சகோதர, சகோதரியின் அன்பு தெரிய வேண்டுமா?
சகோதர, சகோதரி இல்லாதவர்களிடம் கேட்டுப் பாருங்கள்..
பத்து வருடங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா?
புதிதாய் விவாகரத்து ஆனவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...
நான்கு வருடங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?
தற்போது கல்லூரியை விட்டு வந்த பட்டதாரியைக் கேட்டுப் பாருங்கள்...
ஒரு வருடத்தின் அருமை தெரிய வேண்டுமா?
கடைசி வருடத்தில் தோல்வியடைந்த மாணவனைக் கேட்டுப் பாருங்கள்...
பத்து மாதத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?
உங்களைப் பெற்றெடுத்த அன்னையைக் கேட்டுப் பாருங்கள்...
ஒன்பது மாதத்தின் வலி தெரிய வேண்டுமா?
குறைப் பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்ணைக் கேட்டுப் பாருங்கள்...
ஒரு வாரத்தின் பெருமை தெரிய வேண்டுமா?
முக்கியச் செய்தியை தவறவிட்ட வாரப் பத்திரிகை ஆசிரியரைக் கேட்டுப் பாருங்கள்....
ஒரு நிமிடத்தின் வலிமை தெரிய வேண்டுமா?
பயணம் செய்யப் போகும் வாகனத்தை தவற விடுபவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.....
ஒரு நொடியின் வேதனை தெரிய வேண்டுமா?
கண்ணெதிரே உறவுகளை விபத்தினில் இழப்பவரிடம் கேட்டுப் பாருங்கள்...
நேரம் நிலையாக இருக்காது...
ஆனால் தக்க நேரத்தில் வரும் பயன்கள், அதை நாம் மறக்காமல் தக்க வைத்துக் கொள்ளல் வேண்டும். துன்பங்களை மறக்க கூடாது..
நம்மை நேசிக்கும் அந்த உறவுகளை நாம் இறுக பற்றிக் கொள்வது அவசியம்....ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம்!!!!!
ம்..... சிவ சிவா
ReplyDelete