கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பாழா போன "பொருத்தம் பாக்குற" விஷயம்
வந்ததால இப்போ நிறைய குடும்பங்கள் குடும்ப நல நீதிமன்ற வாசல்ல
உக்காந்திருக்கு...ஏன் இந்த மானங்கெட்ட பொழப்பு??? நகரத்துல வாழ்றவங்களை
விட இந்த கிராமத்துல வாழுற பொண்ணுங்கதான் இந்த பொருத்தம் பாக்குற விசயத்துல
மாட்டிக்கிட்டு முழிச்சுகிட்டு இருக்காங்க..
என்னடா இது? இவன் சாதகம் பார்த்து கல்யாணம் செய்யுறத தப்பா சொல்றானே னு ஜோசியக்காரங்க படையெடுத்திராதீங்க.....நான் சொல்ற பொருத்தம் பாக்குறது வேற??? பெத்தவங்க பொருத்தம் பாக்குறது வேற...ஆனா இந்த மேற்கத்திய கலாச்சாரம் வந்ததும் பொண்ணுங்க, பசங்க பாக்குறாங்களே ஒரு பொருத்தம்...அதாங்க இந்த இங்கிலிபீஸ் வார்த்தை "டேட்டிங்".
இது எங்கன போய் முடியுது தெரியுமா? படுக்கையிலே போயித் தான் முடியுது...இரண்டு பெரும் சேர்ந்து போவாங்களாம்...அங்கன போய் மனசு விட்டு பேசுவாங்களாம் .. உண்மையிலேயே எதை விட்டுட்டு பேசுவாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்..அதுக்கப்புறம் மனசுக்கு பிடிக்கலைனா கழட்டிவிட்டுட்டு வந்திருவாங்களாம்..அப்புறம் அடுத்த வாரம் அடுத்த பொண்ணு அல்லது பையனை தேடி திருப்பியும் பொருத்தம் பார்ப்பாங்களாம்.
இந்த பொருத்தம் பாக்குற விஷயம் மேற்கத்திய நாட்டுல இருந்து நம்ம ஊருக்கு வந்திடுச்சு...ஆனா எந்த ஒரு விசயமும் முழுசா வர மாட்டேங்குது...அங்கே டேட்டிங்க்ல செய்யுற விஷயம் என்னானா, ஜோடிகள் ரெண்டு பேரும் நல்லா ஊரு சுத்துவாங்க...நல்லா ஜோடியாத் தின்பாங்க..அப்புறமா சினிமா, பீச்சுன்னு சுத்துவாங்க..ஆனா எல்லை தாண்ட மாட்டாங்க , அதுக்கு வேற வடிகால் வச்சிக்கிட்டாங்க...ஆனா இங்கே டேட்டிங் கிற பேருல எல்லா விசயத்தையும் முடிச்சிடுறாங்க...
டேட்டிங் கலாச்சாரத்துல யாரு அதிகமா சிக்குறாங்க தெரியுமா? நம்ம தென் தமிழ் நாட்டுல இருந்து வர்ற பொண்ணுங்கதான் சீக்கிரத்துல சிக்கித் தவிக்குது...காரணம் அதுக தங்கி இருக்கிற விடுதி, அப்புறமா வேலை பாக்குற இடம்...படிக்கிற கல்லூரி இதுவெல்லாம் அவுகளுக்கு எல்லாமே புதுசு...ஒருவிதமான மாயை.!!! ஊருல, ஊட்டுல பெருசுக கொடுத்த அழுத்தம் இங்கே வந்ததும் சுதந்திரமா சுற்றித் திரிய ஆரம்பிக்குதுங்க...ஊருல கண்ணுக்கு கண்ணா பாசமா பழகுன அப்பா அம்மா எல்லோரும் வில்லனா, வில்லியாத்தான் தெரிவாங்க...எவனோ ஊரு பேரு தெரியாதவன் திடீருன்னு ரொம்ப நல்லவனாத் தெரிவான்!!! அவனோட ஸ்டைலு சூப்பெரா இருக்கும், பேச்சு சுண்டி இழுக்கும்..ரொம்ப டீசண்டா பேசுவான்...ஆபாசமா பேசவேத் தெரியாது...ஆனா அவளோட அப்பா கொஞ்சி கொஞ்சி பேசினாலும் கொலைகாரன் பேசுற மாதிரியே இருக்கும்..
அப்புறம் கூட இருக்கிறது எல்லாம் சேர்ந்து உனக்கு லவ்வு வந்திடுச்சி...அவனை அப்ப்ரோச் பண்ணு னு உசுப்பி விட்டு வேடிக்கை பாக்கும்..அப்புறம் என்ன, எஸ்எம்எஸ், சாட், தியேட்டர், பார்க்கு, அப்புறமா அந்த பொண்ணு வீட்டுக்கு பேசுறதை குறைச்சிடும்...அவன்கிட்டே பேசுறதுக்கே நேரம் பத்தாதே..
எத்தனை நாள்தான் ஊருக்குள்ளே வண்டி ஓட்டுறது...அப்படியே ஊருக்கு வெளியே கம்மாங்கரை (அடச்சே ஊர் நினைப்பா இருக்கு) ஈசிஆர் பக்கமா, மகாபலிபுரம் பக்கமா போய் மனசு விட்டுட்டு மத்ததை பேசுவோமா? அவன்தான் ரொம்ப டீசண்டா இருக்கானே...பேசித்தான் பார்ப்போமே..னு கிளம்புவாங்க..பொருத்தம் பாக்க கிளம்பிடுவாங்க...எல்லாப் பொருத்தமும் பார்த்திட்டு திரும்பி வரும்போதே எல்லாம் சலிச்சு போயிடும்..எனக்கு இப்படி இருந்தாத்தான் பிடிக்கும், இப்படி டிரெஸ் போட்டாத்தான் பிடிக்கும்...ஆர்டர் வரவும்...அவ்வளவுதான் பொருத்தம் சரி இல்லாம போயிடும்...வாழ்க்கையும்தான்...அப்போதான் அம்மாவோட மடி நியாபகம் வரும்...அப்பாவோட உழைப்பு கண்ணுக்கு தெரியும்...அண்ணனோட அன்பு உணர்வுக்கு வரும்...
அடுத்த நாள் அவனை பழி வாங்குறதுக்கு கூட இருக்கிற, வேலை பாக்குற பொண்ணுங்களே கிளப்பி விடும்...அவனை நல்லவன் சொன்ன அதே பொண்ணுங்க அவனோட இன்னொரு பக்கத்தை பத்தி எடுத்துச் சொல்லி அவன் கண் முன்னாடியே இன்னொருத்தன் கூட பழக சொல்லி தூண்டி விடும்...அந்த பொருத்தம் சரி இல்லை, இது வேற பொருத்தம், இது சூப்பெரா இருக்கும்...பழகிப் பாரு...அடுத்தது கிளம்பிடும்...
டேட்டிங் னா ஊரு சுத்துறதுக்கு தேதி குறிக்கிறது..தமிழ்ல திகதியிடல்னு சொல்றாங்க...ஆனா இப்போ இந்தியாவுல நடக்குற டேட்டிங் வரைமுறை இல்லாம போய்க்கிட்டு இருக்கு..மேலே சொன்ன உதாரணமாவது பரவாயில்லை...கூட வேலை செய்யுற, அல்லது படிக்கிற பையனா இருக்கும்...இப்போ போற வேகத்துல இணையத்துல பார்த்து , பேசினவன் எல்லாம் கூட கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க..அவன் யாரு, அவன் குணம் என்ன, அவன் எப்படிபட்டவன்..அவனுக்கு குடும்பம் இருக்கா? எதுவுமே தெரியாது...சாட்டுல அவன் சொன்ன விஷயத்தை நம்பி அவன் கூட டேட்டிங் கிளம்புற பொண்ணுங்களும் இருக்கு...
இப்படிப்பட்ட பொண்ணுங்கதான் நம்பி போயி அவன் மறைச்சு வச்சிருக்கிற கேமிராவுல சிக்கி சீரழிஞ்சு அப்புறம் அவனோ அல்லது அவனோட கும்பலோ கூப்பிடுற நேரம் எல்லாம் போயிட்டு வர வேண்டிய சூழ்நிலை...இதுவும் இல்லேனா செத்துர வேண்டியது...இதுதானா நீங்க பொருத்தம் பாக்குற லட்சணம்???

இது எல்லாத்தையும் விட இந்த மாதிரியா பொருத்தம் பார்த்து போற ஜோடிங்க
பிற்காலத்துல தன்னோட மனைவி அல்லது கணவரோட நடவடிக்கைள் மேலே சந்தேகப் படத்
தொடங்குறாங்க...ஏன்னா நம்மளை மாதிரியே இவ யார் கூடயாவது சுத்தி இருப்பாளோ,
இவன் வேற எந்த பொண்ணு கூடேயும் போயிருப்பானோ இப்படி சந்தேகம் பெருசாகி
விவாகரத்து அல்லது மனநோயாளியா மாத்திடுது..ஆரம்பத்துல இதெல்லாம் தப்பு
இல்லை, எனக்கு ஒன்னும் வருத்தமில்லைன்னு சொல்றவங்க..பின்னாடி குடும்பத்துல
ஏதாவது பிரச்சினை வர்றப்ப அதை சொல்லிக் காட்டி நோகடிக்கிறது வாடிக்கையாகிப்
போயிடுச்சி...
இப்படி பொருத்தம் பாக்குறதுல ஆயிரத்துல 2 பேரு இணையுறதா ஆய்வுத் தகவல் வந்திருக்கு...அதிலும் ஒருத்தர் விஷயம் குடும்பத்துக்கு தெரிஞ்சி சேர்த்து வைக்கிறதா கூடுதல் தகவல்...இந்த பொருத்தம் பாக்குறதுல ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னதுனா சாதி, மதம் பாக்காம கூடுவாங்க..சேர்ந்து விளகுனதுக்கு அப்புறம் சாதி பெயரை சொல்லி சண்டை போட்டுக்குவாங்க...இது ஒண்ணுதான் இதுல சிறப்பான விஷயம்...
பெருசுங்க பொருத்தம் பார்த்தா(சாதகம்) சாதி பார்ப்பாங்க, சிறுசுங்க பொருத்தம் பார்த்தா (டேட்டிங்) சாதி பாக்க மாட்டாங்க...
முக்கிய குறிப்பு : டேட்டிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில்
"திகதியிடல்" அல்லது பொருத்தம் பார்த்தல் என்று பொருளாம். சந்தேகமிருந்தால்
கூகிள்.காம் தேடித் பார்த்து கொள்ளவும்..
நன்றி கூகிள்.காம்
என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க சிவா. கெட்டு ஒழிந்தால் தான் புத்தி வரும். இங்க இழந்ததுக்கு அப்புறம் திரும்பி பார்க்கிறவங்க தான் நிறைய.
ReplyDeleteஉண்மைதான் தோழரே! பெற்றவர்களின் மரியாதையை காக்கும் குழந்தைகள் எத்தனை எத்தனையோ இந்த மாதிரியான அவலங்களால் வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றார்கள்!!!
Deleteகுடும்பத்தோட பீச்சுக்கு போனா இவங்க தொல்லை பார்க்க சகிக்கவில்லை பொது இடம் என்பதை கூட அவர்கள் உணர்வதே இல்லை. தோல்மேல கையபோட்டு உட்காந்து இருப்பதுபோலத்தான் தெறியுது ஆனா எதை எதையோ பன்னிகிட்டு இருக்கான்க சின்ன பிள்ளைகள் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு பீச்சுக்கு வந்த அவங்களுக்கு உடம்பு சரியில்லையானு கேக்கராங்க என்ன பதில் சொல்லறது.
ReplyDeleteஉண்மைதான்....தற்போது இதன் தாக்கம் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளையும் கவரத் தொடங்கி இருப்பது பெற்றவர்களின் வயிற்றினில் நிச்சயம் புளியைக் கரைக்கும் என்பதில் சந்தேகமுமில்லை...
Deleteமேற்கத்திய பொருத்தம் பார்த்தலில் அவ்வளவு எளிதில் ஹாலிவுட்டில் காட்டுவது போல படுக்கைக்கு சென்றுவிட முடியாது, பெண்கள் இங்கு மிகவும் உசாரானவர்கள் .. அத்தோடு அப்படி ஒன்று நடக்கும் பட்சத்தில் அவற்றை எவ்வாறு எதிர்க் கொள்வது என்பதையும் தெளிவாக சிந்திக்கக் கூடியவர்கள். நம்மவர்களுக்கு அதன் பக்குவம் மிகவும் குறைவு .. அத்தோடு நமது வாழ்க்கை முறையில் பொருத்தம் பார்த்தல் சார்ந்த உடல் உறவுகள், அதன் பின்னரான மன அழுத்தங்கள் போன்றவற்றில் சிக்கல் எழுகின்றன. காரணம் உளவியல் ரீதியாக நாம் கொஞ்சம் வீக்கானவர்கள், குற்ற உணர்ச்சி பெருகும், அத்தோடு ஏற்கனவே உடல் உறவுக் கொண்டவளை மனைவியாக ஏற்பதிலும் ஆண்களுக்கு தயக்கம் உண்டு. ஆக ! பொருத்தம் பார்த்தலில் தோற்றவர்கள், பிறக் கலியாண உறவுக்குள் செல்லும் போது மறைத்தே வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டு. பொருத்தம் பார்த்தலில் உடல் உறவைத் தவிர்ப்பது நல்லது என்பேன். ஏனெனில் உடல் உறவு ஏற்பட்ட பின்னர் கசந்து போன உறவுகளே மிகுதியாகும். களவொழுக்கம் அல்லது பொருத்தம் பார்த்தல் மேற்கில் இருந்து இங்கு வந்தது என்று சொல்ல முடியாது . களவொழுக்கம் கிராமங்களிலும் கூட இருக்கின்றன, இருந்து வருகின்றன. ஒரு சில தலைமுறைக்கு முன் களவொழுக்கம் என்பது பெரும்பாலும் மணங்களில் முடிந்துவிடும், ஆனால் இன்றைய நிலையில் களவொழுக்கம், பொருத்தம் பார்த்தல் ஆகியவை உடலுறவைத் தாண்டி நீண்டதொரு உறவாய் அமைவதில்லை. ஆகவே, ஆணோ, பெண்ணோ தீர்க்கமாக மணம் முடிக்கப் போகின்றோம் என்ற நிலைக்கு வரும் வரை, அல்லது மணம் முடிக்கும் வரை உடலுறைவக் கொஞ்சம் தள்ளிவிட்டு இன்ன பிற நட்புக் கூடலில் ஈடுபடுதல் சாலச் சிறந்தது.
ReplyDeleteமிக்க நன்றி இக்பால்,
Deleteநிறைய விசயங்களை, புது, புது வார்த்தைகளை நானும் தெரிந்து கொண்டேன். பகிர்விற்கு நன்றி.
கற்பழிப்பின் ஆரம்பமே இங்கதான்.
ReplyDeleteநிபந்தனையுடன் கூடிய கற்பழிப்பு என்று கூட சொல்லலாம்...
Deleteநல்ல பதிவு சிவா! அருமையாக ஆய்ந்து எழுதியுள்ளீர்! ஒரு வகையில் இக்பால் செல்வன் கருத்து, எனக்கு உடன்பாடே! இன்று ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய தொலைக் காட்சிகளும், திரைப் படங்களும் ஒழுங்கீனத்தை தானே வளர்கின்றன!
ReplyDeleteஊடகங்கள் அவர்களது வியாபாரத்தை செய்கின்றன...அதனை நாம் குறை சொல்ல இயலாது. தங்கம் விளம்பரம் பார்த்து எல்லோரும் வாங்குவதில்லை. வசதி இருப்பவர்கள் மட்டுமே ஆராய்ந்து வாங்கி அனுபவிக்கின்றார்கள். அது போல இளைஞர்களும், இளைஞிகளும் உண்மை நிலவரம் பார்த்து பொருத்தம் பார்த்தாலே பாதி பிரச்சினைகளுக்கு விடை கிடைத்து விடும்
Deleteஆண்களின் சுய நலத்தை புரிந்து கொள்ளாமல் சுதந்திரம் என்ற பெயரில் சம்மதித்து விட்டு இன்னல படுவது படித்த பெண்களிடத்தில் இருப்பது கவலைக்குரியது.
ReplyDeleteடேட்டிங்கில் சீரழிவதில் அதிகம் நன்கு படித்த பெண்களே....படிக்காத பெண்கள் இன்னமும் கவனத்தோடுதான் இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்...
Deleteஇன்றைய நிலையில் நீங்கள் சொல்வது சரிதான்
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றி...உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும்....
Delete