பங்காளிங்க..

Wednesday, July 6, 2011

அவுத்து போட்ட சாமியாருக

ஏன் நைனா, இந்த முற்றும் திறந்த சாமியார்கள் கிட்டே மட்டும் எப்படி இவ்வளவு கிடைக்குது?

அவனுங்க வேண்டாம் வேண்டாம் னு சொன்னாலும் (எவனுமே சொன்னதில்லை) இந்த கூறு கெட்ட ஜனங்க அவனுகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கிரானுங்க....

எல்லாம் நம்ம ஜனத்தை சொல்லணும்....சாமியாருக்கு எதுக்கு கோடிக்கணக்குல கட்டிடம், வசதி, புண்ணாக்கு எல்லாம்.நல்லா அருள், குறி சொல்றானா, அவனுக்கு ஒரு கிலோ அரிசியை கொடு....இல்லேனா பால், பழம் கொடு.....அத விட்டுட்டு வயாகரா ஒரு ஸ்பூன் வாயிலே ஊட்டி விட்டா இப்படித்தான் கேடுகெட்ட விசயமெல்லாம் நடக்கும்....


இது பத்தாதுன்னு பங்களா எதுக்கு கொடுக்கணும்? தங்கம், வைரம் எதுக்கு கொடுக்கணும்.......பணத்தை கோடி கணக்குல எதுக்கு கொடுத்து அவனை பணக்காரன் ஆக்கணும்....பணம் வந்திடுச்சா அவனுக்கு வேண்டிய அடுத்த போதை பொம்பளைதானே, அதுக்கும் பொண்ணுகளை வசியம் பண்ணுவான்...தஸ்ஸு புஸ்ஸுன்னு உளறுவான்....அது நம்ம கூறு கெட்ட ஜனத்துக்கு அருள்வார்த்தையாக மாறிடும்....

பொண்ணுக்கு பயித்தியம் பிடிச்சிருக்கு, என்கூட அனுப்பி வை, தெளியவைக்கிறேன்னு சொல்வானுங்க...முட்டாள் ஜனங்க, தன் சொந்த பொன்னை சாமியார்கிட்டே அனுப்பிட்டு வாசல்ல காவல் காத்துகிட்டு நிப்பாங்க! ஆனா உள்ளே அந்த சாமியாருங்க அந்த பொண்ணை அம்மாவாக்கி, பயித்தியமாவே திரிய விட்டுருவானுங்க.....


ஏன் மக்களே, நீங்களே இடத்தையும் கொடுத்து, பொன், பொருள், பணம்னு எல்லாத்தையும் வாரி வாரி கொடுத்து கடைசியிலே பொண்ணையும் அனுப்பி வைச்சிட்டு அவனை பெரிய ரௌடியாக்குறீங்க....அப்புறம் அவன் எப்படி அடங்குவான்? 

எல்லா சாமியாரும் பாருங்க, நல்ல வசனம் பேசுவானுங்க....புதுசு, புதுசா பேசுவானுங்க...கடைசியிலே பெரிய அல்வாவை கிண்டி கொடுத்திட்டு போயிடுவானுங்க....

இதுதானே காலம், காலமா நடக்குது....எனக்கு தெரிஞ்சி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வள்ளுவர், ஷீரடி பாபா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவிர எவனும் ஏழைங்க கிடையாது.ஆனா இந்த மனுசங்க எல்லாருமே ஏழை யாவே வாழ்ந்தவங்க..அவங்க பேரை சொல்லி வந்தவனுங்க எல்லோரும் பணத்திலே மிதக்கிறானுங்க ...


நான் என் மதத்திலே இருந்தே இதை சொல்றேன்.... இதை மாதிரி கிறித்துவத்திலும், இசுலாமத்திலும் இருக்காங்க....அத எல்லாம் சொல்லி நான் மதப் பிரச்சினையை தூண்ட நினைக்கலை... எத்தனையோ கிறித்துவ பாதிரியார் பாலியல் பிரச்சினைல சிக்கி இருக்காங்க....அது போல எத்தனையோ இசுலாமிய மத போதகர்கள் அவங்க மத கோட்பாட்டுக்கு மீறி செயல்பட்டு இருக்காங்க....

மக்களுக்கு சேவை செய்யறதுக்கு எத்தனயோ வழி இருக்கு....ஆனா இங்கே பல பேரு ஆண்டவன் பேரை சொல்லி அவித்து போட்டு அலையுரானுங்க....

பிரேமானந்தா....எப்பவுமே பக்தி பரவசத்துலே யேதான் இருப்பாரு...இப்போ பரலோகம் போயிட்டாரு....

ஒரு சாமியாரு ஷேர் மார்கெட்டுல பங்கு வச்சிருக்காரு. சட்டம்கிறது பொதுவான விஷயம், அரசனுக்கும், ஆண்டிக்கும் ஒரே சட்டம்தான்.....ஆனா இங்கே அரசனுக்கும், சாமியாருக்கு மட்டும் சட்டம் சரியா வேலை செய்ய மாட்டேங்குது....

ஒரு சாமியாரு மர்டர் கேசுல மாட்டி ஜாமீன்ல வர்றாரு....

ஒருத்தர் நடிகையை வச்சிக்கிட்டு சல்லாபம் பண்றாரு...

ஒருத்தர் வாயிலே இருந்து லிங்கத்தை எடுக்கிறாரு....ஒரு ஊரே வளைச்சு போட்டிருக்காரு.....அந்த ஆளோட ரூமுல கோடிக்கணக்கான பணம் இருந்தது கண்டுபிடிக்க பட்டிருக்கு.....

இன்னொருத்தர் பள்ளிக்கூடத்துல வாத்தியாரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப ஏதோ பிரச்சினைன்னு வெளியே வந்தாரு....வந்த வேகத்துல ஆத்தா காலடியிலே உக்காந்தாரு....இப்போ பார்த்தா ஆத்தா அவரோட காலடியிலே உக்காந்திருக்கு......

 
என்ன கொடுமை சார் இது? 


இன்னொருத்தர் என்னடானா பேமிலி சாமியார் போல, நகைக்கடை விளம்பரம் போஸே கொடுக்கிறாங்க.....

இந்த நகை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? 

ஆண்டவர் என்பதையே மக்கள்தான் உருவாக்கி இருக்கும் இந்த சமயத்தில் நான்தான் கடவுள் என்று உருவெடுத்து ஆங்காங்கே பல சாமியார்கள் உருவாகுவதும் வாடிக்கையாகி விட்டது....

இதற்கிடையில் சில சாமியார்கள் கல்லூரிகளும் நடத்துகின்றார்கள். ஏதாவது ஒரு சாமியார் இலவச கல்வி நடத்துகின்றார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.... மக்களிடம் இருந்து பணம் வாங்கும் அவர்கள் கல்லூரி ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களது நோக்கம் என்ன? இறைவனை தரிசிப்பதா? ஏழைகளை உபசரிப்பதா? எதுவுமே கிடையாது! 

கீழே இருப்பவர்களை யும் பாருங்கள்....இதுவரை பார்த்தவர்களையும் ஒப்பிட்டு கொள்ளுங்கள்....
6 comments:

 1. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

  வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

  ReplyDelete
 2. "என் ராஜபாட்டை"- ராஜா said...வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்//

  மிக்க நன்றி ராஜா,

  உங்களது அறிமுக உதவிக்கு நன்றி.......

  ReplyDelete
 3. ///ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவிர எவனும் ஏழைங்க கிடையாது.///
  அவர் சந்திரசேகர சுவாமிகள் , ஜெயேந்திரர் இப்போது இருப்பவர் , இந்துக்களின் நம்பிக்கையை அறுப்பவர்.

  சாட்டையடி பதிவு நண்பரே
  தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்

  ReplyDelete
 4. A.R.ராஜகோபாலன் said...

  ///ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தவிர எவனும் ஏழைங்க கிடையாது.///
  அவர் சந்திரசேகர சுவாமிகள் , ஜெயேந்திரர் இப்போது இருப்பவர் , இந்துக்களின் நம்பிக்கையை அறுப்பவர்.

  சாட்டையடி பதிவு நண்பரே
  தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்///

  மிக்க நன்றி ராஜகோபாலன் அவர்களுக்கு, தவறுதலாய் டைப் செய்து விட்டேன்....

  ReplyDelete
 5. அருமையான பதிவு... சாமியார்களையும் மாமியார்வீட்டுக்கு அனுப்பினால்தான் திருந்துவார்கள் போல...

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 6. ///Sankar Gurusamy said...

  அருமையான பதிவு... சாமியார்களையும் மாமியார்வீட்டுக்கு அனுப்பினால்தான் திருந்துவார்கள் போல...

  பகிர்வுக்கு நன்றி..///
  உங்களது பதிவிற்கும், வருகைக்கும் மிக்க நன்றி.....

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...