பங்காளிங்க..

Wednesday, February 12, 2014

"அமெரிக்காவுக்கு ஆப்பு இலங்கைக்கு கப்"

இந்தியாவை ஆளும் காங்கிரசின் போக்கு விநோதமாகவே இருக்கின்றது. குறிப்பாய் தமிழனை தொடர்ந்து வஞ்சித்து வருவதும் வேதனையான விசயமே...

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததை கண்டு உடனடியாக இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரியை வெளியேற்றியது இந்தியா. மிகவும் துணிச்சலான செயல்தான்...

இதைப் பாராட்டுவதா என்று கேட்டால் நிச்சயம் பாராட்டக் கூடாது...அமெரிக்காவுக்கென்று சில சட்ட விதிமுறைகள் உள்ளது. அந்த சட்ட விதிமுறைகளை மீறியதால் தேவயாணி மீது நடவடிக்கை எடுத்ததாக அமெரிக்கா கூறியுள்ளது...

அதனை ஏற்க மறுத்த மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரை வெளியேற உத்தரவிட்டது...

அதே சமயத்தில் இந்திய வம்சாவளியை சார்ந்த வழக்கறிஞர் தேவயாணி மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை சரியானது என்று சொல்லி இருக்கின்றார்...

எது உண்மை? இன்னமும் புலப்படவில்லை...

தேவயானியின் ஆடையை களைந்து நிர்வாண சோதனை செய்ததாக அமெரிக்கா மீது தொடர்ந்து குற்றம் சாட்டியது இந்தியா...ஆனால் அமெரிக்கா இதனை மறுத்து வருகின்றது....

இது அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினை என்று சொன்னதற்காக இந்தியா பேசாமல் விட்டு விட்டதா? இல்லையே...அமெரிக்காவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதே....

ஆனால் அதே சமயத்தில் நமது ஈழத்து உறவுகள் பெண்கள் எத்தனை எத்தனை ஆயிரம், லட்சம் பேர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இந்தியாவின் உதவிக்காக, கருணைப் பார்வைக்காக காத்திருந்தனர்....

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத இந்தியா, நியாயம் கேட்டால் அது அவர்களின் உள்நாட்டு பிரச்சினை, அதில் தலையிட முடியாது என்று கைவிரித்து போனதே! இதை விட வெட்க கேடான விஷயம் ஏதும் இருக்க முடியுமா? 

இலங்கையில் நமது உறவுகளை கொத்துக் கொத்தாய் கொன்று  குவித்த போது உள்நாட்டு பிரச்சினை என்று சொன்ன அதே காங்கிரஸ் அமேரிக்காவின் உள்நாட்டு பிரச்சினையில் எப்படி மூக்கை நுழைத்தது? 

அதுவும் தெருவில் சும்மா போன பெண்ணை கைது செய்யவில்லை, விசாரணை செய்யவில்லை....தேவயானியின் வேலைக்காரப் பெண் கொடுத்த புகாரின் பெயரிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக அங்கிருக்கும் ஏடுகள் தெரிவிக்கின்றது....

ஆனால் தெருவில் சும்மா போன, பெண்கள், பச்சிளங்குழந்தைகள் எல்லாம் பாலியல் வன்புணர்வு கொண்டு கொன்று குவித்த இலங்கைக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்த கொடுமை எந்த நாட்டிலாவது நடக்குமா? 

இவ்வளவு ஏன், நமது தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட 400 பெயரை இலங்கை கடற்படையினர் கொன்று கடலில் வீசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்...அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை....

இலங்கையை கண்டாலே காங்கிரஸ் பயப்படுகின்றது என்றே சொல்லும் அளவிற்கு நடந்து கொள்கின்றது....மீனவர்களின் நலனுக்காக காங்கிரஸ் பாடுபடுகின்றது என்று ஒரு அரசியல் கோமாளியை வைத்து அவ்வப்போது பிரச்சாரம் வேறு செய்கின்றார்கள்.....முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்ப்பது மிகவும் ஆச்சரியமாய் இருக்கின்றது....

சரி மீனவர்களுக்காக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம், அதற்க்கு காங்கிரஸ் ஏற்பாடுகள் செய்யுமாம்....அப்புறம் நீங்க எதுக்கு அந்த நாற்காலியிலே உக்காரணும், இதுக்கு ஒரு கட்சி, அதுக்கு ஒரு தலைவரு வேற? 

தேவயானிக்கு ஒரு நியாயம் நமது இந்திய மீனவர்களுக்கு ஒரு நியாயமா? என்று கேட்டால் இன்று வரை அதற்க்கு பதிலில்லை.....ஆனால் அடுத்த ஆட்சியில் நாங்கள்தான் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று வேறு நம்பிக் கொண்டிருக்கின்றது...ஆனால் கடைசி வரையிலும் தமிழர்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைத்த பாடில்லை....காங்கிரசின் கடைசி தேர்தல் இது என்று மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்...

இந்த ஆட்சி செய்த சாதனை என்ன? ஊழல், கேவலமான ஊழல், மிக கேவலமான ஊழல், கடுமையான விலையேற்றம், பெட்ரோல் தட்டுப்பாடு, காஸ் சிலிண்டர் விலையேற்றம், ஈழத் தமிழர்களின் உயிர்கள், தமிழக மீனவர்கள் பலிகடா, தமிழர்கள் மீது மட்டும் தனித் தாக்குதல், மாநிலங்களுக்கு இடையினில் சண்டையை உருவாக்கியது, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, தேவையற்ற வங்கிக் கடன் ரத்து, பாதுகாப்பற்ற டெல்லி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களது சாதனைகள்....

பிரயோசனமற்ற ஆதார் அட்டை திணிப்பு என்று மேலும் சில கொடுமைகளும் அரங்கெரியதுதான் மிச்சம்....மோசமான பண வீக்கம், தங்கம் விலை, எரிபொருள் விலையேற்றம் இவைதான் முத்தாய்ப்பான சாதனைகள்..

அமெரிக்காவுக்கு ஆப்பு வைக்க கிளம்பிய இந்தியா இலங்கைக்கு கோப்பை கொடுக்கின்றது....

3 comments:

  1. இலங்கை இந்தியாவின் அடியாள் இந்தியா எதை சொல்கிறதோ அதைத்தான் இலங்ககை செய்கிறது சொல்வதை செய்வதினால் கோப்பை. இலங்கையை எதிர்த்து கத்திக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு குப்பை. நீங்கள் தமிழ் நாட்டை இலங்கையுடன் சேர்த்துவிடுங்கள் என்று கேட்டால் கண்டிப்பாக உடனே இந்தியா செய்யும். கச்சத்தீவை தமிழகத்துடன் இனைக்காது. வேண்டும் என்றால் தமிழகத்தை இலங்ககையுடன் சேர்த்துக்க சொல்லி கேட்க்கலாம் அப்புறம் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுபுள்ளி வச்சிடலாம். அப்புறம் வராத பெரியார் தண்னிக்கும் வறண்ட காவி தண்னிக்கும் சண்டைபோடத்தேவையில்லை. இந்தியாவிடம் காசு கொடுத்தால் அவர்கள் ஆற்றுத்தண்னீரை கூட விற்றுவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,

      வருகைக்கும், புரிதலுக்கும் மனமார்ந்த நன்றி...

      Delete
  2. ade naai ilangai theeviravaathathaithaan konrathu.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...