பங்காளிங்க..

Saturday, July 2, 2011

தலப்பாகட்டு நூடுல்ஸ் (பிரியாணி அல்ல) ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

நானும் என் பிரெண்டும் ஒரு நாள் சென்னையின் பிரதான நகருக்கு போய்ட்டு ஊரெல்லாம் சுத்தி பார்த்திட்டு மதியம் சாப்பிடலாமுன்னு கடைக்கு போனோம்

நிறைய ஹோட்டல் இருந்துச்சி, எதுல சாப்பிடுரதுனே தெரியலை....ஒவ்வொரு கடையும் அழகழகா லைட், பேன், ஏசி எல்லாம் போட்டு டிவி வச்சு வரவேற்பு கொடுத்துச்சி....ஒரு சில கடைல பொண்ணுங்க சாப்பாடு பரிமாறி கிட்டும் இருந்தாங்க....
அப்போ என் பிரண்டு தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடனும்னு சொன்னான்...
 

அப்போ வரிசையா 5 கடை இருந்திச்சி, எல்லாமே பிரியாணி கடைதான்....கடைசியா ஒரு கடைய தேர்ந்தெடுத்து பிரியாணி ஆர்டர் பண்ணோம்...
அஞ்சே நிமிசம்தான், சூடா ரெண்டு பிளேட் பிரியாணி கொண்டுவந்து வச்சான்....சூப்பெரா இருந்திச்சி, நல்ல பசி வேறயா, வெளுத்து வாங்கினோம்....
சாப்பிட்டு முடிச்சதும் என் பிரண்டு ஒரு கோக் வாங்கி குடிச்சான்...ஏற்கனவே புல்லா சாப்பிட்டதாலே அப்படியே வாமிட் பண்ணிட்டான்....சாப்பிட்ட பிரியாணி எல்லாம் அவுட்....

அப்போ தான் கவனிச்சோம்.....சாப்பிட்டது பிரியாணி அரிசி கிடையாது....அரிசி மாதிரி வெட்டி வச்சிருக்கிற நூடுல்ஸ், எப்பவுமே 20 கிலோ அரிசிக்கு 10 கிலோ நூடுல்ல்ஸ் கலக்குரானுங்க...
அதுபோல பிரியாணிக்குள் ஒளிச்சு வச்சிருக்கிற முட்டை காலையிலேயே அவிக்க படுகின்றது. அவிச்ச முட்டையை வெகு நேரம் வெளியில் வைத்தால் அது ஊதா நிறமாகி விடும்....கடையினில் இருக்கும் வெளிச்சம், மற்றும் டிவி போன்றவை இதை போன்ற விசயங்களை மூடி மறைப்பதற்காகவே...படுபாவி பசங்க....

எல்லோருமே பசி மயக்கத்துல இருக்கிறப்ப அதை யாரும் கவனிக்க மாட்டோம்....மக்களுக்கு சாப்பாடுதான் பிரதானம், அது அவங்களுக்கு சௌகரியமா போயிடுது....

அடுத்த நாள் ஒரு கடைல போய் நின்னுக்கிட்டு, நாங்களும் ஊருல பிரியாணி கடை வச்சிருக்கோம், ஆனா இது பிரியாணி அரிசி மாதிரியே தெரியலையே னு சொன்னதுக்கு அந்த கடைக்காரன் இது பிரியாணி அரிசி இல்லீங்க, இன்னிக்குதான் அவசரத்துக்கு புழுங்கல் அரிசியை போட்டிட்டோம் னு சொல்றான்....

நான் ரொம்ப நேரமா பிரியாணி யையே முறைச்சு பார்க்கவும், அந்த முதலாளி என்கிட்டே வந்து இஷ்டம் இருந்தா சாப்பிடு, இல்லேனா கிளம்பி போய்க்கிட்டே இரு...வியாபாரத்தை கெடுக்காதே என்று கறாராய் பேசிவிட்டு சென்றான்....

கடைக்குள் திரும்பி பார்த்தேன், 10 வயதிற்குட்பட்ட 3 சிறுவர்கள் அவர்களது அப்பா, அம்மா கூட சந்தோசமாய் ரசித்து, ருசித்து தலப்பாக்கட்டு நூடுல்சை  பிரியாணி என்று நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.... தமிழக உணவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை இதை கவனிக்குமா?

கையேந்தி பவனை எல்லாம் நடிகர் விவேக் கிண்டலடித்து கொண்டிருந்தார் படங்களில்...ஆனால் இந்த மாதிரியான நாகரீக வடிவிலான கடைகளும் அதைதானே செய்து கொண்டிருக்கின்றது....

6 comments:

 1. THE NAME "THALAPPA KATTU" IS FRAUD. THE ORIGINAL THALAPPAKATTU IS AT DINDIGUL. NOW THEY OPENED AT BATLAGUNDU AND ONE OUTLET IN CHENNAI TOO.OTHERTHAN THESE
  WHEREEVER WE FIND THE NAME THALAPPAKATTU THAT IS A FRAUD HOTEL, AND THEY WILL ANYTHING AS LIKE FOOD. I KNOW VERY WELL THEY USE CALF MEET INSTEAD OF MUTTON IN SOME OF THE FAKE THALAPPAKATTU HOTELS IN CHENNAI.

  ReplyDelete
 2. THE NAME THALAPPAKATTU THEY USE IS FRAUD. ORIGINAL THALAPPAKATTU IS AT DINDIGUL AND NOW THEY HAVE BRANCHES AT BATLAGUNDU, KOVAI AND ONE OUTLET IS AT CHENNAI TOO.
  OTHER THAN THESE WHEREEVER WE FINE THE SAME NAME WITH SMALL MODIFICATIONS IS FRAUD. I KNOW VERYWELL THAT IN CHENNAI IN SONME FAKE NAMED HOTEL THEY USE PURE BEEF MEET(CALF) INSTEAD OF MUTTON. SEE THE NAME AND PLEASE AVOID IF THE FAKE NAME IS USED. NO THALAPPAKATTU IN YELLOW BOARD IS ORIGINAL.

  ReplyDelete
 3. புரியாணி அரிசிக்குப் பதிலாக நூடுல்ஸ் கலந்து நுகர்வோரை ஏமாத்துறாங்களே,
  கொடுமை பாஸ்.

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு
  நானும் பெயரைப் பார்த்து கடைக்குள் நுழைந்து சாப்பிட்டு
  அவஸ்தை பட்டிருக்கிறேன் ஆனால் காரணம் தெரியாது இருந்தேன்
  நல்ல எச்சரிக்கை தகவல் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...