பங்காளிங்க..

Thursday, December 6, 2012

38 ட்ரில்லியன் டாலர் ரூவாய் ஊழலா?

நபர் 1 : கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 2: மன்னிக்கணும் என்கிட்டே பணம் இல்லே!
நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 3 : மன்னிக்கணும், எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லே..
நபர் 1: கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?
நபர் 4: மன்னிக்கணும், என்கிட்டே பணம் இருக்கு, நேரம் இல்லே...

இது பெரும்பாலும் பலரும் சொல்ற பதில்...ஆனா மனமிருந்தால் மார்க்கமுண்டு......நான் ஒரு சில தகவல்களை சொல்றேன்...கூடுமானவரைக்கும் அதனை நகல் எடுத்து வச்சிக்கோங்க..பலருக்கு, ஏன் உங்களுக்கே கூட அது உதவி செய்யும்...உங்களாலேயும்  உதவி செய்ய முடியும்...கீழே இருக்கிற அந்த வழிகளை கொஞ்சம் பாருங்க..

சாலையிலே எங்கியாவது குழந்தைங்க பிச்சை எடுக்கிறாங்க நு வச்சிக்கோங்க...பார்த்து பரிதாபப் பட்டுட்டு போகாம  "ரெட் சொசைட்டி" ங்கிற அமைப்புக்கு 9940217816 இந்த எண்ணுக்கு அழைப்பு கொடுத்து தகவல் கொடுத்தா அவங்க வந்து கூட்டிக்கிட்டு போய்  கல்வி மற்றும் உதவிகள் செய்வாங்க..(இது குழந்தைங்களுக்கு மட்டும்) 
ஒரு வேளை  உங்களுக்கு ரத்த தானம் செய்யணும் அல்லது ரத்தம் வேணும்னு வச்சிக்கோங்க..அதுக்கு  www.friendstosupport.org  ங்கிற இணையத்துல உங்க பெயரை பதிவு செஞ்சு வச்சிக்கலாம்.

உங்க பிள்ளைங்க, சகோதர, சகோதரிங்க அல்லது தெரிஞ்சவங்களோட பிள்ளைங்க பொறியியல் பிரிவுல படிச்சு முடிச்சிட்டு வேலை இல்லாம இருந்தா அவங்களுக்கு www.campuscouncil.com ங்கிற இணைய முகவரியை கொடுத்து பதியச் சொல்லுங்க....சுமார் 40 நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு வச்சு வேலை கொடுக்க காத்துக்கிட்டு இருக்காங்க..

சாலையிலே எங்கியாவது மாற்றுத் திறனாளிகள்  கஷ்டப்பட்டுகிட்டு இருந்தா உடனே கீழ் கண்ட தொலைபேசி யில தகவல் கொடுத்தா அவங்க வந்து பார்த்துக்குவாங்க..

9842062501 & 9894067506


யாராவது தீவிபத்துல காயம் பட்டு அல்லது காது, மூக்கு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளனுமினா கொடைக்கானலில் இருக்கிற பாசம் மருத்துவமனையை தொடர்பு கொள்ள சொல்லுங்க...தொலைபேசி எண்கள் 045420-240668,245732 

யாராவது பாஸ்போர்ட், ரேசன் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது பேங்க் பாஸ் புக் அல்லது வாக்காளர் அட்டைய  கீழே கிடந்தது எடுத்தீங்கன்னா, யோசிக்காதீங்க...பக்கத்துல இருக்கிற போஸ்ட் பாக்ஸ் உள்ளே போட்டிருங்க..அவங்க சம்பந்தப் பட்டவங்க கிட்டே கொண்டு போய்  சேர்த்திடுவாங்க , கண்டிப்பா அபராதம் போடுவாங்க..அப்போதானே போஸ்ட் ஆபீசுக்கு வருமானம் வரும்..
பூமி சூடாகி கிட்டே வருது...உடனே அரசியல்வாதிங்க சரி இல்லேன்னு சொல்லிராதீங்க...ஆனா மரம் வளர்த்தா பூமியிலே இருக்கிற வெட்பம் தணிஞ்சிடுமாம்...ஒரு ரெண்டு வேப்ப  மரத்த நட்டுத்தான் வைங்களேன்...


38 ட்ரில்லியன் டாலர்...இது ஊழல் இல்லை..

உலகத்துல இருக்கிற எல்லா மனுசங்களும் சுவாசிக்க தேவைப்படுற ஆக்சிஜென் தயாரிக்க 38 ட்ரில்லியன் டாலர் வேணுமாம். ஆனா இலவசமா மரம் கொடுக்குமாம்..அந்த மரத்த நட்டு வச்சு பராமரிச்சா என்ன உங்களுக்கு?

கண்ணு வேணுமா? கண்ணு? இப்படி கண்ணு கொடுக்க ஆசைப்படுறவங்க அல்லது கண்ணு வாங்க ஆசைப்படுறவங்க என்ன செய்யனும்னா http://ruraleye.org/  இந்த இணையத்துல உங்க பெயரை பதிவு செய்யுங்க...அப்படி இணையதள வசதி இல்லாதவங்க? 04428281919 and 04428271616 இந்த எண்களுக்கு கூப்பிடுங்க...அவங்க சொல்லுவாங்க விவரத்தை..


பத்து வயசுக்குள்ள இருக்கிற பிள்ளைகளுக்கு இதய அறுவை சிகிச்சை பண்ணனுமா? விவரங்களுக்கு ஸ்ரீ வள்ளி பாபா மருத்துவமனை, பெங்களூரு க்கு தொடர்பு கொள்ளுங்க...  9916737471

ரத்த புற்று நோய்க்கு மருந்து அடையார் புற்றுநோய் மருத்துவனையிலே இலவசமா கிடைக்குதாம்...044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241 

வீட்டு, அலுவலக விசேசத்துல சாப்பாடு மிஞ்சி போச்சா சாமீ...கவலையேபடாதீங்க..1098 ங்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னீங்கன்னா அவங்க வந்து அந்த சாப்பாடை எடுத்துகிட்டு இல்லாத குழந்தைகளுக்கு கொடுத்திடுவாங்க.

ஆண்டவா இவரை காப்பாற்று என்று சொல்லும் உதடுகளை விட உன்னை நான் காப்பாற்றுகின்றேன் என்று செயல்படுத்தும் கைகளுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி புண்ணியங்கள் வந்து சேரும்....

3 comments:

  1. Excellent posting sir.i want eye donation details

    ReplyDelete
  2. Superb Post.. Gud work.. It wud help a lot indirectly. Thanks 4 d info.. !!!

    ReplyDelete
  3. Superb post sir,Most useful for those who lives in India s said give details for eye donation and other parts of a body (kidny for example)

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...