பங்காளிங்க..

Monday, December 31, 2012

கற்பழிக்கும் காமுகர்களே? வாங்க பழகுவோம்!!

பாரதத் தாய்க்கு இப்படி ஒரு சோதனை தேவை இல்லை என்றே நம்புகின்றோம். டெல்லியில் கற்பழித்தால் மாபெரும் குற்றம்!! அதுவே மற்ற மாநிலத்தில் அதிலும் குறிப்பாய் தமிழ்நாட்டில் கற்பழித்து கொன்றாலும் குற்றமில்லை. பாதிக்கப் பட்டவர்களின் பிணத்தின் மீது ஏறி நின்று அரசியல் செய்ய இங்கே அநேகம் பேர் இருக்கின்றார்கள்.

டெல்லியில் மருத்துவம் படிக்கும் மாணவியை கற்பழித்து சிதிலப் படுத்திய காமுகர்களை இன்னமும் காவல்துறை தேடி வருகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் பருவவயதையே தொடாத சின்னஞ்சிறு குழந்தை புனிதாவை வல்லாங்கு செய்து கொன்றும் விட்டான்...என்ன நடந்தது? தமிழக காவல்துறை குற்றவாளியை பிடித்து விட்டது. டெல்லியில் இன்னமும் முழுதும் கைது செய்யப்படாத குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுங்கள...சுட்டுத் தள்ளுங்கள் என்று போராட்டம் வலுக்கின்றது. ஆனால் இங்கே குற்றவாளி காவல்துறை கைகளில் இருக்கின்றான். ஆனால் அவனுக்கு தண்டனை வழங்க யாரும் குரல் கொடுக்க வில்லை.

வழக்கம் போல நமது பதிவர்கள் குரல் கொடுத்துக் கொண்டும், கண்டனம் தெரிவித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். திமுக என்னும் பிரதான கட்சி அங்கே கனிமொழியை அனுப்பி பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல அனுப்பி இருக்கின்றது. திமுக தனது சக்திக்கு மீறி அவர்கள் சொந்த வருவாயில் இருந்து 50 ஆயிரம் ரூவாயை அந்த பிஞ்சின் குடும்பத்திற்கு வழங்கி இருக்கின்றது. அதற்க்கு ஒரு படி மேலாக ஆளும் கட்சி 1 லட்சம் ரூவாயை மிகுந்த பண நெருக்கடியினால் கொடுத்து விளம்பரம் செய்து கொண்டு விட்டது. மற்ற கட்சிகள் சாதிப் பிரச்சினை, மதப் பிரச்சினை..நீயா? நானா? பிரச்சினையில் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதனால் புனிதாவின் மரணம் ஒன்றும் பெரிய விசயமாக தெரியாமல் போய் விட்டது.

குற்றவாளி சுப்பையாவும் இருக்கின்றான்...குற்றமும் நிருபிக்கப் பட்டுவிட்டது...தீர்ப்பு எங்கே? அன்னை சோனியாவே! நீயும் ஒரு பெண் என்ற காரணத்தால் கேட்கின்றோம்.டெல்லியில் நடந்தது கற்பழிப்பு என்றால் தமிழகத்தில் நடந்த விஷயம் என்ன? டைம் பாசா? டெல்லி மாணவிக்காக ஒன்றிணைந்த மாணவச் சமுதாயமே எங்கள் மாணவி புனிதா உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரியப் படுத்தப் படவில்லையா?

ஊடகங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு டெல்லி அதிருது, டெல்லி ஸ்தம்பித்து விட்டது...டெல்லியில் மாணவர்கள் போராட்டம் என்று வரிசையாய் மின்னும் செய்திகளை போட்டுக் கொண்டு ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களது வியாபார வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழகம் இதிலும் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றது. தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இருந்தும் நியாயமான விசயத்திற்கு நியாயமான தீர்ப்புகள் பாதிக்கப் பட்டிருப்பவர்களுக்கு வழங்கப் படவில்லையே, என்ன காரணம்?

சமீபத்தில் ஒரு வார இதழில் திமுகவின் வாரிசுகள் இந்த வருடம் அவர்கள் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட இருப்பதாக வெளியிட்டிருக்கின்றது. எப்படி உங்களால் மட்டும் மனசாட்சியை அடகு வைத்து விட்டு கூச்சமே இல்லாமல் இந்த செய்திகளை வெளியிட முடிகின்றது? இதுவா நாட்டிற்கு தேவையான விஷயம்? பாதுகாப்பு இல்லாமல் வெளியில் சென்று வரும் நமது சகோதரிகள், பெண் பிள்ளைகளுக்கு, எந்த விதத்தில் பாதுகாப்பு கொடுக்கலாம் என்று யாருமே அலசி ஆராயவில்லையே !!!
இன்னமும் நீதி விசாரணை எதற்கு? தீர்ப்புகள் எப்போது வழங்கப் படும்? அந்த செய்தி மறைவதற்கு முன்னதாகவே விருதாசலத்தில் மற்றொரு பாலியல் பலாத்காரம்? டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் பலாத்காரம்? இதுதான் பாரத மாதாவிற்கு நாம் அளிக்கும் மரியாதையா? வார்த்தைக்கு வார்த்தை "பாரத மாதாவிற்கு ஜே" என்று கொடிபிடிக்கும் நாம் அந்த பாரதத்தில் இருக்கும் ஒரு மாதாவிற்கு பாதுக்காப்பை கொடுக்கின்றோமா என்றால் எதுவுமே இல்லை....குறைந்தது கண்டனக் குரல்களாவது  எழுப்பி இருக்கின்றோமா? 

விசுவரூபம் படம் டிடிஹெச் மூலமா வருமா? அல்லது தியேட்டருல வருமா? ஆனா இங்கே ஒவ்வொரு கற்பழிப்பும் "விசுவரூபம்" எடுக்கிறது எவன் கண்களுக்கும் தெரியலையா? அடுத்த பிரதமர் வேட்டிக் கட்டுனவரு வரணும்? வேட்டியை கட்டிக்கிட்டு வருவாரோ அல்லது குழாயப் போட்டுக் கிட்டு வருவாரோ? தமிழகப் பெண்கள் பாதுகாப்பாய் இருக்க ஒருத்தன் பிரதமரா வரணும் னு  சொல்றதுக்கு ஒருத்தர் இங்கே கிடையாது!

இனி ஏதாவது வல்லாங்கு தமிழகத்தில் நடந்தால் அவனுக்கு  பாதிக்கப்பட்டவளே ஆண்குறியை பொது மக்கள் முன்னிலையில் நறுக்கி விட வேண்டும் என்று தீர்ப்பு வர வேண்டும்..அந்த காமுகனுக்கு வாதாடும் வழக்கறிஞருக்கும், ஆதரவாளர்களுக்கும் அதைப் போன்ற கொடுமையான தண்டனை வழங்கப்படல் வேண்டும். அப்படி நடந்தால் ஓரளவிற்கு குற்றங்கள் குறையும். இந்த விசயத்தில் தமிழகம் மற்ற மாநிலத்திற்கு முன்னோடியாய் இருத்தல் வேண்டும்.

ஆனால் இப்படிப்பட்ட வர்களை நம்பி தமிழ்நாட்டுல ஏன் பொறந்து தொலைச்ச புனிதாவே? வேறு எங்காவது பொறந்திருக்க கூடாதா? இனி காமுகர்கள் அனைவரும் தென்னிந்தியாவில் படைஎடுத்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏனெனெனில் இங்கேதான் ஏன்? என்று கேட்க ஒரு நாதியும் கிடையாதே!!!

8 comments:

 1. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  தமிழ்நாடு LIST OF HOLIDAYS

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி...

   Delete
 2. யாரோ உங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்க, செகப்புல பதிவு போட்டா ஹிட் பிச்சுக்கிட்டுப் போகும் அப்படீன்னு.

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சிக்கோங்க ஐய்யா, எனக்கு எதுவும் தெரியாது, பதிவை வேகமா போடனும்னுகிற ஆதங்கத்துல, அதை கவனிக்க மறந்திட்டேன்..அவ்வளவுதான்...2012 ல கடைசி புரளியா இது????

   Delete

 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி....
   உங்கள் ஆசிகள்....

   Delete
 4. உங்களை மாதிரி நல்ல ஊடகவியலாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியததுதான் . அரசியல்வாதிகளும் அதன் அடிப்பொடிகளும் அதைப்பற்றி கவலை கொள்வது இல்லை . நன்றி

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஊடகவியலார்கள் என்று என்னையும் அங்கீகரித்ததற்கு மனமார்ந்த நன்றி...2013 இன் முதல் வாழ்த்துக்கள் என்று நினைக்கின்றேன்...

   Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...