பங்காளிங்க..

Tuesday, September 27, 2011

அந்த மேட்டருக்கு போறீங்களா...உசார்..

இதுக்கு முன்னாடி நீ எங்கே வேலை செஞ்சே?
 
துபாயா, பஹ்ரைனா, அபுதாபியா , என்று குசலம் விசாரிக்கும் இளைஞர்களே, நீங்கள் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு செல்லும் போது ஒரு விஷயம் நன்கு நினைவில் கொள்ளுங்கள்..அங்கே சட்ட திட்டங்கள் மிக பயங்கரமாய் இருக்கும்...அது இந்தியா போன்று பணம் இருப்பவர்களுக்கு மட்டும் வளைந்து கொடுக்காது என்பது பலருக்கு இன்னமும் புரியாத புதிர்தான்.
 
 
சமீபத்தில் எனது நண்பரின் தூரத்து உறவினர் யுஏஈ பயணமானார். அவருக்கு ஒப்பந்த பிரிவில் சமையல்காரர் பணி கிடைத்தது. அதிகம் படிக்காதவர் என்பதால் அவருக்கு அங்கே இருக்கும் சட்ட திட்டங்களை பற்றிய அக்கறை இல்லை. அடுத்தது அங்கே இருக்கும் தனது முதலாளி பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ஆயிரம் கனவுகளோடு புறப்பட்டு விட்டார்.

தான் ஒரு மிகப் பிரபலமான சமையல்காரர் என்பதால் முதலாளியை அசத்துவதற்காக பல விதமான சமையல் குறிப்புகளையும், சமையலுக்கு தேவையான உபகரணம் மற்றும் வாடிக்கையாளர்களை மயக்கும் சில உணவுப் பொருட்களையும் எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டார்.

அவருக்குள் ஆயிரம் கனவுகள்...வித விதமாய் உடைகள் வாங்கலாம், முக்கியமான இடங்களில் சென்று புகைப்படம் எடுத்து ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக சிக்கனமாய் செலவு செய்து பணம் சேமித்து இந்தியா திரும்பும்போது அருமையான கடை ஒன்றை வைக்க வேண்டும். என்னென்னவோ கனவுகள்....இதை விட மேலானது ஒரு முறையாவது ஒரு துபாய் பெண்ணோடு உடலுறவு வைத்து கொண்டு பரம திருப்தி அடைய வேண்டும். எத்தனை முறை "அந்த" படம் பார்த்திருக்கின்றோம்...நாமும் அதனை அனுபவிக்க வேண்டும். தனது நண்பர்களிடம் எல்லாம் அதை பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும், 
 துபாய் சேக்கு டிரெஸ் வாங்கி போட்டு தனது தெருவில் உள்ள நண்பர்களுக்கு காண்பிக்க வேண்டும், அங்கே இருக்கும் விலை உயர்ந்த மதுபானம் குடிக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனயோ கனவுகளோடு விமானம் ஏறினார். துபாய் விமான நிலையம் சென்றதும் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது,.

அவரது உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அத்தோடு மட்டுமல்லாமல் 20  ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பெற்றார். அவருக்கு நம்மூர் திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படுவது போல் என்ன காரணத்திற்கு கைது செய்யப்படுகின்றோம் என்று கூடத் தெரியவில்லை.

அப்போது அவரை வரவேற்க காத்திருந்த அந்த ஊர் ஒப்பந்தக்காரர் சிறையில் சென்று விசாரித்தார்..அப்போதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. அவர் கொண்டு சென்ற பொருட்களில் நம்மூரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கச-கசா என்ற சமையல் பொருள் இருந்தது. காரணம் என்னவெனில் துபாய் போன்ற அரபு நாடுகளில் கச-கசா தடை செய்யப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல..கச-கசா, பாண், பீட்டில் நட் என்றழைக்கப்படும் சுபாரி, பாண் பராக் போன்ற பொருட்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. மீறி அதை கையில் வைத்திருந்தாலோ, சுவைத்தாலோ அவர்களுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகின்றது.
அந்த ஒப்பந்தக்காரரும், அந்த ஊர் முதலாளியும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் பயனில்லை. இறுதியாக இந்த  20 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு மாற்றாக அந்த நீதிபதிகள் அபராதம் விதித்தனர். அந்த தொகை AED.100,000 அதாவது இந்திய தொகைக்கு அது 13 ,511 ,24 .8 ரூவாய் ஆகும். அவர் சம்பாதிக்க சென்றதே வெறும் 1 லட்சம் ரூவாய்தான். ஆனால் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொகை 12  மடங்கு அதிகம். இந்த தொகையை கட்டி விட்டு மீட்டு செல்லலாம் என்று அறிவித்து விட்டது. 
 

26 வயதில் அங்கு சென்று விட்டு 46 வயதில் நாடு திரும்ப போகின்றாரா? அல்லது என்ன செய்வது என்று தலையை பிச்சி  கொண்டிருக்கின்றார்கள். ஆகவே ஒப்பந்தக்காரர்கள் இதை போன்று படிக்காதவர்களை அழைத்து செல்லும் போது முதலில் அங்குள்ள சட்ட திட்டங்களை பற்றிய விழிப்புணர்வை கொடுத்து அழைத்து செல்லல் வேண்டும். இல்லையேல் அந்த நண்பருக்கு ஏற்பட்ட கதிதான் மற்றவர்களுக்கும்.

இதில் பொதுவாக யார் அதிகம் சிக்குவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.? அதிகமாக நம்மூர் தாய்மார்கள்தான் சிக்குவார்கள். ஏனெனில் மகளை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்தவர்கள் அங்கு மகளின் பிரசவத்திற்கு செல்லும் போது தனக்கு சமையலுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று கச-கசா, அஜினோமோட்டோ, புளியோதரை மிக்ஸ், சாம்பார் மிக்ஸ், மிளகாய் பொடி, காப்பி பொடி, ஊறுகாய் பொட்டணம் என்று மகளுக்கு பிடிக்குமே என்று வகை வகையாய் எடுத்து செல்வார்கள். அது ஒருவேளை உங்கள் வீடுகளில் நடக்கலாம், அல்லது நமது நண்பர்கள் வீடுகளில் நடக்கலாம்...நம்மால் முடிந்தால் அவர்களுக்கு இதை எடுத்து சொல்லி அவர்களை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றலாமே...
 

அங்கே சட்டத்தில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வயதான ஆண், பெண் என்று எவரையும் விட்டு வைக்க மாட்டார்கள்...அது என்ன இந்தியாவா? தயாளு அம்மாள் வயதானவர் என்று பாவம் பார்த்து விட்டு வைக்க, அது அரபு நாடு, அங்கே சட்டம் இப்படித்தான் இருக்கும்,
 
விரைந்து முடிவெடுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் ...பாவம் அப்பாவிகள் அவர்களாவது பிழைத்து கொள்ளட்டுமே...

3 comments:

 1. சிங்கப்பூரில் கூட கசகசா வுக்கு தடா தான்...கசகசா கஞ்சாவுக்கு ஈக்வலாமே?

  உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?


  கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

  ReplyDelete
 2. /// IlayaDhasan said... சிங்கப்பூரில் கூட கசகசா வுக்கு தடா தான்...கசகசா கஞ்சாவுக்கு ஈக்வலாமே? ///

  அப்படியா....தகவலுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நல்ல விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துக்கள், சுரேந்தர் குமார், மதுரை.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...