பங்காளிங்க..

Monday, February 18, 2013

நம்ம லூசா? அவங்க லூசா?

அது ஒரு விளையாட்டு மைதானம், ஓட்டப் பந்தயம் தொடங்கவிருக்கின்றது..

பெண்கள் பங்கு பெரும் ஓட்டப் பந்தயம் அது...கூட்டம் நிரம்பி வழிகின்றது. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு கூட்டம் கைதட்டி வரவேற்கின்றது...


எட்டு பெண்கள் தடத்தினில் வந்து அமருகின்றார்கள்...


போட்டி தொடங்கவிருக்கின்றது...நடுவர் வந்து எண்ணத் தொடங்குகின்றார்...


ஒன் .....


ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும் ஜெயிக்க வேண்டும் என்கின்ற வெறி...


டூ.....

இதோ கிளம்பத் தயார்!!!

திரீ.....

ஓடத் துவங்குகின்றார்கள்...

கூட்டத்தினர் விசில் பறக்கின்றது....


சும்ம்மாவே விசில் அடிப்பானுங்க...ஓடுறது பொண்ணுங்கன்னா சும்மாவா ?


திடிரென்று ஒரு வளைவினில் ஐந்தாவது தடத்தினில் ஓடும் பெண் கால் இடறி கீழே விழ..... கூட்டத்திற்குள் சலசலப்பு....


இருப்பினும் மீதமுள்ள ஏழு  ஓட்டப் பந்தய வீராங்கனைகளின் விசிறிகள் அவர்கள் விரும்பிய பெண்ணை தொடர்ந்து ஓடச் சொல்ல கத்துகின்றனர்.....


முதல் தடத்தினில் ஓடிய பெண், அப்படியே நிற்க, மீதமுள்ள 6 பெண்களும் ஓடுவதை நிறுத்திவிட்டு கீழே விழுந்த பெண்ணை நோக்கி செல்ல கூட்டத்தினர் கூப்பாடு போட......


ஓடியவர்கள் எதையுமே காதில் வாங்க வில்லை...நேராக அந்த கீழே விழுந்த பெண்ணை கைத்தாங்கலாய் தூக்கி கொண்டு மீண்டும் எட்டு பேரும்  சேர்ந்து வெற்றிக் கோட்டை நோக்கி ஓடி எட்டு பேரும் வெற்றிக் கோட்டை தொடவும் கூட்டத்தினர் கண்கள் பணித்தது.....


ஒரு நிமிடம் உணர்ச்சிப் பிழம்பில் தவித்துப் போனார்கள்.


இந்த கதை நல்லா இருக்கே? னு யோசிக்கிறீர்களா? இது கதையல்ல நிசம்...இது சொல்வதெல்லாம் உண்மை....


எங்கே தெரியுமா? இந்திய மனநல குன்றியோர் கல்வியகம், இந்த போட்டி நடந்த இடம் ஹைதராபாத்....


அந்த போட்டியில் பங்கு பெற்ற வீராங்கனைகள் யாவருமே மனநலம் குன்றியோர் என்று அழைக்கப் படும்  பெண்குழந்தைகள் 
....அவர்களை லூசு என்று சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைப் போன்ற விசிறிகளை என்னவென்று சொல்வது?


அவர்கள் இந்த செயல்பாட்டில் நமக்கு சொல்லித் தருவது என்ன? கூட்டுப்பணியா? 
மனிதாபிமானமா? அல்லது 
எல்லோரும் இவ்வுலகில் சமம் என்ற போதனையா?

யார் லூசு? அவர்களா? அல்லது நாமா?

உடனே ஒரு சில பதிவர்கள் இதற்க்கு ஆதாரம் கேட்பார்கள்....அவர்களுக்கு நான் திரட்டிய ஆதாரம், இது....
http://forums.fullhyderabad.com/viewtopic.php?p=202722

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...