பங்காளிங்க..

Monday, July 4, 2011

நக்கீரன் = மன்மத லீலை

நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே - ஒரிஜினல் நக்கீரன்...
எதிரியா இருந்தா குற்றம் இல்லேனாலும் குற்றமே - இன்றைய நக்கீரன்.....

ஒரு காலத்தில் நக்கீரன் புத்தகத்தை "அந்த" மாதிரியான புத்தகமாக நினைத்து வாங்கி படித்த காலமெல்லாம் உண்டு....
 காரணம் அதில் வரும் செய்திகள்....எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு அந்தரங்க நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்த்து ரசித்த மாதிரியே போடுவார்கள்...

ஒரு காலத்தில் ஜெயலட்சுமி என்ற ஒரு பெண் காவல்துறை அதிகாரிகளோடு இருந்த உறவை வெளியிட்டு ஒரு மெகா சீரியல் போட்டு அமர்களப்படுத்தினார்கள்....

அதன் பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், நடிகை சொர்ணமால்யாவும் என்று ஒரு ஆய்வு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை விற்று தீர்த்தார்கள்....

அடுத்தது கடந்த வருடத்தில் நடந்த நித்யானந்த சாமிகள் மற்றும் நடிகை ரஞ்சிதா வின் அந்தரங்கம் என்று ஒரு வருட சிறப்பு பிரதிகள் விற்று முடித்தார்கள்....

இதற்கிடையில் ஒரு காலத்தில் ஒரு நடிகையின் கதை என்று ஒரு மெகா தொடரையும் பதிவு செய்தார்கள்.....

அதன் பிறகு தற்போது தன்னை பற்றியே ஒரு சுயசரிதை ஒன்றை வெளியிடுகின்றார் நக்கீரன் கோபால் அவர்கள். அதில் எந்தளவிற்கு உண்மை இருக்க முடியும் என்பது அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்...

இதில் வேடிக்கை என்னவெனில் நக்கீரனில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் அதை நாங்களே படிக்கிறது கிடையாது....எப்போ பார்த்தாலும் அந்த "அம்மா" சரியில்லே, அந்த அம்மா கொடுங்கோல் ஆட்சி பண்ணுது, இந்த "அய்யாதான்" டாப் னு மனசாட்சியை வித்து கதை எழுதுவாரு னு சொன்னாரு...

அடுத்தது நக்கீரன் மட்டும்தான் சர்வே எல்லாம் எடுக்குமா? நாங்களும் எடுப்போம்ல...

அதுலே நடிகைகள் படம் போட்டு சினிமா பக்கம் வருதே, அதுக்காகத்தான் 57 சதவிகிதம் பேரு படிக்கிறாங்க...

அடுத்தது வேற எந்த புக்கும் கிடைக்கலேனா நக்கீரனை வாங்கி படிக்கிறது 32 சதவிகிதமாம்...காரணம் அதிலே இருக்கிற விசயங்கள்ல பாதிக்கும் மேல பொய் தான்னு எல்லோரும் புரிஞ்சிகிட்டாங்க....

இடையில் ஒரு உருப்படியான விஷயம் என்னவெனில் மன ரீதியான தொடர் ஒன்றை வெளியிடுவதை 9 சதவிகித பெருசுகள் படிக்குது... அவ்வளவுதான்...

தன்னை பற்றிய ஒரு சுயசரிதைய யாருமே படிக்கிறது இல்லையாம்...அதுல வெறும் 2 சதவிகிதம்தான் படிக்கிறாங்க...

இதழோட பேரை "நக்கீரன்" னு வைச்சிட்டு எழுதுறது எல்லாம் "மன்மதன்" ரேஞ்சுக்கு இருந்தா யாருதான் அதை வாங்கி படிப்பாங்க...

ஒரு சின்ன உதாரணம்....2011 தேர்தல் கணிப்புகள் என்று ஒன்று வெளியிட்டார்கள்....அதிலே கணிப்பு உண்மையா இருந்தது னு பார்த்தா வெறும் 8 - 10 வேட்பாளர்கள்தான்.....
அதிமுக கட்சியே இல்லாமல் போகும், தேமுதிக இந்த தேர்தலோட வீட்டுக்கு போயிடுவாரு னு போட்டாங்க....எதுவுமே நடக்கலை, திமுக கட்சியே இல்லாம போயிடுச்சு....பாமக, விசிக, காங்கிரஸ் மண்ணை கவ்விடுச்சு....

உள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை ஸ்பெக்ட்ரம் வழக்கு மிக பயங்கரமான வழக்கு என்று அறிவித்தது...ஆனால் நக்கீரன் அப்படி எதுவுமே நடக்காதது மாதிரி செய்திகள் போடுதே, அது எப்படிங்க???? 

துதி பாடுறது னு நான் கேள்வி பட்டிருக்கேன்....இப்போதான் நக்கீரன் பத்திரிகை ரூபத்துல பார்க்குறேன்....அடுத்தது எனக்கு ஒரு சின்ன ஆசை என்னான்னா


ஒரு காலத்திலேயே காட்டுலே இருக்கிற வீரப்பனை போய் பார்க்கிறதுக்கு போனப்ப "தமிழ்நாட்டு மக்களுக்காக நான் ஏதாவது சேவை செய்யனும்னு நினைக்கிறேன்...அது என்னோட கடமை" னு சொன்னவரு நம்ம தமிழக மீனவர்களை விடுதலை செய்யுறதுக்கு ஸ்ரீலங்கா விற்கு போயிட்டு வந்திருக்கலாம்....பரவாயில்லை, அடுத்த வாட்டி படகுல போய் சிங்கள ராணுவ வீரன் கிட்டே பேசி நம்ம இந்திய(தமிழக) மீனவர்களை கூட்டிட்டு வந்திருவாரு னு நம்புறோம்....அவரைத்தான் அனுப்பனும்....

1 comment:

  1. But Nakeeran is better than dina thanthi paper

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...