பங்காளிங்க..

Thursday, September 8, 2011

கறுப்பு தினம் புதன்கிழமை


செப்டம்பர் 7 2011, இந்தியாவின் தலைநகரத்தில் அதுவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நீதிமன்றத்தின் முன் நடந்தேறி இருக்கும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி  எண்ணிக்கை  12 ஐ தொட்டு இருக்கின்றது. காயம் பெற்றவர்கள் எண்ணிக்கை 60 ஐ தொட்டு விட்டது. இந்த சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பொது மக்கள் யாரையும் அச்சமடையத் தேவை இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்தார். தனது கண் எதிரே நடந்த குற்றங்களையும், கொலைகளையும் பார்த்த பிறகு எந்த சாதாரண குடிமகனுக்கும் மனதினில் பயம் வரத்தான் செய்யும். மேலும் எல்லோரும் அமைதி கொள்ளல் வேண்டும் என்று வேறு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார். எப்படி அந்த உயிர்களை இழந்த குடும்பங்களால் அமைதியாக இருக்க முடியும்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் காங்கிரஸ்காரர்கள் அமைதியாகவே இருந்தீர்களா? இன்று வரை அதற்க்கு துணை நின்றவர்கள் என்று கூறி வருவோர், போவோர் எல்லாரையும் தண்டிக்கத் தானே துடிக்கின்றீர்கள். உணர்ச்சிகள் , உணர்வுகள் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, தனது உறவுகளை பறிகொடுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளல் வேண்டும்., மேலும் எந்தெந்த துறைக்கு எந்தெந்த ஆள் பொருத்தமோ அவர்களைத் தான் அந்த பதவியில் உட்கார வைக்க வேண்டும். நாட்டின் உள்துறை அமைச்சர் பதவி என்பது ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர் அல்லது லெப்டினன்ட் கர்னலையே அதற்க்கு தக்கவாறு அமர வைக்க வேண்டும்.,(உண்மையிலேயே தேசத்தின் மீது பக்தி இருந்தால் எந்த கட்சியாக இருந்தாலும் சரி).

ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்புகள் தவறாமல் நடக்கின்றது. நடந்து முடிந்ததும் வழக்கமாய் சொல்லும் வசனங்கள்தான் இவை. இதை கேட்டு கேட்டு காதெல்லாம் ரத்தம் வடிகின்றது. அவர்களும் சளைக்காமல் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அது ஏன் என்றே புரியவில்லை.

புது தில்லி செயற்கையான தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பிறகு இயற்கை அச்சுறுத்தலும் சேர்ந்து கொண்டு விட்டது. இரவு 11 .28 கு 4 .2  ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது.

வரிசையாய் அதிர்ச்சி செய்திகள் வெளிவரும்போது நம் தமிழகத்தில் நாங்குநேரி கைலாசனாதபுரம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 200 அடி ஆழம் கொண்டஆழ்துளை கிணற்றில் சிக்கிய நான்கு வயது சிறுவன் சுதர்சன் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப் பட்டான்.

அவனை இழந்து வாடும் அந்த உறவுகளுக்கு எங்களது கண்ணீரை காநிக்கையாகுகின்றோம். அது மட்டுமல்லாமல் அன்று முழுவதும் அந்த சிறுவனை மீட்க போராடிய அனைத்து தோழர்களுக்கும் என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றது. இதை தடுக்கும் வண்ணம் யாரும் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

ஏன் இதற்கென்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு துளை போடும் இயந்திரம் நிரந்தரமாக நிறுத்தி வைக்க கூடாது. அந்த பாறைகளை கையால் உடைத்து எடுக்க முயற்சித்ததால்தான் 15 மணி நேரம் ஆகி இருக்கின்றது. இப்படி இந்த வார புதன் கிழமை இந்தியர்களுக்கும்,. தமிழர்களுக்கும் கறுப்பு தினமாய் மாறி விட்டது.

அது ஏன் ஒவ்வொரு முறையும் மன்மோகன் சிங் வெளிநாடு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளும்போதெல்லாம் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று யோசிக்க வேண்டி இருக்கின்றது. சம்பவம் நடந்த போது நான் நாட்டினில் இல்லை என்று பிறகாலத்தில் சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்ற எண்ணமா?

அது மட்டும் ஏன் என்று புரியவில்லை?

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...