மூச்சு விட்டால் கூட பீஸ் புடுங்கும் ப(பி)ணம் தின்னி கழுகுகளா? எங்கள் ஸ்ருதியை மீண்டும் உங்கள் பணத்தால் திருப்பி தர முடியுமா?
மலரினும் மெல்லிய இளந்தளிரடா அவள், இப்படி பொட்டலமாய் அனுப்பி விட்டீர்களே டா?
பொம்மை பேருந்து ஏறினால் கூட தாங்காதே அந்த பிஞ்சு, முழு பேருந்தை ஏற்றி கொன்று விட்டீர்களேயடா?
செய்வதை எல்லாம் செய்து விட்டு, இதற்க்கு காரணமான பள்ளித் தாளாளரை, பேருந்து ஓட்டுனரை, பேருந்து உதவியாளரை, பேருந்து உரிமையாளரை கைது செய்துவிட்டோம் என்று மக்களை அமைதி காக்கச் செய்கின்றீர்களா? இந்த பேருந்து 20 நாட்களுக்கு முன்தான் வட்டாரப் போக்குவரத்தில் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கின்றதாம்..
அங்கே என்னடா ஆய்வு செய்தீர்கள்? எவ்வளவு ரூவாய் என்று ஆய்வு செய்தீர்களா? அல்லது நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று ஆய்வு செய்தீர்களா? ஈவு இரக்க மற்ற கொலைகாரப் பாவிகளா!!!
இந்தியன் திரைப்படத்தில் வந்தது போன்றே இருக்கின்றதே என்று சொல்லும் மக்களே!! இந்தியன் திரைப்படத்தில் கமல் கொடுத்த தீர்ப்பு இங்கே வழங்கப்படுமா? இங்கே இருக்கும் ஓட்டை சட்டமும், நீதியும் என்ன செய்கின்றது? கொலைகாரப் பாவிகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும், போலி அரசியல்வாதிகளுக்கும் எப்போதுமே அது ஜால்ரா அடித்துக் கொண்டுதானே இருக்கின்றது. நேற்று போன அந்த உயிருக்கு ஆதரவாய் எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை வாய் திறக்கவில்லை. காரணம் மாட்டியவன் நம்ம கட்சி தொண்டனோ என்ற அச்சமே! இன்னொரு முக்கிய காரணம் எல்லா அரசியல் கட்சித் தலைவனிடமும் ஒரு கல்லூரி, ஒரு பள்ளிக்கூடம் இருக்கின்றதே? நாளை இதே நிலைமை அவர்களுக்கும் வருமே?
ஸ்ருதியின் அப்பா இந்த குறையை ஏற்கனவே பள்ளிக்கூட நிர்வாகத்திடமும், அந்த வண்டி ஓட்டுநரிடமும் புகார் தெரிவித்து இருந்தும் அந்த பிஞ்சினை காவு வாங்கி விட்டீர்களே...
எத்தனை, எத்தனை கனவுகளோடு அந்த பிஞ்சு இருந்திருக்கும்,? இதற்கு அரசு தரும் தீர்ப்பு என்ன? இறந்த குழந்தைக்கு ஒரு லட்சம் ரூவாய் நிவாரணமாம்...அத்தோடு பள்ளித் தாளாளர், பேருந்து உரிமையாளர், பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து உதவியாளரை கைது செய்து நடவடிக்கை எடுத்து விட்டதாம்...அது மட்டுமல்லாமல் அந்த பேருந்திற்கு சான்றிதழ் அளித்த போக்குவரத்து துறை ஆய்வாளரை பணி இடை நீக்கம் செய்து விட்டதாம்...என்னே உங்கள் நீதி...பணி இடை நீக்கம் பத்தாது, பணிநீக்கம் செய்ய வேண்டும்..லஞ்சம் வாங்கி கொண்டு சான்றிதழ் அளித்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் இடை நீக்கம் சரியான தீர்வு ஆகாது..ஆறு மாசம் கழிச்சு இதே கொலைகாரப் பாவி மீண்டும் ஒரு வாகனத்திற்கு தவறான அல்லது போலியான சான்றிதழ் கொடுத்து இந்த ஆறுமாத இழப்பை சரி செய்து கொள்வான்..இதுதானா உங்கள் நீதி, தீர்ப்பு????
அது மட்டுமல்லாமல் அந்த ஊழியர்களின் பதவிகளை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் வாழ்நாளில் அவர்கள் செய்தது தவறு என்று தெரியும்படி ஒரு மிகப் பெரிய தண்டனை வழங்க வேண்டும்...ஸ்ருதியின் வீட்டிற்கு ஒவ்வொரு கொலைகாரப் பாவியின் குடும்பம் நேரில் சென்று பார்த்து விட்டு வர வேண்டும்...அப்போது அவர்கள் அந்த குடும்பத்தை நேரினில் சந்திக்க வேண்டும், அதை பார்த்து பார்த்து அவர்கள் துடி துடித்து சாக வேண்டும்!!
அவர்கள் அந்த வீட்டு வாசலுக்கு செல்லும் அந்த நொடிப் பொழுது அவர்களுக்கு மரண தண்டனையை விட கொடுமையானதாவே இருக்கும் ..அதை வழங்குமா இந்த நீதிமன்றம்?
இந்த நிகழ்வுகளுக்கு பின்னரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அதே காட்டுமிராண்டித் தனமான வேகத்தில் தான் சென்று கொண்டு இருக்கின்றன. போக்குவரத்து காவலர்களும் இதனை கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தனியார் பேருந்துகள்தான் இந்த லட்சணத்தில் இருக்கின்றது என்று இல்லை. அனைத்து அரசுத் துறை பேருந்துகளும் இதை விட கேவலமான நிலையில்தான் சென்று கொண்டிருக்கின்றது. பாதி பேருந்துகளில் படிக்கட்டுகள், வாசல்கதவுகள், இருக்கைகள், கிடையாது. சில பேருந்துகளில் பிரேக் கிடையாதாம், சில பேருந்துகளில் ஹார்ன் கிடையாதாம்..அப்படிப் பட்ட பேருந்துகள் இன்றும் நகரத்தை வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றது. தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வாங்கி ஏமாற்றுகின்றார்கள். அரசுப் பேருந்துகள் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு தரமற்ற பேருந்துகளை இயக்கி கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்னொரு, ஸ்ருதி மரணிக்கும் முன் அரசும், நீதியும் இதற்க்கு நியாயம் வழங்குமா?
All are true sir...My hearty condolences to the Baby family
ReplyDeleteவேதனை தரும் சம்பவம்.....
ReplyDeleteகுழந்தையின் பெற்றோர்கள் மனம் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...