பங்காளிங்க..

Friday, June 29, 2012

ஒரு வாட்டர் பாக்கெட் விலை 68750 ரூவாய்????

என்ன தலையை சுத்துதா? 

இது ஏதோ வெளிநாட்டு சரக்கோ அல்லது ஏதாவது பிரபலம் குடிச்ச எச்சி பாக்கெட் ஏலத்துல வந்ததோ கிடையாதுங்க..நம்ம உள்ளூருல ரெடியான போலி ஐஎஸ்ஐ முத்திரை மாடல் குத்தின ஆடுனரி காலி வாட்டர் பாக்கெட்டு தாங்க???

போன வாரம் வரை நம்ம சென்னையிலே அடிச்ச வெயில்ல அவனவன் தண்ணிக்கு என்னமா அலைஞ்சானு அவனுகளுக்குத் தான் தெரியும்..கிடைச்ச ஜூசை எல்லாம் குடிச்சி வைச்சானுங்க..வாட்டர் பாக்கெட் 3 ரூவாய் நா கூட வாங்கி குடிச்சானுங்க.

அப்படி எவனோ அல்லது எவளோ குடிச்சி போட்ட காலி வாட்டர் பாக்கெட்டோட விலைதான் இன்னிக்கு 68750 ரூவாய்??!!!??

அதுல என்னாங்க அப்படி ஒரு விசேசம், அந்த பாக்கெட்டு தங்கத்துல செஞ்சதாங்க, இல்லையே...அப்புறம் எப்படி???


போன வாரம் வரைக்கும் வெயிலுக்கு தாகத்துக்கு குடிச்சிட்டு ரோட்டுல போட்ட காலி பாக்கெட்டுல நேத்திக்கு பெய்ஞ்ச சின்ன தூறல்ல நல்லா வழு வழு னு மின்னிக்கிட்டு இருந்துச்சி..

ஐயையோ, மழை பெய்ய ஆரம்பிச்சிட்டே னு ஒரு குடும்பம் (அப்பா, 3 வயசு பொண்ணு , அந்த பொண்ணோட அம்மா ) பைக்குல வேகமா போயி அந்த ரோட்டுல மின்னிக்கிட்டு இருந்த காலி வாட்டர் பாக்கெட்டுல ஏறியதும் சும்மா காஷ்மீர் பனிச் சறுக்குல சறுக்குற மாதிரி சும்மா பத்தடி தூரத்துக்கு சறுக்கி போக மூணு பேரையும் ஆம்புலன்சுல தூக்கி போட்டு தனியார் ஆசுபத்திரி போனாங்க..அங்கே மூணு பேருக்கும் பார்த்த வைத்தியத்துக்கு வந்த பில்லுதாங்க இந்த 68750  ரூவாய்.

இப்போ சொல்லுங்க வாட்டர் பாக்கெட்டோட விலை கரெக்ட்டுதானே?


நான் இதை சொன்னதும் என்னோட பிரண்டு ஒரு விஷயம் சொன்னான்? காலி வாட்டர் பாட்டில் 14300 ரூவாய் னு.. அதை அவன் வாங்குனானாம், ஒரு வாட்டர் பாட்டில் காத்துல உருண்டு வந்துச்சாம், இவனோட பைக்கு அதுல ஏறினதும் இவன் ஜிஹெச்சு  வில கிடந்தானாம், இவனோட கை அகால மரணம் அடைஞ்சதால கைக்கும், கழுத்துக்கும் மாலை போட்டு (அதாங்க ஹான்ட் பிராக்சர்) கூடவே வாட்டர் பாட்டிலுக்கு பில்லு 14300  போட்டு அனுப்பி வைச்சிட்டான்களாம்...

ஆனா இதுல பாருங்க...காலி வாட்டர் பாட்டிலை விட காலி வாட்டர் பாக்கெட்டுக்கு விலை ஜாஸ்திங்க, பொது மக்களே நீங்க 2 ரூவாய்க்கு வாங்கி தூர போடுற வாட்டர் பாக்கெட்டு இன்னொருத்தன் குடும்பத்துக்கு ஆயிரக்கணக்குல, சில சமயத்துல லட்சக்கணக்குல கூட   செலவாகி போகுது.

அதுனால மக்களே, தண்ணி நிறைய குடிங்க, ஆனா குடிச்ச கையோட அந்த வாட்டர் பாட்டில அல்லது வாட்டர் பாக்கெட்டை  குப்பை தொட்டியிலே போடுங்க.. முடிஞ்சா பாதுக்காப்பா தூர போடுங்க

பாவம் அது குழந்தை, இன்னமும் வலியால துடிச்சிக்கிட்டுத் தான் இருக்கு. அதுவே நம்ம குழந்தையா இருந்தா என்ன பண்ணுவீங்க????

8 comments:

 1. சரிதான் பாஸ், நானும் சிலசமயம் தூர எறிஞ்சு இருக்கேன், இனிமேல் சரி பண்ணிக்கிறேன், நல்ல பகிர்வு, நன்றி

  ReplyDelete
 2. VERY IMPORTANT MATTER OUR SOCIETY

  KEEP IT UP

  ReplyDelete
 3. /// இரவு வானம் said...

  சரிதான் பாஸ், நானும் சிலசமயம் தூர எறிஞ்சு இருக்கேன், இனிமேல் சரி பண்ணிக்கிறேன், நல்ல பகிர்வு, நன்றி ///

  விபத்தினை நேரினில் பார்த்ததில் மனசு வலிக்கின்றது. அதுதான் இந்த கட்டுரை.

  ReplyDelete
 4. /// MUTHU said...

  VERY IMPORTANT MATTER OUR SOCIETY

  KEEP IT UP ///

  YES YOU ARE RIGHT! THANKS FOR YOUR OPINION

  ReplyDelete
 5. /// திண்டுக்கல் தனபாலன் said...

  நல்ல எழுத்து நடை மூலம், நடந்த விபரீதங்களை சொல்லி உள்ளீர்கள். இவை ஒரு புறம் இருக்க, ஹைவேஸ்ஸில் இருபுறமும் போடுவதால், மண்ணின் வளம் கேட்டுப் போகிறது. நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே ! ///

  நன்றி தோழரே,

  பார்த்த சம்பவத்தை பகிர்ந்து கொள்தல் என்பது எனக்கு பிடித்த விடயம் ஆகும். யாருக்காவது, எப்போதாவது இது நிச்சயம் பயன்படுமே.

  ReplyDelete
 6. விழிப்புணர்வு தரும் எச்சரிக்கை பகிர்வுக்க்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 7. All should take a pledge, Hereafter i won't throw anything in the road or pathway.Only two stories here, but "many" not known by others.When they see, or affect then only they know. Please don't throw anything when you are in travelling.

  Thank you for your sharing.

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...