பங்காளிங்க..

Friday, November 25, 2011

சேலையை பிடிச்சி இழுத்தா சும்மா விட்டுருவோமா?

ஆரம்ப கால கட்டத்துல ஒண்ணுமே இல்லாமா உள்ளே வரானுங்க. அப்புறம் பார்த்த ஒரு ஊரையே வளைச்சு போடுறானுங்க, சாதாரணமா பாமரனுக்கும், நெருங்கி இருக்கிரவனுக்கும் கூட எதுவுமே தெரியறது கிடையாது. எப்போவாவது ஒரு கட்டத்துல ரெய்டுனு ஒன்னு நடக்கிரப்பத் தான் எல்லா இழவும் மண்டையிலே ஏறுது.

இந்த ஒரு ஆளுன்னு கிடையாது. நிறைய பிரபலம் கதை இப்படித்தான் போகுது.  MA BL மட்டும் படிச்ச ஒரு வழக்கறிஞர் வீட்டுல போய் பாருங்க..மாத வருமானத்துல குடும்பத்தை நடத்துறதுக்கு உயிரை கொடுத்து வேலை செய்யணும். அப்படி செஞ்சாலும் மனசுக்கு நிம்மதியான வருமானம், சேமிப்பு இருக்காது.

ஆனா இந்த சிறப்பு தொழில்ல MA BL படிச்ச ஒரு வழக்கறிஞருக்கு மொத்தம் 14 இடம் இருக்கு. அதிலே மசாலா எக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரீ இருக்காம், சிகரட் குடோன் இருக்காம், ஏலகிரில ஒரு பண்ணை வீடு இருக்காம், ஏதோ சின்னதா வருமானமே இல்லாத ஒரு இன்ஜினீயரிங் காலேஜ் கூட இருக்காம். இது தவிர 10 இடத்துல வீடு, கடைன்னு இருக்குதாம்.

இப்போ அவங்க எவ்வளவு மாசம் சம்பளம் வாங்குனாங்க, எவ்வளவு சேர்த்து வைச்சாங்க நு விசாரிச்சு பொது மக்களுக்கு சொன்னா, நாங்களும் அதே மாதிரி முன்னுக்கு வருவோம்ல. அப்புறம் பால் விலையை நூறுக்கு ரூவாய்க்கு ஏத்துனா கூட நாங்க விலைக்கு வாங்குவோம்ல, நீங்க என்னாங்க பேருந்து கட்டணத்தை ஏத்துறது...நாங்க ஆளாளுக்கு ஒரு பேருந்தே வாங்குவோம்ல. என்ன நான் சொல்றது?

உண்மையிலேயே MA BL படிச்ச ஒரு வழக்கறிஞர் வீட்டுல இந்த அளவுக்கு வருமானம் வருமா? இவருக்கே இவ்வளவு வருமானம் என்றால், இவரை விட பவர் ஜாஸ்தியா இருக்கிற ஆளுகளுக்கு எல்லாம் எவ்வளவு இருக்கும், எங்கெங்கே சொத்து இருக்கும், சென்னை அடையாருலே 1000 சதுர அடி கொண்ட வீடை வாங்குறதுக்கு ரேட்டு விசாரிச்சு பாருங்க, எவ்வளவு மதிப்பு இருக்கும்?


இன்னொரு விசயமும் புரிய மாட்டேங்குது, அதிகாலையிலே யாருக்கும் தெரியாம ரைடு போறப்ப அதுக்கு முன்னாடியே அங்கே பாதுக்காப்புக்கு வழக்கறிஞர்கள் இருக்காங்கன்ன அவங்களுக்கு அந்த ரகசியத்த சொன்ன அந்த "கருப்பு ஆடு" யாரு? அவனை நடுரோட்ட்ல கட்டி வைச்சு அடிக்கணும். சம்பளம் வாங்குறது அரசாங்கத்துக்கு, வேலை செய்யுறது இன்னொருத்தனுக்கா? இதையும் அப்பால டீல் பண்ணிக்கலாம். 

எல்லாம் அனுபவிச்ச பிறகு இது பழிவாங்குற நடவடிக்கை னு சொல்லிக்க வேண்டியது. இது நல்லா இருக்குல்ல, இப்படி ஒவ்வொருத்தரையும் விசாரிச்சாதான் குறைஞ்சது ஓட்டு போட்ட ஜனங்களுக்கு, ஏன் அவருக்கு ஜால்ரா போடுற கொத்தடிமைகளுக்கு கூட "அடேங்கப்பா" அப்படீன்னு விஷயம் புரியும். அதுவரைக்கும் தலைவன் வீட்டுல ரெய்டு போனாலே தீக்குளிக்கிற ஜென்மம் எல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்கு. என்ன செய்யுறது? அது வேற டிபார்ட்மென்ட், அதை அப்பால பேசிக்குவோம்.
இந்த அம்மா பழி வாங்குற கேரக்டருனு நல்லா தெரியும்ல, அப்புறம் ஏன் வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கணும், அப்போ தெரிஞ்சே தான் தப்பு பண்றீங்க, அப்புறம் பழிவாங்குற நடவடிக்கை னு சொல்லி தப்பிக்கணும், அது என்ன கான்செப்ட் னு புரியலை, அப்புறம் இந்த மாதிரி வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கறத யார்தான் கண்டுபிடிச்சி கேள்வி கேக்குறது? நாங்க கேட்டா எதிர்க்கட்சி சதின்னு சொல்ல வேண்டியது...இல்லேனா என் பரம்பரை சொத்தை அழிச்சி நாயா பேயா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வைக்க வேண்டியது, அப்புறம் யார்தான் கேள்வி கேக்குறது...இப்படி எப்பயாவது கேட்டாத்தான் உண்டு.

உங்களை எதுக்கு அவங்க பழி வாங்கணும், நீங்க நேர்மையா சம்பாதிச்சிருந்தா கணக்கை காட்டிக்கிட்டு போக வேண்டியதுதானே..சரி அவங்க தப்பு பண்ணி இருந்தா நீங்க கேள்வி கேட்டு இதே மாதிரி மடக்கி பிடிக்க வேண்டியதுதானே..இது இன்னிக்கு நேத்து நடக்கலை...ஒவ்வொரு ஆட்சி மாற்றம் நடக்குறப்பவும் இது நடக்குது..உங்க ஆட்சியிலே அந்த அம்மா போட்டிருந்த செருப்பு வரைக்கும் படம் பிடிச்சு காட்டுனீங்க..இப்போ உங்க வீட்டுல காட்டுறப்ப கடுப்பா இருக்கா.

இது சேலையை பிடிச்சி இழுத்ததுக்கு பழி வாங்குறாகளா, இல்லே சொத்து எவ்வளவு சேர்த்திருக்கீங்க னு காண்பிக்க பழி வாங்குறாகளா, யாருக்கு தெரியும்? ஆனா மக்களுக்கு தெரியும்...ஒவ்வொரு கட்சிகாரனும் மக்களுக்கு செய்யுறீங்களோ இல்லையோ, உங்க மக்களுக்கு (பிள்ளை செல்வங்களுக்கு) கரெக்டா சேர்த்து வைக்கிறீங்க னு மட்டும் தெளிவா புரியுது.

நடக்கட்டும், நடக்கட்டும்.. லஞ்ச ஒழிப்பு துறை னு ஒன்னு இருக்குதுன்னு அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் தெரியுது..இனிமே அடுத்த அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் இவங்களுக்கு டியூட்டி. ரொம்ப நல்லா இருக்கு இந்த ஜாப். இதுக்கு எப்படி அப்ளை பண்ணனும்?

தகவல்களுக்கு நன்றி 

http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1295-3280660.htm

http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1295-3280371.htm

9 comments:

  1. இன்னொரு விசயமும் புரிய மாட்டேங்குது, அதிகாலையிலே யாருக்கும் தெரியாம ரைடு போறப்ப அதுக்கு முன்னாடியே அங்கே பாதுக்காப்புக்கு வழக்கறிஞர்கள் இருக்காங்கன்ன அவங்களுக்கு அந்த ரகசியத்த சொன்ன அந்த "கருப்பு ஆடு" யாரு?

    Good post.

    Have to think abt it

    ReplyDelete
  2. ஏன் வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கணும்,
    பரம்பரை சொத்தை அழிச்சி நாயா பேயா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வேண்டியது, இது அம்மாவுக்கும பொருந்தும்தானே!

    ReplyDelete
  3. //Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

    இன்னொரு விசயமும் புரிய மாட்டேங்குது, அதிகாலையிலே யாருக்கும் தெரியாம ரைடு போறப்ப அதுக்கு முன்னாடியே அங்கே பாதுக்காப்புக்கு வழக்கறிஞர்கள் இருக்காங்கன்ன அவங்களுக்கு அந்த ரகசியத்த சொன்ன அந்த "கருப்பு ஆடு" யாரு?

    //



    சரியான கேள்வி
    வணக்கத்துடன் :
    ராஜா

    விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

    ReplyDelete
  4. உண்மைதாங்க இந்த தொழிலில் மட்டுமல்ல பிழைக்க தெரிந்த அரசியல்வாதிகளை கையில் வைத்திருக்கும் அத்தனைபேரும் ஊழல் வாதிகளே...

    இவர்களை உண்மையில் களையெடுக்க வேண்டும்..

    ReplyDelete
  5. ரொம்ப அவசரப்படாதீங்க.
    ரெய்டு என்பது ஒரு மிரட்டல் பண்ண உதவும் கருவி மட்டுமே. ஏனெனில், ரெய்டு பண்ணி என்னதான் கைப்பற்றினாலும் கேசு முடிய பத்தாண்டுகளுக்கு மேலாகும். இதற்கிடையில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறும். இது ரெய்டு பண்ணுகிறவனுக்கும் பண்ணப்படுகிறவனுக்கும் தெரியுமே.
    எல்லாக்கட்சிக்காரனும் அவனவன் கட்சி ஆளும்போது சேர்க்கிறான். ரெய்டு நடந்தால் அதாவது ஆட்சி மாறியபின், எல்லாருமே தன்னைப் பழிவாங்கத்தான் என்று கூக்குரலிடுவார்கள்.
    இருநாட்களுக்கு முன் விசாரணையில் கோர்ட்டில் செயா சொன்னதும் அதே: என்னைப்பழிவாங்க கருநாநிதி அரசு போட்ட பொய்க்கேசுதான் இது. இது எப்டியிருக்கு? ஏன் பதிவு போடலை ?

    ReplyDelete
  6. /// passerby said...

    ரொம்ப அவசரப்படாதீங்க.
    ரெய்டு என்பது ஒரு மிரட்டல் பண்ண உதவும் கருவி மட்டுமே. ஏனெனில், ரெய்டு பண்ணி என்னதான் கைப்பற்றினாலும் கேசு முடிய பத்தாண்டுகளுக்கு மேலாகும். இதற்கிடையில் ஆட்சிகளும் காட்சிகளும் மாறும். இது ரெய்டு பண்ணுகிறவனுக்கும் பண்ணப்படுகிறவனுக்கும் தெரியுமே.
    எல்லாக்கட்சிக்காரனும் அவனவன் கட்சி ஆளும்போது சேர்க்கிறான். ரெய்டு நடந்தால் அதாவது ஆட்சி மாறியபின், எல்லாருமே தன்னைப் பழிவாங்கத்தான் என்று கூக்குரலிடுவார்கள்.
    இருநாட்களுக்கு முன் விசாரணையில் கோர்ட்டில் செயா சொன்னதும் அதே: என்னைப்பழிவாங்க கருநாநிதி அரசு போட்ட பொய்க்கேசுதான் இது. இது எப்டியிருக்கு? ஏன் பதிவு போடலை ? ///
    மன்னிச்சிகோங்க தலைவரே,

    தப்புதான். அன்னிக்கே அந்த அம்மாவிற்கு தீர்ப்பு வந்து உள்ளே போயிடும்னு எதிர்பார்த்தேன். கடைசியிலே தீர்ப்பை தள்ளி வச்சிட்டாங்க. என் பார்வையிலே திமுகவும் ஒண்ணுதான், அதிமுகவும் ஒண்ணுதான். ஆனா இப்போ நடக்கிற ரைடுல குறைஞ்சது நீங்க சொல்ற அந்த மிரட்டலையாவது அந்த அம்மா பண்ணுதே..அதை நினைச்சு சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான். நீங்களும், நானும் நினைச்சா இப்படி எல்லாம் மிரட்ட முடியுமா?

    ReplyDelete
  7. /// Anonymous said...

    ஏன் வருமானத்துக்கு மீறி சம்பாதிக்கணும்,
    பரம்பரை சொத்தை அழிச்சி நாயா பேயா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைய வேண்டியது, இது அம்மாவுக்கும பொருந்தும்தானே! ///

    கண்டிப்பா இது ஊழல் பண்ற எல்லா பெருச்சாளிகளுக்கும் பொருந்தும்...அந்த அம்மாவிற்கு இருக்கு ஆப்பு, அது அடுத்த ஐஞ்சு வருஷம் கழிச்சுத் தான் தெரியும். மனசுக்குள்ள என்ன சந்தோசம்னா இந்த மாதிரி ரைடுலதான் எந்த அரசியல்வாதிகிட்டே பொது மக்கள் என்னென்ன இழந்திருக்காங்க நு தெரிய வரும்., அதையாவது தெரிஞ்சிப்போமே..

    ReplyDelete
  8. /// "என் ராஜபாட்டை"- ராஜா said... சரியான கேள்வி
    வணக்கத்துடன் :
    ராஜா ///

    நன்றி தோழா!

    ReplyDelete
  9. /// கவிதை வீதி... // சௌந்தர் // said...

    உண்மைதாங்க இந்த தொழிலில் மட்டுமல்ல பிழைக்க தெரிந்த அரசியல்வாதிகளை கையில் வைத்திருக்கும் அத்தனைபேரும் ஊழல் வாதிகளே...

    இவர்களை உண்மையில் களையெடுக்க வேண்டும்.. ///

    இவர்களை களைந்து எடுப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல..ஆனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதே கேள்விக்குறி??

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...