காங்கிரசுக்கு அப்புறம் தமிழ்நாட்டு மக்களை பாடா படுத்தினது இந்த டெங்கு காய்ச்சல்தாங்க...
ச்சே, நம்ம உறவுகள் 50 க்கும் மேல சாகடிச்சிடுச்சே!!!. குறிப்பா இந்த கோடை மழை பெய்ஞ்ச ஊருல மட்டும் டெங்கு சும்மா புகுந்து விளையாடிடுச்சு...சென்னையிலே அந்த அளவுக்கு டெங்கு வரலை, என்ன காரணம்? ஏன்னா அங்கேதான் மழையே வரலையே...வெயிலு சும்மா பத்திக்கிட்டு எரியுதே. பிறவு எங்கிட்டு இருந்து டெங்கு வைரஸ் பரவும். அடிக்கிற வெயில்ல மனுசனே புழு மாதிரி பொசுங்கி சாவுறான்...அப்புறம் அந்த வைரஸ் எங்கே தலை எடுக்கும், நல்ல வேலை மெட்ராசுல மழை வரலையேன்னு நினைச்சி சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான்...
சரி இந்த டெங்கு பீவர் எங்கே இருந்து வருது? ஏற்கனவே பெய்ஞ்ச மழைத் தண்ணி தேங்கி...அது சாக்கடைத் தண்ணியா மாறி அதுல உற்பத்தி ஆகுற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணமாம்...இது எங்களுக்கு தெரியாதா..எத்தனை தடவை படிச்சிருக்கோம்னு சொல்றீங்களா...கோச்சிக்காதீங்க.. இது புதுசு...தண்ணி எங்கே தேங்கி இருந்தாலும் இந்த கொசு உற்பத்தியாகுமாம்..உதாரணமா வாட்டர் பாட்டில், டம்ளர், கட் பண்ணி வச்சிருக்கிற வாட்டர் பாக்கட், இப்படி எங்கே இருந்தாலும் அந்த கொசு முட்டை போட்டு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுமாம்..
சரி, இதுக்கு என்னதான் வழி? உங்களை மாதிரிதான் நானும் முழிச்சுகிட்டு இருந்தேன் போன வாரம் வரைக்கும். ஆனா இப்போ கொஞ்சம் தெம்பு வந்திருக்கு. ஊருல என்னோட பிரண்டோட தங்கச்சிக்கு டெங்கு டொங்குனு வந்திடுச்சு..
வழக்கம் போல சொந்தக்காரங்க எல்லோருமா போன் போட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க..நானும் தான் விசாரிச்சேன்..ஆனா நான் நேருல போயிட்டேன். ஊருக்கு போனப்ப அந்த பொண்ணோட அம்மாபாட்டியும் வந்திருந்தாங்க...எல்லோரும் என்ன செய்யிறதுன்னு தவிக்கிறப்ப, அந்த அம்மா அவங்களோட கைப்பக்குவத்தை ஆரம்பிச்சாங்க...
சரி, இதுக்கு என்னதான் வழி? உங்களை மாதிரிதான் நானும் முழிச்சுகிட்டு இருந்தேன் போன வாரம் வரைக்கும். ஆனா இப்போ கொஞ்சம் தெம்பு வந்திருக்கு. ஊருல என்னோட பிரண்டோட தங்கச்சிக்கு டெங்கு டொங்குனு வந்திடுச்சு..
வழக்கம் போல சொந்தக்காரங்க எல்லோருமா போன் போட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க..நானும் தான் விசாரிச்சேன்..ஆனா நான் நேருல போயிட்டேன். ஊருக்கு போனப்ப அந்த பொண்ணோட அம்மாபாட்டியும் வந்திருந்தாங்க...எல்லோரும் என்ன செய்யிறதுன்னு தவிக்கிறப்ப, அந்த அம்மா அவங்களோட கைப்பக்குவத்தை ஆரம்பிச்சாங்க...
- வீட்டுல இருக்கிற அனாவசியமா தேங்கி இருக்கிற தண்ணிய அடைச்சு வைச்சாங்க.
- பால் பாக்கட் சேர்த்து வைச்சதை உடனே காலி பண்ணாங்க...ஏன்னா அந்த பால் பாக்கட்டுல ஓட்டிகிட்டு இருக்கிற ஈரப்பசைல கூட கொசு வந்திடுமே.
- அடுத்தது வீட்டை சுத்தி எப்பவுமே மருந்து தெளிச்சுக்கிட்டே இருந்தாங்க..
- முத இரண்டு நாளா அசதியா இருந்த சின்னப்பொண்ணு கொஞ்சம் தெளிவாயிடுச்சு
- அடுத்தது ரொம்ப முக்கியமான ஒன்னு வீட்டுல எந்த இடத்திலேயும் ஈரத்துணிய நனைச்சு வைக்கவே இல்லை..
- அதுக்கப்புறமா ரொம்ப முக்கியமான விஷயம் பப்பாளி பழம் இலை இருக்கே, அந்த இலைய நல்லா அரைச்சு சாறு எடுத்தாங்க, அது நாத்தம் குடலை புடுங்குச்சு, அதை சூடு பண்ணலை, வெந்நில கூட வைக்கலை, அதை பச்சைத் தண்ணியோட கலந்து சாறு எடுத்து அதை குடிக்க சொன்னாங்க, ஒரு இலைய அரைச்சா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்குத்தான் சாறு வந்தது, ரெண்டு டேபிள் ஸ்பூன் சாரை எடுத்து கொடுத்தாங்க..
- அப்புறமா மதிய நேரம் ஒரு பப்பாளி பழ ஜூஸ் போட்டு கொடுத்தாங்க, என்ன ஆச்சரியம், ரெண்டு நாளுக்கு அப்புறம் எடுத்து பார்த்த பிளட் டெஸ்ட்ல நல்ல மாற்றம் தெரிஞ்சுதாம்..
- டாக்டர்ஸ் பேசன்ட்டோட பாட்டி கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க, அதுக்கப்புறமா வர்ற பேசன்ட்டுக்கிட்ட எல்லாம் இதையே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்..
எல்லோருக்கும் இது தெரியுமோ, தெரியாதோ எனக்கு தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உங்ககிட்டே சொல்லிடுறேன், வெறும் பப்பாளி ஜூஸ் குடிச்சா தப்பு இல்லேன்னுதான் நான் நினைக்கிறேன்..அதுனால நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இதை சொல்லிக் கொடுங்க..
டெங்குக்கு நான் மருந்து சொல்லிட்டேன், காங்கிரசுக்கு நீங்கதான் மருந்து சொல்லணும்!!!!???!!!!
பயனுள்ள பதிவு !
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
டெங்குக்கான பாட்டி வைத்தியத்தை பகிர்ந்ததுக்கு நன்றி
ReplyDelete