பங்காளிங்க..

Monday, September 25, 2017

அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?


ஜெயலலிதா யாருமே அசைக்க முடியாத ஒரு கம்பீரம், வானத்தில் அவர் பறந்தாலும் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டவர்கள், அவர் சிறையில் இருக்கும் போது கூட அவர் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம் என்று அச்சம் இருந்ததால் கோவில் கோவிலாக சென்று மொட்டை போட்டு, மண் சோறு சாப்பிட்டு, காவடி தூக்கி களேபரம் செய்தவர்கள் இன்று அவர் இட்லி சட்னி வச்சு சாப்பிட்டாரா என்று கொச்சைப்படுத்தி வருவதும் மிகவும் வேதனையைத் தருகிறது.  

ஆக மொத்தத்தில் ஜெயலலிதாவின் மரணம் உண்மையிலேயே மிகப்பெரிய கேள்விக்குறிதான், ஒரு வரலாற்று சரித்திரம் படைத்த தங்கத்தாரகையின் மரணம் சாமானியனையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. உள்ளுக்குள் அவரது மரணத்தில் பேரானந்தம் அடைந்தவர்கள் போல காட்சியளிக்கிறது. ஊடகங்களும் அவரவர் டிஆர்பி ரேட்டிங்கிற்கு வசதியாக ஜெயலலிதாவின் மரணத்தில் அவரது பிணத்தை நடுவீதியில் வைத்து வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. நடந்தது என்ன? என்று எந்த நீதிமன்றமும் பொது வழக்காக வைத்து வாதாடத் தயாரில்லை, அதிமுக என்றாலே அலறியவர்கள் இன்று அதிமுக என்றாலே அருவறுக்கப்படும் ஒரு கட்சியாக மாறிவிட்டது என்பது நிதர்சன உண்மை. யார் எப்படி போனால் என்ன? தனக்கு பாதுகாப்பான பதவி கிடைத்து விட்டது, அது போதும் என்பது போல இருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள், அம்மா இல்லாத இந்த பதவி தேவையில்லை, என்று யாராவது ஒரு அமைச்சர் கூறியிருப்பாரா? 

அம்மா இல்லாத அந்த கார் தேவையில்லை என்று திருப்பி அனுப்பிய நாஞ்சில் சம்பத், சசிகலாவை தலைமையாக ஏற்க மாட்டோம் என்று கூறிய நாஞ்சில் சம்பத் இன்று சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறிய பின்னணி என்ன? அதிமுக தொண்டர்கள் தற்போது தான் எந்த கட்சியில், எந்த தலைமையின் கீழ் இருக்கிறோம் என்று புரியாத குழப்பத்தில் இருக்கிறார்கள், பதவி சுகம் கண்டவர்களுக்கு, பதவியை விட மனதில்லை, எடப்பாடி தலைமை அணியை மிக கேவலமாக விமர்சித்தவர்கள், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க போவதாகஅறைகூவல் விடுத்தவர்கள் இரண்டு பேரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பட்டம் வாங்கிய பிறகு மவுனம் சாதிப்பது எதற்கு? தனக்கு பதவி கிடைக்கவில்லையே என்ற கோபத்தில் இருக்கும் தினகரன், தீபா அடுத்து என்ன செய்யபோகின்றார்கள்? என்ன நடக்கின்றது தமிழகத்தில், நாம் எந்த அதிமுக தலைமையில் நாட்டில் வாழுகின்றோம் என்று தெரியாமல் வாழும் தமிழக மக்கள்....

எப்படி பார்த்தாலும் நமக்கு முதல்வர் பதவி என்பது கானல் நீர்தானோ என்ற கவலையில் திமுக, திமுக தலைவரின் உடல்நிலை பற்றிய தகவலும் நமக்கு இல்லை, அவர் நன்றாக இருக்கின்றார் என்ற ஒரு தகவலை தவிர வேறு எந்த தகவலும் இல்லை, ஒருவேளை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்போது மீண்டும் துளிர்த்தெழுவாரா கலைஞர், அம்மா இல்லாத அதிமுகவும், அய்யா இல்லாத திமுகவும், 

அடுத்த தலைமுறையில் அதிமுக, திமுக நிலை என்ன? மீண்டும் அழகிரி போர்க்கொடி தூக்குவாரா? கனிமொழி கட்சிக்குள் நுழைவாரா? ஸ்டாலினுடன் இருக்கும் திமுக மூத்த தலைவர்கள் என்ன செய்வார்கள்? 

இரண்டு கட்சிகளை விட்டு விட்டு மூன்றாவது கட்சி தலைதூக்குமா? இந்த தேர்தலில் எப்படியாவது பாஜக தமிழகத்தில் இடம் பிடிக்குமா? தேமுதிக என்னவாகும்? கமலஹாசன் படையெடுப்பாரா? ரஜினிகாந்தும் அரசியலில் கமலுக்கு ஜாலரா அடிப்பாரா? விசிக, பாமக, மதிமுக நிலை என்ன? கம்யூனிஸ்ட்டுகள் இனி யாரோடு தேர்தல் நேரத்தில் கூட்டு சேர்வார்கள்? நாம் தமிழர் கட்சிக்கு பிரபாகரனின் மரணம் முக்கிய பாயிண்ட்டாக இருந்தது, இந்த அம்மாவின் மரணம் அவரது கண்களுக்கு தெரியவில்லையா? காங்கிரஸ் காமராஜர் ஆட்சி என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறது, 

இப்படியாக ஓடுகிறது கட்சிகளின் நிலவரம்? இதற்கிடையில்  நீட் தேர்வு பிரச்சினை, மாணவர்களின் எதிர்காலம், மீண்டும் டாஸ்மாக் , ஜிஎஸ்டி வரி பிரச்சினை, மீத்தேன் திட்டம், நெடுவாசல் போராட்டம், ரேஷன் கடையை மூடிருவாங்களா, கேஸ் கு மானியம் கிடைக்குமா? பெட்ரோல் விலையை எப்போ குறைப்பாங்க, கல்வியின் நிலை என்னவாகும்? ஒரிஜினல் லைசன்ஸ கொண்டு வந்திட்டா ஆக்சிடென்ட் குறைஞ்சிருமா?  இப்படி மீண்டும் மீண்டும் ஏகப்பட்ட குளறுபடிகள், என்னவாக போகிறது தமிழகம்? 

வேலையில்லா திண்டாட்டம் அப்படியேதான் இருக்கிறது, இளைஞர்களின் வாழ்விற்கு என்ன எதிர்காலம், ஊழல் செய்த அரசியல் தலைவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? கருப்பு பணம் மக்களிடம் எப்போது வெள்ளைப்பணமாக மாறும்? ஆதார் அட்டையில் இந்த இளைய தலைமுறை, ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணை கொடுத்து அழைக்க போகின்றார்களா? யோவ் 420 என்று அழைக்கும் காலத்தில் மக்கள் இருக்கிறார்களே! மீண்டும் தொடங்குவோம், அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா? இந்த கேள்விக்கு விடையை சொல்லி விட்டு அடுத்த தலைப்புக்கு செல்லுங்கள்....ஹலோ ஊடகங்களே, உங்களுக்கு இந்த வார விவாத தலைப்பு கிடைத்து விட்டது, அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?  ம்ம்ம்..எதுக்கு வெயிட்டிங், ஸ்டார்ட் பண்ணுங்க....

8 comments:

 1. தும்பை விட்டு வாலை பிடித்த கதைதான்

  ReplyDelete
  Replies
  1. இப்போ போற போக்கிலே வாலையும் விட்டுட்டாங்களே சகோதரி,

   Delete
 2. Replies
  1. உண்மைதான் அய்யா, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   Delete
 3. அம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பாரா?
  யு மீன் ... அம்மாக்கு இட்லியை ஆட்சி செஞ்சது .... சட்டினியா சாம்பாரா ?

  //ஜெயலலிதா யாருமே அசைக்க முடியாத ஒரு கம்பீரம், வானத்தில் அவர் பறந்தாலும் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டவர்கள்,//

  கம்பீரம்... ?

  எனக்கு என்னமோ ஆணவம் போல தான் தெரியுது..

  ReplyDelete
  Replies
  1. கம்பீரம்தான் சகோ, அதை ஆணவமாக மாற்றியது இந்த தெர்மோகோல் மற்றும் இட்லி சட்னி அமைச்சர்கள்தான், இவர்களே உசுப்பேற்றி, உசுப்பேற்றி கோபுரத்தில் சென்று வைத்தார்கள், பின்னர் அவர்களை அங்கே இருந்து ஒரே தள்ளு, குளோஸ்!

   Delete
 4. //நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...//

  ..Hmmm...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பெயரை அருமையாக எழுதியிருக்கிறீர்கள், ஸ்வீட் நேம்!

   Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...