என்ன தலையை சுத்துதா?
இது ஏதோ வெளிநாட்டு சரக்கோ அல்லது ஏதாவது பிரபலம் குடிச்ச எச்சி பாக்கெட் ஏலத்துல வந்ததோ கிடையாதுங்க..நம்ம உள்ளூருல ரெடியான போலி ஐஎஸ்ஐ முத்திரை மாடல் குத்தின ஆடுனரி காலி வாட்டர் பாக்கெட்டு தாங்க???

போன வாரம் வரை நம்ம சென்னையிலே அடிச்ச வெயில்ல அவனவன் தண்ணிக்கு என்னமா அலைஞ்சானு அவனுகளுக்குத் தான் தெரியும்..கிடைச்ச ஜூசை எல்லாம் குடிச்சி வைச்சானுங்க..வாட்டர் பாக்கெட் 3 ரூவாய் நா கூட வாங்கி குடிச்சானுங்க.

அப்படி எவனோ அல்லது எவளோ குடிச்சி போட்ட காலி வாட்டர் பாக்கெட்டோட விலைதான் இன்னிக்கு 68750 ரூவாய்??!!!??
அதுல என்னாங்க அப்படி ஒரு விசேசம், அந்த பாக்கெட்டு தங்கத்துல செஞ்சதாங்க, இல்லையே...அப்புறம் எப்படி???
போன வாரம் வரைக்கும் வெயிலுக்கு தாகத்துக்கு குடிச்சிட்டு ரோட்டுல போட்ட காலி பாக்கெட்டுல நேத்திக்கு பெய்ஞ்ச சின்ன தூறல்ல நல்லா வழு வழு னு மின்னிக்கிட்டு இருந்துச்சி..
ஐயையோ, மழை பெய்ய ஆரம்பிச்சிட்டே னு ஒரு குடும்பம் (அப்பா, 3 வயசு பொண்ணு , அந்த பொண்ணோட அம்மா ) பைக்குல வேகமா போயி அந்த ரோட்டுல மின்னிக்கிட்டு இருந்த காலி வாட்டர் பாக்கெட்டுல ஏறியதும் சும்மா காஷ்மீர் பனிச் சறுக்குல சறுக்குற மாதிரி சும்மா பத்தடி தூரத்துக்கு சறுக்கி போக மூணு பேரையும் ஆம்புலன்சுல தூக்கி போட்டு தனியார் ஆசுபத்திரி போனாங்க..அங்கே மூணு பேருக்கும் பார்த்த வைத்தியத்துக்கு வந்த பில்லுதாங்க இந்த 68750 ரூவாய்.
இப்போ சொல்லுங்க வாட்டர் பாக்கெட்டோட விலை கரெக்ட்டுதானே?
நான் இதை சொன்னதும் என்னோட பிரண்டு ஒரு விஷயம் சொன்னான்? காலி வாட்டர் பாட்டில் 14300 ரூவாய் னு.. அதை அவன் வாங்குனானாம், ஒரு வாட்டர் பாட்டில் காத்துல உருண்டு வந்துச்சாம், இவனோட பைக்கு அதுல ஏறினதும் இவன் ஜிஹெச்சு வில கிடந்தானாம், இவனோட கை அகால மரணம் அடைஞ்சதால கைக்கும், கழுத்துக்கும் மாலை போட்டு (அதாங்க ஹான்ட் பிராக்சர்) கூடவே வாட்டர் பாட்டிலுக்கு பில்லு 14300 போட்டு அனுப்பி வைச்சிட்டான்களாம்...
ஆனா இதுல பாருங்க...காலி வாட்டர் பாட்டிலை விட காலி வாட்டர் பாக்கெட்டுக்கு விலை ஜாஸ்திங்க, பொது மக்களே நீங்க 2 ரூவாய்க்கு வாங்கி தூர போடுற வாட்டர் பாக்கெட்டு இன்னொருத்தன் குடும்பத்துக்கு ஆயிரக்கணக்குல, சில சமயத்துல லட்சக்கணக்குல கூட செலவாகி போகுது.

அதுனால மக்களே, தண்ணி நிறைய குடிங்க, ஆனா குடிச்ச கையோட அந்த வாட்டர் பாட்டில அல்லது வாட்டர் பாக்கெட்டை குப்பை தொட்டியிலே போடுங்க.. முடிஞ்சா பாதுக்காப்பா தூர போடுங்க
பாவம் அது குழந்தை, இன்னமும் வலியால துடிச்சிக்கிட்டுத் தான் இருக்கு. அதுவே நம்ம குழந்தையா இருந்தா என்ன பண்ணுவீங்க????