பங்காளிங்க..

Tuesday, July 5, 2011

"அயிட்டம்" எச்சரிக்கை

சீனா அயிட்டம் எப்பவுமே கவர்ச்சிக்கு பெயர் பெற்றதுங்க....

உள்ளே சரக்கு இருக்கோ இல்லையோ, ஆனா வெளியே கவர்ச்சி தலை தூக்கும், அயிட்டத்தோட அழகை பார்த்து பிரிச்சு பார்த்தா, நம்ம பொழப்பு நாறிப்போகுமே...
 
அதற்காகவே இந்த விழிப்புணர்வு கட்டுரை 

உதாரணமாக பெண்கள் தலையில் அணியும் ஹேர் பேண்ட் 

என்ன அழகாக இருக்கின்றது பாருங்கள்,,,,
இது எப்படி தயாரிக்கப் படுகின்றது என்று பார்க்கலாமா?

ஒரு பேண்டை வாங்கி கட் செய்து பார்ப்போமே....
என்ன அது ஏதோ இலாஸ்டிக் போல இருக்கே? 


கொஞ்சம் இழுத்து பார்ப்போமா? அப்படி என்னதான் வச்சிருக்கானுங்க...


ஒருவேளை ரப்பர் சீட் வச்சிருக்கானுங்க போலிருக்கே? நல்லா செஞ்சிருக்கானுங்க...இவனுங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீப்பா கிடைக்குது? அது என்ன ரோஸ் கலர்ல வழுக்கு வழுக்குன்னு இருக்கே, இழுத்து வெளியே எடுத்து பாரு மக்கா? 

அடங்கொக்கா மக்கா......சண்டாளப்பாவிகளா, சீப்பா கொடுக்கிறப்பவே நினைச்சேன்.... 

அடச்சே இந்த கண்ராவிய என் பொண்ணு வாயிலே வேற வச்சி கடிச்சி கடிச்சி இழுத்து வச்சாளே, நினைச்சாலே குமட்டி கிட்டு வருதே? 

என்ன அது னு யோசிக்கிறீங்களா? சீனால யூஸ் பண்ணி போட்ட "காண்டம்"தாங்க அது, 

எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க? ரூம் போட்டு யோசிப்பானுங்களோ? 
வேஸ்ட் பொருளை கூட எப்படி எல்லாம் பயன்படுத்துரானுங்க னு நினைச்சு பாராட்டுறதா, இல்லே நம்மளை கோமாளியா மாத்திட்டானுன்களே னு புலம்புறதா தெரியலையே? 

அடுத்த அயிட்டத்தை பாருங்களேன்.....
இது யு எஸ் ல இருக்கிற வால்மார்ட் ல வந்த சீனா அயிட்டம், சாதாரணமா யுஎஸ் ல செருப்பெல்லாம் குறைஞ்ச விலைன்னு பார்த்தா எப்படியும் 10 டாலர் இருக்குமாம், ஆனா சீனா அயிட்டம் ரேட்டை பாருங்க, வெறும் 2.44 டாலர்தான், மக்கள் எதை வாங்குவாங்க....
நம்ம ஊர்காரன் மாதிரியே அங்கன இருக்கிற ஒரு மிடில் கிளாஸ் ஆளு வாங்கிட்டு என்ன பாடு படுறானு பாருங்களேன்....

செருப்பு சூப்பெரா இருக்குல்ல? இப்போ பாருங்க, இதை போட்ட மூணு வாரம் கழிச்சி அவன் எந்த நிலைமைக்கு போயிட்டான்னு,

முதல் வாரம் - 
  
 இரண்டாவது வாரம்

மூணாவது வாரம் 

போச்சே, ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்துச்சே என் காலு, 

எப்படி இருந்த நான் ? இப்படி ஆயிட்டேனே? 


சீனா அயிட்டம் வாங்கலையோ? சீன அயிட்டம்!  

இந்தியாவில் மெதுவாக சீனா அயிட்டங்கள் நிறைய தலை எடுத்துள்ளன

இன்றைய பேன்சி அயிட்டங்களில் நிறைய சீன பொருட்கள்தான் இடம் பெற்று இருக்கின்றன, மற்ற பொருள்களை விட சீனா அயிட்டத்தின் விலை பல மடங்கு குறைவு....

அதனால் மக்கள் இன்றைய தேவைக்கு சீன பொருட்களை விரும்பி வாங்குகின்றார்கள்....
சீன அயிட்டம் எல்லாமே மிக கவர்ச்சியாக இருக்கும்.....

ஆனால் அழகு என்றுமே ஆபத்துதான் என்பதை மக்கள் நன்கு உணருதல் வேண்டும்...

7 comments:

 1. மிக பயனுள்ள பதிவு.
  எனக்குள்ள கவலை இந்த மாதிரி பயனுள்ள பதிவு எல்லோரையும் சென்றுஅடையுமா என்பதுதான்.

  நண்பரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உண்மைதாங்க வெளித்தோற்றம் மற்றும் கவர்ச்சியை நம்பி இன்று சீனப் பொருட்களை இந்தியர்கள் வாங்கி வருகிறார்கள்..
  அவற்றின் விளைவுகளையும் அறிந்தப்பிறகு அதை விட்டு விட்டால் நல்லது..

  அரசும் ரசாயண பூச்சுள்ள பொருட்களை தடை செய்துள்ளது..

  ReplyDelete
 3. நல்ல விழிப்புணர்வு பதிவு..

  ReplyDelete
 4. நல்ல பதிவு நண்பா, தரத்துக்கு ஏற்ற போல தானே விலையும்...

  ReplyDelete
 5. தமிழக மான்செஸ்டர் கோயம்புத்தூரிலேயே சீனா துணிகள் விற்பதைப் பார்த்து பதிவு கூட போட்டேன்.யாரும் கண்டுக்கிற மாதிரி தெரியல.

  ReplyDelete
 6. எனது பதிவை பார்த்து உணர்ந்து கருத்துக்கள் இட்டதற்கு எனது மனமார்ந்த நன்றி...  ராஜ ராஜன் சொன்னது போல் சில பதிவுகளை யாருமே கண்டுகொள்வதில்லை....அதற்கு காரணம் சினிமா மற்றும் அரசியலின் தாக்கம்தானே ஒழிய வேறு எதுவும் இல்லை....

  அரசியல் சாக்கடை மற்றும் சினிமா மோகம் மற்ற நல்ல விசயங்களை மூடி மறைக்கின்றது.....

  ReplyDelete
 7. பயனுள்ள பதிவு ............

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...