங்க. அவருக்கு த்ரோட் கான்செர் உருவாக்கி இருக்கு. இன்னும் ஒரு நாள் நீடிச்சா கூட அவரோட உயிருக்கு ஆபத்து என்றார். அவ்வளவுதான் என் அம்மா அழுதே விட்டார்கள். என் அப்பாவும் தான். எனக்கு அந்த பக்கத்து வீட்டு அங்கிள் சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பேப்பரை எடுத்து சார் நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட் டுமே எடுக்கலை, எதை வைச்சு நீங்க எனக்கு த்ரோட் கான்செர் நு சொல்றீங்க நு கேட்டதும், நீ டாக்டரா, நான் டாக்டரா என்று கேட்டு விட்டு, என்ன வெயிட் பண்றீங்க, உடனே அட்மிட் பண்ணுங்க,. டெபொசிட் பணம் 3000 கட்டிடுங்க நு சொல்லவும் நான் என் அம்மாவிடம், அம்மா அண்ணன்கிட்டே கேட்டுகிட்டு சொல்லலாம், அவசரப்படாதீங்க நு எழுதி காட்டவும், என் அம்மா புரிந்து கொண்டு, எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை, என் பெரிய பையன்தான் பணம் கட்டனும், நாளைக்கு காலையிலே வந்து பணம் கட்டிட்டு அட்மிட் பண்ணிக்கிறோம்னு சொன்னதும், அவர் சரிம்மா, நீயும் உன் புருசனும் போயிட்டு நாளைக்கு காலையிலே பணத்தோட வந்திடுங்க..பேசண்ட அட்மிட் பண்ணிடுங்க நு சொல்லவும் சரின்னு சொல்லிட்டு நாங்க வெளியே சத்தம் போடாம ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்திட்டோம், அதுக்கப்புறம் என் நண்பர்களின் செல் போன் நம்பரை கொடுத்து என் அம்மாவை பேச சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றோம்.

அப்போது நேரம் கிட்டத்தட்ட இரவு 9 ஆகி விட்டது. பனிக்காற்று வேறு பாடாய் படுத்தியது. உடல் 106 டிகிரி என்று காட்டியது. குளிரில் உடல் நடு நடுங்கியது. மரண பயம் என்னை ஆட்கொண்டு விட்டது. அவ்வளவுதான் என் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது என்று நினைத்தேன். என் அம்மா அழுது கொண்டிருந்தார்கள். நண்பர்கள் என் அம்மா, அப்பாவிற்கு தேநீர் வாங்கி கொடுத்து விட்டு, என்னை அந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்தார்கள். அந்த முக்கிய தலைமை மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு நத்திங் டு வொர்ரி அம்மா, பயப்படாதீங்க, என்று ஆறுதல் சொன்னார். கடந்த இரண்டு நாட்களில் பயப்பட எதுவுமே இல்லை என்ற வார்த்தையை முதல் முதலாக கேட்டனர் என் பெற்றோர்.

அடுத்ததாய் அவர் கேட்டது இந்த தொண்டை கர, கரப்பு வருவதற்கு முன்னால் நீ என்ன சாப்பிட்டாய்? (இதுவரை இரண்டு டாக்டருமே கேட்காத கேள்வி, எனக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது) கொஞ்சம் யோசிச்சு சொல்லு என்று கேட்டார். நான் வெகு நேரம் யோசித்து லெமன் ஜூஸ் என்று சொன்னேன். நல்ல விசயம்தான், லெமன் ஜூஸ் ஐஸ் போட்டு குடிச்சியா என்று கேட்டார். நான் வேகமாய் ஆமாம் என்று தலையாட்டினேன். உடனே அவர் பிடித்து கொண்டார், லெமன் ஒகே, ஆனால் நீ போட்டு குடிச்ச ஐஸ் எந்த தண்ணியில் தயாராகுது தெரியுமா? அந்த ஐஸ் கட்டி போடறப்ப பார்த்தியா, வெள்ளையா இருந்துச்சா? கருப்பா இருந்துச்சா? என்று கேட்டார். கொஞ்சம் கருப்பாய் இருந்தது, சாக்கு பையினில் இருந்து எடுத்தான் என்று சொல்லவும், பரவாயில்லை, இனிமே ஐஸ் போடாமலே குடி, சரியா என்று சொல்லிவிட்டு, என் அம்மாவிடம் ஒரு ஐஸ் பாக்கினை கொடுத்து அம்மா, நீங்க இந்த பையனுக்கு நெற்றியிலே, கை அக்குலே, நெஞ்சிலே எல்லாம் வச்சு வச்சு எடுங்க, அவரோட உடம்பு சூடு தணியனும் என்று சொல்லிவிட்டு என் நண்பர்களையும், என் அப்பாவையும் தனியே வெளியே அழைத்து சென்று விட்டார். 

அதன் பிறகு என் அப்பாவிடம் பையனுக்கு யூரின், பிளட் டெஸ்ட் மற்றும் த்ரோட் ஸ்கேன் எடுத்து பார்த்திடுவோம், இது ஒரு சேப்டிகாக, அப்போதான் நான் எந்த இடத்துல இருந்து ஸ்டார்ட் பண்றதுன்னு முடிவு பண்ண முடியும், என்று சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார். பையன் ரொம்ப வீக்கா இருக்கான், ட்ரிப்ஸ் ஏத்துவோம் னு சொல்லவும் என் அப்பாவின் முகத்தினில் அப்போதுதான் நான் சற்று சின்ன புன்னகையை பார்த்தேன். மறுநாள் டாக்டரின் முதல் வேலை எனது முகவாயினை திறக்கும் முயற்சியில் இருந்தார். தம்பிக்கு சூவிங்கம் பிடிக்குமா என்று கேட்டு விட்டு வாயினில் ஒரு சூவிங்கத்தை போட்டு விட்டு சென்றார். மெல்ல அதை மென்னு என்று சொல்ல இப்போது அதன் பலனாக பழையபடி வாயினை நன்கு திறந்து மூட முடிகின்றது.

எல்லா டெஸ்டும் எடுத்த பிறகு நான் குடித்த அந்த லெமன் ஜூஸ் மற்றும் ஐஸ் இன் காரணமாகவே இந்த கொடூர தாக்குதல் என்று புரிந்து கொண்டேன். இப்போது நான் பழையபடி தெம்பாகவே இருக்கின்றேன்.

ஒருவேளை நான் அந்த 24 மணிநேர மருத்துவமனை அல்லது அந்த பெரிய தனியார் மருத்துவமனைக்கு சென்று இருந்தால், அட்மிட் ஆகி இருந்தால் இன்று எனது நிலைமை என்னவாகி இருக்கும். நான் என் உயிரை கூட இழந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல், நீங்கள் அனைவருமே ஒரு சுமாரான பிளாக்கரை இழந்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும்.

மேலும் ஒருவேளை நான் உயிர் போகும் நிலையில் இருப்பதாகவே வைத்து கொள்வோம், அதை சொல்வதற்கு ஒரு நாகரிகம் இருக்கின்றதே, சொல்லும் விதமும் இருக்கின்றதே. அதை எல்லாம் விடுத்து நோயாளியிடமே நேரிடையாக நீ செத்து போயிடுவே என்று சொன்ன டாக்டர் எங்கே? தம்பி இதெல்லாம் சாதாரணமான ஒன்று, பயப்படத்தேவை இல்லை என்று சொன்ன டாக்டர் எங்கே? பெற்ற தாயிடம் உனது மகன் செத்து விடுவான் என்று சொன்னால் அவள் என்ன பாடு படுவாள்? இது ஏன் இவர்களுக்கு உரைக்கவில்லை.

கிராமங்களில் இதனை வாய் அம்மக்கட்டு என்று சொல்வார்களாம் ஒரு சிலர் இதை விளையாட்டு அம்மை என்றும் சொல்வார்களாம். இதையும் எனக்கு வாழ்வளித்த அந்த மருத்துவர்தான் சொன்னார். மேலும் அவர் கூறிய ஒரு சிலவற்றை உங்களுக்கு சொல்ல விருப்படுகின்றேன்.
  1. கடையினில் கூடுமானவரை ஐஸ் போடாமல் ஜூஸ் குடிக்க வேண்டுமாம்.
  2. பழங்கள் அழுகி இருக்கின்றதா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டுமாம்.
  3. அப்படி ஐஸ் வேண்டுமென்றால் ஐஸ் வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்து அதில் குடித்து கொண்டால் எதிர்காலத்தில் 40000  வரை செலவு செய்ய வேண்டி இருக்காது.
  4. இயற்கை பானங்களான இளநி, பதநீர், சாத்துக்குடி சாறு, கரும்பு, போன்றவற்றை குளிர்ந்த நீர் அல்லது பனிக்கட்டி இல்லாமல் குடிக்க வேண்டுமாம்.
  5. தெருவில் விற்கும் மோர், தயிர், ரஸ்னா போன்றவற்றையும் அறவே தவிர்த்தல் நல்லது.
  6. சீப்பா இருக்கேன்னு விற்கும் பாக்கெட் குளிர்பானங்களை மறப்பது மிக நல்லது.
  7. பழங்களை நேரிடையாக உண்ண வேண்டுமாம்.
  8. நடிகர், நடிகைகள் எப்போது பார்த்தாலும் குளிர்பான விளம்பரத்திற்கு வருகின்றார்கள், ஆனால் அவர்கள் குடிப்பது எப்போது ஆப்பிள், கிரேப், பைன்ஆப்பிள், சப்போட்டா பழ ஜூஸ்களை மட்டுமே.
மீண்டும் நாளை காலை எனக்கு தவறான சிகிச்சை கொடுத்த, கொடுக்க முற்பட்டவர்களை நான் சந்திக்க விருப்பபடுகின்றேன். நான் அவர்களை சந்திக்கலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா? உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.

10 comments:

  1. ஒரு லெமன் ஜூஸ்ல போட்ட ஐஸ் துண்டுக்கு இம்புட்டு பவர் இருக்கா?

    நல்லவேளை நீங்க தவறான மருத்துவமனைக்கு சென்றாலும் 'வேண்டாம்' என முடிவேடுத்தீர்களே, சரியான சமயத்தில் சரியான முடிவு...

    ReplyDelete
  2. மீண்டும் நாளை காலை எனக்கு தவறான சிகிச்சை கொடுத்த, கொடுக்க முற்பட்டவர்களை நான் சந்திக்க விருப்பபடுகின்றேன். நான் அவர்களை சந்திக்கலாமா அல்லது அப்படியே விட்டு விடலாமா?///

    அவங்க உங்கள கண்டுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்....

    ReplyDelete
  3. அனைவருக்கும் உதாரண பதிவு இது....

    நலமுடன் பதிவிட்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  4. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

    ஒரு லெமன் ஜூஸ்ல போட்ட ஐஸ் துண்டுக்கு இம்புட்டு பவர் இருக்கா? ///

    ஒரு துண்டு ஐஸ் தான், 35000 ரூவாய் காலியாயிடுச்சே?? என்ன செய்யுறது?

    ReplyDelete
  5. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

    அவங்க உங்கள கண்டுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.... ///


    ஆதாரம் என்கிட்டே இருக்கு, நிச்சயம் கண்டுக்குவானுங்க..என்ன சொல்லி சமாளிக்கப் போறாங்க னு பார்க்கணும். அந்த டூட்டி டாக்டர் ஏதோ மெடிக்கல் கான்பிரன்சுக்கு இன்னிக்கு காலைல டெல்லி போயிருக்காராம், எப்புடி, இபோதான் தகவல் வந்துச்சி!

    ReplyDelete
  6. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

    அனைவருக்கும் உதாரண பதிவு இது....

    நலமுடன் பதிவிட்டமைக்கு நன்றி... ///

    எல்லாம் தோழர்கள் உங்களது நல்லாசி மற்றும் ஆதரவே...

    ReplyDelete
  7. நல்ல ஒரு அனுபவம் தான். நான் கூட www .vannaththypoochy .blogspot . com என்ற வலை
    பின்னி உள்ளேன்.

    ReplyDelete
  8. /// suganthiny said...

    நல்ல ஒரு அனுபவம் தான். நான் கூட www .vannaththypoochy .blogspot . com என்ற வலை
    பின்னி உள்ளேன். ///
    சகோதரி,

    வருகைக்கும், பதிவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் , நன்றி..

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  10. /// Rathnavel said...

    பயனுள்ள பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. ///

    நன்றி அய்யா,

    இந்த நேரத்தில் எனக்கு நல்வாழ்வளித்த அந்த மூத்த மருத்துவர் திரு. ஜானகிராமன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...