பங்காளிங்க..

Saturday, December 1, 2012

சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே??? எச்சரிக்கை!

பெண்கள் விரும்பும் உடல் அலங்காரத்தில் முக்கிய பங்கு வகிப்பது, உதட்டுச் சாயம். அந்த உதட்டுச் சாயம் உயிரை காவு வாங்கும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நாங்க ஒன்னும் முழுங்கிட மாட்டோம்...அதுனால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினை கிடையாது என்று நினைக்கின்றீர்களா? இதை போட்டாலே உங்களுக்கு ஆபத்துதான் என்று சொல்கின்றது..அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு.

என்னாங்கடா இது வம்பா போச்சு? உதட்டுச் சாயத்தை கண்டுபிடிச்சதே அவனுங்கதான்...இப்போ அவனுங்களே இது ஆபத்து னு  எப்படி சொல்றானுங்க? நியாயமான கேள்விதான்...நானும் அப்படி நினைச்சுதான் மேற்கொண்டு படிச்சேன்..
உலக அளவில் உதட்டுச் சாயம் விற்பனை ஆகின்றது. விற்பனையை அதிகரிக்க, வியாபார போட்டிகளில் பற்றாக்குறையை தவிர்க்க அவர்கள் தற்போது உள்ள உதட்டுச் சாயங்களில் லீட் (lead)  என்னும் கலவையை கலக்கின்றார்கள். இந்த லீட் உடலில் அதிக அளவில் இருந்தால் அது மார்பக புற்று நோயை உருவாக்கும் என்று அமெரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி செய்துள்ளது.

உதாரணமாக சொல்லப் போனால் அமெரிக்காவின் "ரெட் எர்த்" என்ற நிறுவனம் முன்னர் உதட்டுச் சாயத்தின் விலையை 67 டாலர் என்று அறிவித்தது. தற்போது வெறும் 10 டாலருக்கு அதிரடியாக குறைத்துள்ளது. 57 டாலரை குறைத்து அது எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்? அதில் தற்போது லீட் என்னும் வேதியியல் பொருளை அதிகம் கலப்பதால் விற்பனையில் அதிரடி தள்ளுபடி செய்திருக்கின்றது. லீட் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.

உதட்டுச் சாயத்தை மிக அடர்த்தியாக பயன்படுத்துவோருக்கு மிக விரைவினில் மார்பக புற்று நோய் உருவாகின்றது என்றும் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

CHRISTIAN DIOR
LANCME
CLINIQUE
Y.S.L
ESTEE LAUDER
SHISEIDO
RED EARTH (Lip Gloss)
CHANEL (Lip Conditioner)

MARKET AMERICA-MOTNES LIPSTICK.


இதை தமிழில் எழுத முடியாததற்கு மன்னிக்கவும்...மேற்கொண்ட ரகங்கள் அனைத்தும் லீட் என்னும் வேதியியல் பொருள் கலக்கப்படும் உதட்டுச் சாயங்களை கொண்டதாகும்.

நம்ம ஊருலதான் இந்த பேரே இருக்காதே..அப்போ யூஸ் பண்ணலாமா? அதுல லீட் கலந்திருக்குன்னு எப்படி கண்டுபிடிக்கிறது? அதுக்கு ஒரு வழி இருக்கு!

இப்படிப்பட்ட உதட்டுச் சாயத்தை கொஞ்சம் கையிலே தேய்ச்சிட்டு அதுல உங்க மோதிரத்தை வைச்சு தேய்ச்சீங்கன்னா அது கொஞ்ச நேரத்துல கருப்பு கலரா மாறிடுமாம். அப்படி மாறிடுச்சுனா அதுல லீட் என்னும் வேதியியல் பொருள் கலந்திருக்குன்னு அர்த்தம்.

அதுமட்டுமில்லாம இந்த லீட் கலந்த உதட்டுச்  சாயம் அதிக நேரம் நீடிச்சு நிற்குமாம். "லீட்" ல டை ஆக்சின் கார்சினொஜென்ஸ் புற்றுநோயை உருவாக்குமாம்.

நீங்கதான் சாயம் போடாமலே ரொம்ப அழகா இருக்கீங்களே? அப்புறம் எதுக்கு அந்த சாயம்? இப்போ சொல்லுங்க...சாயத்தை போட்டு சாவை வரவழைக்கனுமா என்ன? 

சத்தியமா  அளவுக்கு ஆராய்ச்சி பண்ற அளவுக்கு நான் பெரிய ஆளு எல்லாம் கிடையாது!
மவுன்ட் சினாய் மருத்துவமனை , டொராண்டோ
இந்த தகவலை வழங்கியது மருத்துவர். நாஹித் நேஹ்மான்..

4 comments:

  1. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்தான் தகவலுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

      Delete
  2. அனைவரும் அறிய வேண்டும்...

    நல்லதொரு பதிவு

    ReplyDelete
  3. //சாயம் போட்டு சாவைத் தேடும் சகோதரிகளே//

    தலைப்பு கவிதை


    நல்ல தகவல் - நன்றி

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...