பங்காளிங்க..

Tuesday, June 26, 2012

ஒரு பையன்! ரெண்டு பொண்ணு!!!!

ஆணும் பெண்ணும் சரி சமம் என்று எந்த அர்த்தத்தில் பாரதியார் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் இன்று ஆண்களை, ஆண் நண்பர்களை மிஞ்சும் அளவிற்கு கல்லூரி, பள்ளிப் பெண்களின், இளைஞிகளின் நிலை மாறிக் கொண்டு வருகின்றது. சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த விஷயம் சர்வ சாதாரணமாய் பரவி வருவது கலாச்சார ஆரோக்கியத்திற்கு உகந்ததாய் தெரியவில்லை. ஒரு இளைஞன் ஒரு இளைஞி யோடு சுற்றுவது என்பது தற்போது மிகவும் அரியதாகி விட்டது. குறிப்பாய் கல்லூரிகளில் வலம் வரும் கல்லூரித் தோழிகள் உடன் இருக்கும் தோழிகளை அவனது காதலனோடு சேர்த்து வைக்க செய்யும் அலம்பல்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றது,

சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரு பையன் ரெண்டு பொண்ணு என்ற விகிதாரத்தில் தான் சுற்றுகின்றார்கள். இரண்டு பெண்களில் ஒருத்தி அந்த பையனின் காதலியாம், மற்றொருத்தி தோழியின் காதலுக்கு கூடவே இருக்கும் தூதுவாம். நடமாடும் தூதுவர்  என்ற போஸ்டிங்கில் கூடவே ஒட்டியிருக்கும் அந்த தோழி எந்த காதலிலும் ஈடுபடாமல் நல்ல பிள்ளை போன்று வீட்டில் இருந்து கொள்வாள். ஆனால் அவளது தோழியிடம் மட்டும் ஏய், அவன் உன்னைத்தாண்டி பாக்குறான், உன்கிட்டே பேசணும்னு ஆசைப்படுறான், நீ இல்லேனா அவன் செத்திடுவாண்டி, அவனோட காண்டாக்ட் நம்பர் தாரேன், ஒருவாட்டி பேசிப் பாரு, பிடிக்கலேனா விட்டுடு என்று சொல்லி உசுப்பேத்தி விடும் வேலை. இந்த வேலையை செய்வதற்கு அந்த பையன் இவளுக்கு செல் போன்,  ஆனால் இந்த காதலிக்கும் பெண்ணின் வாழ்க்கையை நிர்ணயிப்பவள் இந்த தூது செல்லும் பெண்தான்.

அவளுடைய காதலன் தற்போது எங்கு இருக்கின்றான்? அவன் தற்போது எந்த தியேட்டரில் இருக்கின்றான்? எந்த பிரவ்சிங் சென்டரில் உட்காந்திருக்கின்றான்? எந்த கடையினில், எந்த ஹோட்டலில், எந்த பார்க்கில் இருக்கின்றான் என்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பது தான் இந்த பெண்ணின் வேலை. கிட்டத்தட்ட "அத்தை" (மாமாவிற்கு எதிர்ப்பதம்) வேலை பார்த்துகொண்டிருப்பாள். கேட்டால் அவன் அவள் மீது உயிரையே வைத்திருக்கின்றான் என்று கதை விடுவது. அடிக்கடி குரூப் ஸ்டடி என்று அழைத்து கொண்டு அவளை அவனது காதலனோடு சேர்த்து வைப்பது,

பசங்களும் அதைத்தானே செய்கின்றார்கள், நாங்கள் செய்தால் அதில் என்ன தவறு இருக்கின்றது? இது ஆணாதிக்கம் என்று ஒரு சிலர் குமுறுவார்கள். பசங்களும் இதே தவறை செய்வார்கள்? ஆனால் பிரச்சினை என்று வரும் போது போலீஸ் ஸ்டேசன் வரை கூட வரத் தயாராவார்கள். ஆனால் பெண்களால், இந்த தோழிகளால் வர முடியுமா? நான்கு பசங்க சேர்ந்து காதல் திருமணம் நடத்தி வைத்த வரலாறு பல உண்டு!!!! ஆனால் நாலு தோழிகள் சேர்ந்து தனது தோழிக்கு திருமணம் செய்து வைத்து கடைசி வரை கூடவே நின்ற காதல்கள் மிக மிக குறைவு.

இந்த காதல் உடந்தைக்கு அந்த தோழிகளுக்கு கிடைக்கும் சன்மானம் என்பது செல் போன், செல் போன் ரீ-சார்ஜ், அவ்வப்போது சாப்பாடு, சுடிதார், சாரி, தியேட்டரில் இலவச படம், கோன் ஐஸ்.

இதற்க்கு பரிகாரமாய் அவர்கள் செய்வது தோழியை இழுத்து விடுவது, அவ்வப்போது குரூப் ஸ்டடி என்ற போர்வையில் வீட்டினில் இருந்து வெளியே அழைத்து வருவது, கான்பரன்ஸ் கால் போட்டு கொடுத்து காதலன், காதலியை பேச செய்வது, காதலன் எந்த தொந்திரவுமின்றி காதல் (சில சமயங்களில் காமம்) செய்ய கூடவே இருப்பது போன்றவை.


இந்த மாதிரியான விசயங்களால், அந்த காதலியால் உண்மையான காதலனை பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போகின்றது. காரணம் நமது தோழிக்கு தான் அவனை பற்றி எல்லாமே தெரியுமே என்ற நம்பிக்கையில் தன்னையே இழக்கும் பரிதாபங்கள் பல இன்று சென்னையில் இருக்கின்றது.

ஆகவே பெற்றோர்கள் தனது மகளின், மற்றும் மகளின் தோழிகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் கொள்ளல் வேண்டும். தற்போதைய சூழல் அவ்வாறு உள்ளது. என் மகளை நான் சந்தேகப் படுவதா? என்று கேட்டால் அப்புறம் காலம் முழுவதும் நாம் எல்லோரையுமே சந்தேகப் பட வேண்டியிருக்குமே! தன மகளின் எதிர்காலத்திற்கு, அவளது வசந்த காலத்திற்காக நாம் அவளின் நடவடிக்கைகளில் கவனம் அல்லது அக்கறை கொண்டால் அவள் என்றுமே நம்மோடு இருப்பாள். இல்லையெனில்?????? அவள் பறந்து போனாளே...!!!

அப்படியெனில் நீ காதலுக்கு எதிரியா என்று கேட்காதீர்கள். காதலன், காதலி நேரிடையாக சந்தித்து காதல் செய்யுங்கள். தூதுவரை மட்டும் நம்பி காதல் செய்யாதீர்கள்.

14 comments:

  1. ///"அத்தை" (மாமாவிற்கு எதிர்ப்பதம்)////

    சூப்பர் கண்டுபிடிப்பு...

    ReplyDelete
  2. anubavamo?

    nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete
  3. உண்மைதான்! பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் நல்ல, தேவையான பதிவு!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. உண்மைதான் பாஸ் இந்த தூது பார்ட்டி இருக்கே அது...ரொம்ப ரொமப கடுப்பேத்துற பார்ட்டி

    நல்ல விழிப்புனர்வு பதிவு....தொடருங்கள்

    ReplyDelete
  5. ஆகவே பெற்றோர்கள் தனது மகளின், மற்றும் மகளின் தோழிகளின் நடவடிக்கைகளில் சற்று கவனம் கொள்ளல் வேண்டும். தற்போதைய சூழல் அவ்வாறு உள்ளது. என் மகளை நான் சந்தேகப் படுவதா? என்று கேட்டால் அப்புறம் காலம் முழுவதும் நாம் எல்லோரையுமே சந்தேகப் பட வேண்டியிருக்குமே!


    மிகச் சரியான கருத்து
    இது புரியாமல் போவோர்க்கு உதவாம போகும்
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்ல அறிவுரை..

    ReplyDelete
  7. /// Anonymous HOTLINKSIN.COM திரட்டி said...

    ///"அத்தை" (மாமாவிற்கு எதிர்ப்பதம்)////

    சூப்பர் கண்டுபிடிப்பு... ///

    என்ன செய்யுறது தலைவா? இவங்களும் புதுசு புதுசா செய்யுறாங்க...நாமளும் அதுக்கு ஏத்த மாதிரி வார்த்தைய கண்டுபிடிக்க வேண்டி இருக்குது..

    ReplyDelete
  8. /// Anonymous Anonymous said...

    anubavamo?

    nagu
    www.tngovernmentjobs.in ///

    anubavam illai, vethanai

    ReplyDelete
  9. /// புலவர் சா இராமாநுசம் said...

    உண்மைதான்! பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் நல்ல, தேவையான பதிவு!

    சா இராமாநுசம் ///

    வணக்கம் ஐயா... உங்கள் ஆதரவிற்கு நன்றி

    ReplyDelete
  10. /// சிட்டுக்குருவி said...

    உண்மைதான் பாஸ் இந்த தூது பார்ட்டி இருக்கே அது...ரொம்ப ரொமப கடுப்பேத்துற பார்ட்டி

    நல்ல விழிப்புனர்வு பதிவு....தொடருங்கள் ///

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. /// Ramani said...

    மிகச் சரியான கருத்து
    இது புரியாமல் போவோர்க்கு உதவாம போகும்
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள் ///

    புரியாமல் போகாது..ஆனால் ஏற்றுக் கொள்ளாமல் போக வாய்ப்புகள் இருக்கின்றது..

    ReplyDelete
  12. /// திண்டுக்கல் தனபாலன் said...

    கண்காணிப்பு இருக்க வேண்டும்... நல்ல பகிர்வு சார் ! நன்றி ! ///

    அறிவுரை வழங்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல, வேதனையை பகிர்ந்து கொள்கின்றேன்..

    ReplyDelete
  13. /// கோவி said...

    நல்ல அறிவுரை.. ///

    அறிவுரை வழங்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...