பங்காளிங்க..

Saturday, September 24, 2011

பதிவர்களே, நீங்க சுரண்டி கிழிச்சது போதும், நிப்பாட்டிக்கோங்க

ஆட்டை கடிச்சி, மாட்டை கடிச்சி கடைசியிலே மனுசனையே கடிக்கிறானே னு யோசிக்கிறீங்களா? என்ன செய்யுறது நல்லது செய்யுறதுக்கு என்ன வேஷம் போட்டாலும் தப்பில்லை னு என் மச்சான் நேத்து போன்ல சொன்னாரு..

அதான் உண்மையை பகீரங்கமா போட்டு உடைச்சிரலாமுனு இருக்கேன்..

அரசியல்வாதி அடிக்கிறது, சுரண்டறது எல்லாம் அவன் குடும்பத்திற்கும், வாரிசுக்கும் நல்ல யோகத்தை கொடுக்குது, ...ஆனா நாம சுரண்டுறது கடைசியிலே நமக்கே ஆப்பாயிடுதே...இது ஏன் உங்களுக்கு புரியவே மாட்டேங்குது....
சொன்னா கேளுங்க..இனிமே நீங்க சுரண்டுரதை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது, இதனால எனக்கு என்ன ஆனாலும் சரி..அதை பற்றி நான் கவலைப்படலை. எனக்கு ரெண்டுல ஒன்னு இன்னிக்கு தெரிஞ்சாகனும். நீங்க இனிமே சுரண்ட மாட்டேன்னு எனக்கு சொல்லுங்க...

இந்த செல் போன் வந்த பிறகு செல் போன்ல நிறைய தொந்திரவு வந்துச்சி, அடுத்தது நம்ம சொக்காரனுக்கு பேசுறதுக்கு டாப் - அப், பாட்டம் - டவுன் எல்லாம் போடுறதுக்கு முன்னாடி எல்லாம் ஒரு கடையிலே போய் நின்னு அவன்கிட்டே உங்க நம்பரை சொல்லித்தான் அமௌன்ட் ஏத்தணும்..ஆனா இப்போ பஸ் டிக்கெட்டுக்கு பாதி சைஸ்ல இருக்கிற ஒரு அட்டைல நூறு ரூவாய் க்கும், ஆயிரம் ரூவாய் க்கும் கூட அமௌன்ட் ரீ-சார்ஜ் பண்ணிக்கலாம்...

அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம் னு யோசிக்கிறீங்களா? இருக்கு. அந்த ரீ-சார்ஜ் கார்ட்ல ஒரு வெள்ளி நிறப் பட்டை ஒன்னு இருக்கும், அதுக்கு உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அதை தட்டினா உங்களுக்கு ரீ-சார்ஜ் ஆகிடும்.


இப்போ விஷயம் என்னானா? அந்த வெள்ளிநிறப் பட்டை எதுல செய்யுறாங்க னு தெரியுமா? வெள்ளி நைட்ரோ ஆக்சைட், இதை சுரண்டினா என்ன ஆகும் தெரியுமா? நகம் வழியா உள்ளே நுழைஞ்சு தோல் சரும புற்று நோயை உருவாக்கும். உடனே எல்லாம் நடக்காது...கொஞ்சம் கொஞ்சமா செயல்பட்டு கடைசியிலே இந்த புற்று நோயை உருவாக்கிடும்.

சிலர் சொல்வாங்க என் பையன் தண்ணியடிக்க மாட்டான், தம்மு அடிக்க மாட்டான்..ஏன் பெப்சி, கோக் கூட குடிக்க மாட்டான், பொண்ணுங்களை ஏறெடுத்து பார்க்க மாட்டான்...ஆனா அவனுக்கு போய் இப்படி கேன்சர் வந்திடுச்சே னு ரொம்ப பீல் பண்ணுவாங்க..ஒன்னு தெரிஞ்சிக்கோங்க..கேன்சர் கிருமி எப்படி வேணுமினாலும் வரும்..அதுல இதுவும் ஒன்னு...

சரி அப்போ என் கேள் பிரண்டு கிட்டே நான் டெய்லி பேசணுமே..அதுக்கு தினமும் டாப்- அப் பண்ணினாத்தான் பேச முடியும் னு நீங்க நினைச்சீங்கன்னா எதுக்கு நேரிடையா சுரண்டுறீங்க, 

   அரசியல்வாதிங்க என்ன நேரிடையாவா சுரண்டுறாங்க, ஏதாவது பினாமிய வச்சுத்தானே  சுரண்டுவாங்க...

நாம ஏன் நம்ம விரலை வச்சு சுரண்டனும்..ஒரு பேனா, குச்சி, காசு, வண்டி சாவி இப்படி எதையாவது வச்சு சுரண்டுங்க...

அதுனால பதிவுலக நண்பர்களே...இனிமே சுரண்டாதீங்க ப்ளீஸ்..

26 comments:

 1. நமக்கு எல்லாவழியிரும் தீங்கு இருக்குதுங்க....

  இதுக்கு தீர்வாகத்தான் இப்ப ஈஸி ரீசார்ஜ் பண்ணிக்கலாம் அதில் சுரண்ட வேண்டிய வேலை யில்லை...

  விழிப்புணர்வு பதிவு...
  வித்தியாசமான தலைப்பு மற்றும் சிந்தனையுடன்..

  ReplyDelete
 2. கண்டிப்பாக நாடு சுரண்டலிலிருந்து விடுபடவேண்டும்

  ReplyDelete
 3. /// # கவிதை வீதி # சௌந்தர் said...

  அட.... என்ன ஒரு பதிவு...///

  இது வஞ்ச புகழ்ச்சி அணிதானே

  ReplyDelete
 4. /// # கவிதை வீதி # சௌந்தர் said...

  நமக்கு எல்லாவழியிரும் தீங்கு இருக்குதுங்க....

  இதுக்கு தீர்வாகத்தான் இப்ப ஈஸி ரீசார்ஜ் பண்ணிக்கலாம் அதில் சுரண்ட வேண்டிய வேலை யில்லை...

  விழிப்புணர்வு பதிவு...
  வித்தியாசமான தலைப்பு மற்றும் சிந்தனையுடன்.. ///

  ஈசி ரீ-சார்ஜ் எல்லாம் போகுற அவசரத்துல பண்ண மாட்டாங்க...கார்ட வாங்கி சுரண்டிகிட்டு போயிக்கிட்டே இருக்காங்க..புரிதலுக்கு நன்றி

  ReplyDelete
 5. /// # கவிதை வீதி # சௌந்தர் said...

  கண்டிப்பாக நாடு சுரண்டலிலிருந்து விடுபடவேண்டும் ///

  நாடு என்னிக்குங்க விடுபட்டுச்சி....நாமதான் விடுபடணும் இந்த உலகத்த விட்டு????

  ReplyDelete
 6. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

  Title kalakkal ///

  என்ன செய்யுறது தலைவா...இப்படி எல்லாம் போட்டாத்தான் மக்கள் படிக்கிறாங்க...

  ReplyDelete
 7. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

  Useful information ///

  பயனுள்ள தகவலை தருவது உங்கள் மின்சாரம்.blogspot.com, தொடர்ந்து படியுங்கள்...ஆதாரவு தாருங்கள்...

  ReplyDelete
 8. பதிவு நன்றாக இருக்கு நன்பா..

  ReplyDelete
 9. /// Mohamed Faaique said...

  பதிவு நன்றாக இருக்கு நன்பா..///

  நன்றி தோழா...இனிமே சுரண்டாதீங்க..

  ReplyDelete
 10. சுரண்டுறதா, அப்படின்னா என்ன சாமி ?

  ReplyDelete
 11. பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் படம் போடுவது தினமலர் மட்டும் தான்னு நினைச்சிகிட்டு இருந்தது எவ்வளவு தப்புன்னு உங்க பதிவ பாத்து தெரிஞ்சிகிட்டேன்

  ReplyDelete
 12. "கவிதை வீதி" - பத்து இருபது ரூபாக்கு ஈசி ரீசார்ஜ் இல்லை, கார்ட் மட்டுமே

  ReplyDelete
 13. /// suryajeeva said...

  சுரண்டுறதா, அப்படின்னா என்ன சாமி ?///

  ஒ, உங்க செல் போன்ல ஒன்லி இன்கமிங் தானா...அவுட் கோயிங் கிடையாதா? அப்போ அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க...

  ReplyDelete
 14. /// suryajeeva said...

  பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் படம் போடுவது தினமலர் மட்டும் தான்னு நினைச்சிகிட்டு இருந்தது எவ்வளவு தப்புன்னு உங்க பதிவ பாத்து தெரிஞ்சிகிட்டேன் ///

  தலைவா, நான் எப்பவுமே தலைப்புக்கு சம்பந்தம் இல்லாம படம் போட மாட்டேன்..அந்த படத்தை நல்ல உத்து பாருங்கா..அந்த அக்கா கன்னத்தை சுரண்டிகிட்டு இருப்பாங்க....எப்புடி??

  ReplyDelete
 15. /// suryajeeva said...

  "கவிதை வீதி" - பத்து இருபது ரூபாக்கு ஈசி ரீசார்ஜ் இல்லை, கார்ட் மட்டுமே ///

  ஒத்துக்கிறேன், நீங்க செல் போன் வச்சிருக்கீங்க னு, கரெக்டா சொல்லி இருக்கீங்க...

  ReplyDelete
 16. கண்டிப்பாக இனி நாங்களும் திருந்தனும் நன்றி பகிர்விற்கு!

  ReplyDelete
 17. /// தனிமரம் said...

  கண்டிப்பாக இனி நாங்களும் திருந்தனும் நன்றி பகிர்விற்கு! ///

  வாங்க தோப்பாகுவோம், தனிமரமா நிக்காதீங்க...

  ReplyDelete
 18. பயனுள்ள அரிய தகவல்
  பதிவிட்டமைக்கு நன்றி
  த.ம 3

  ReplyDelete
 19. தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தேன்... நல்ல விசயம்தான் சொல்லியிருக்கிறீங்க

  ReplyDelete
 20. முதல்முறையாக உங்கள் தளம் வருகிறேன்.. இனி தொடர்ந்து வருவேன்

  ReplyDelete
 21. /// Ramani said... பயனுள்ள அரிய தகவல்
  பதிவிட்டமைக்கு நன்றி ///

  மனதில் தோன்றும் சில நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்தல் நல்லது என்றே நான் நம்புகின்றேன். இதனால் நூற்றில் இரண்டு பேர் தனது வழக்கமான நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்களே என்ற நப்பாசையில்தான் இதனை தேர்ந்தெடுத்து அனுப்புகின்றேன். எப்போதுமே நல்லவைகளை நேரிடையாக சொன்னால் இந்த சமுதாயம் ஏற்றுகொள்ளாது என்பதனால் சில மசாலா கலவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்...மசாலாக்கள் அதிக்கபடியாக இருந்தால் என்னை மன்னித்து கொள்ளவும்.

  ReplyDelete
 22. /// மதுரன் said...

  தலைப்பை பார்த்ததும் என்னமோ ஏதோ என்று ஓடி வந்தேன்... நல்ல விசயம்தான் சொல்லியிருக்கிறீங்க ///

  தலைப்பு பகீரன்கமாய் இருந்தால்தான் மக்களும், சமுதாயமும் விரும்பி வருகின்றது. உங்களது ஆதரவினால் நிச்சயம் பல நல்ல விடயங்களை தொகுக்க முடியும் என்ற உத்வேகம் வருகின்றது. வருகைக்கு மற்றும் உங்களது பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...