இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.
தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.
இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா...அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா? யார் இதை வெளியிட்டது...அந்த பெண்ணின் சகோதரரா? அந்த பெண்ணா? அந்த பெண்ணின் தோழிகளா? அல்லது தோழர்களா? அல்லது யாரென்றே தெரியாத முகம் தெரியா நபரா? அந்த பெண்ணின் கணவரா? அல்லது காதலரா?
அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா?
இவள் ஒரு மாடல் என்று வைத்து கொள்வோம்...ஒரு மாடல் என்பவள் ஒரு திருமண வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அடுத்த வலைதளத்துக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள இயலாது. ஒருவேளை நிஜமாகவே இவளுக்கு வரன் தேடுவதாக இருந்தால் ஏன் வெவ்வேறு பெயர்களில் இடம்பெற வேண்டும். சோசியல் நெட்வொர்க் என்பது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியமாகின்றது. மீதி எல்லோருமே கடமைக்கு ஒரு கணக்கு துவக்கி செயல்படுத்தி வருகின்றார்கள். இரண்டு ரூவாய் கொடுத்து தினகரன் பேப்பர் வாங்க வைக்க 3 பொருட்களை இலவசமாக கொடுத்தார்கள்.
அப்படி எனில் உங்களிடம் இருந்து எவ்வளவு கொள்ளை அடிக்க இந்த சோசியல் நெட்வொர்க் தளங்கள் விற்கப்படுகின்றது என்பதை சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள்.
விசயத்திற்கு வருவோம்...இந்த பெண்ணிற்கு இது சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா? இந்த பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? இவளே கால் கேள் ஆகவும் வருகின்றாள், இவளே திருமண மணப் பெண்ணாகவும் வருகின்றாள். எதுதான் நிசம்? அல்லது இவள் ஒரு வியாபாரப் பொருளா?
அப்படி எனில் உங்களிடம் இருந்து எவ்வளவு கொள்ளை அடிக்க இந்த சோசியல் நெட்வொர்க் தளங்கள் விற்கப்படுகின்றது என்பதை சிந்தித்து பார்த்து கொள்ளுங்கள்.
விசயத்திற்கு வருவோம்...இந்த பெண்ணிற்கு இது சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா? இந்த பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? இவளே கால் கேள் ஆகவும் வருகின்றாள், இவளே திருமண மணப் பெண்ணாகவும் வருகின்றாள். எதுதான் நிசம்? அல்லது இவள் ஒரு வியாபாரப் பொருளா?
ஒருவேளை இந்த மேட்ரிமோனி நடத்தும் வியாபாரிகள் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு நம்மை எல்லாம் ஏமாற்றுகின்றார்களோ அல்லது இப்படித்தான் எல்லா பெண்களின் புகைப்படங்களையும் வெளியிடுகின்றார்களா? இப்படி எத்தனை பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அந்த எத்தனை அப்பாவி இளைஞர்களிடம் இருந்து பணம் பிடுங்கி இருக்கின்றார்களோ, தெரியவில்லையே?
ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.
இதை பற்றி எனது நண்பனிடம் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன்...டேய் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு போன் பண்ணி சொல்றியாடா? அப்படியே படத்தை பார்த்தோமா, ஜாலியா ரசிச்சோமானு போயிட்டே இருக்கணும்னு சொன்னான். மிகவும் வலித்தது,. இரண்டு நாளுக்கு முன்னாள் அவனது தங்கையின் புகைப்படத்தை பேஸ்புக் இணையத்தில் பார்த்து விட்டு வானத்திற்கும், பூமிக்குமாய் குதித்தான். இதை போட்டவர்கள் மீது கோர்டுக்கு போவேன், அல்லாரையும் பிடிச்சு உள்ளே போடுவேன் என்று கத்தி கொண்டிருந்தான்.. மெல்ல அவனிடம் போய் டேய், இதெல்லாம் ஜாலியா ரசிச்சுகிட்டு போய்க்கிட்டே இருக்கனும்டா என்று அவன் சொன்ன வசனத்தையே அவனுக்கு திருப்பி சொன்னேன்..எதுவுமே பேச வில்லை. இப்போது அவன் இந்த செய்தியை யாரைப் பார்த்தாலும் தீவிரமாய் சொல்லிக்கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றான். தனக்கு வந்தால் அது வலி, அடுத்தவர்களுக்கு வந்தால் அது ஜாலியா?
மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது...இல்லேனா மருவாதை கெட்டிடும்.
வேதனைகளோடு
வேதனைகளோடு
மின்சாரம்.