பங்காளிங்க..

Tuesday, July 24, 2012

பொம்பளைக்கு பொம்பளைங்கதான் எதிரி ??

தலைப்பு என்னவோ அரசியல்வாதிகளை குறிக்கிற மாதிரி இருந்தாலும் நிஜ வாழ்விலும் அது பெரும்பாலும் உண்மைதான்.

உதாரணமா ஏதாவது கர்ப்பிணி பொண்ணு பஸ்சுல ஏறுதுன்னு வச்சிக்கோங்களேன்.உடனே ஆம்பளைங்க எந்திரிச்சு இடம் கொடுப்பாங்க.ஆனா பொம்பளைங்க ஏதோ பிச்சைக்காரிய பாக்குற மாதிரி முகத்தை வேற பக்கம்மா திரும்பிப்பாங்க..

ஏம்மா அவளும் உன்னோட இனம்தானம்மா, கொஞ்சம் இடம் கொடுக்க கூடாதான்னு கேட்டா நானும் பிள்ளைப் பெத்தவ தான்..இப்படி எல்லாம் அலம்பல் பண்ணக் கூடாது னு  முனுமுனுப்பாங்க..

சரி அதுவாவது போகட்டும், மாமியாருங்க நிறைய பேரு மருமகளை டார்ச்சர் பண்ணுவாங்க...கேட்டா   நானும் என் மாமியாருக்கு மருமகளா இருந்திருக்கேன், ஆனா  இப்படி ஒரு   திமிர்  பிடிச்ச மருமகளை  பார்க்க முடியாதுன்னு புலம்புவாங்க.

 சில இடத்துல மருமக மாமியாரை பாடா படுத்துவாங்க..நாளைக்கு நம்ம மகளோ அல்லது மருமகளோ இப்படி பாடாய் படுத்துவாங்களே னு  நினைக்காம கூச்சமே இல்லாம சித்திரவதை பண்ணுவாங்க..

இப்போ காலம் மாறிக்கிட்டு வருது, சீனியர் பொம்பளை ஆபீசருங்க ஜூனியர் பொம்பளை ஆபீசருங்களை அழ வைப்பாங்க. வந்து வைச்சிருக்கு பாருன்னு திட்டித் தீர்ப்பாங்க    சில சமயம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும்...ஏன் மேடம் இப்படி பண்றீங்க நு கேட்டா நான் மட்டும் இந்த போஸ்டுக்கு சாதாரனமாவா வந்தேன் னு திருப்பி நம்மளையே கேள்வி கேப்பாங்க..

ஆனா இந்த மாதிரி சூழ்நிலையிலே ஆம்பளைக்கு ஆம்பளை குறை சொல்றது, போட்டுக் கொடுக்கிறது ங்கிறது பொம்பளைங்களை கம்பேர் பண்றப்ப ரொம்ப குறைவுதான். 

நான் எல்லா பொம்பளைங்களை யும் சொல்லலை, மேற்கூறிய ரகத்தை சார்ந்த ஒரு சில பொம்பளைங்களை மட்டும்தான் சொல்றேன். உடனே மகளிர் அமைப்பு கொடிய பிடிச்சிக்கிட்டு வந்திருவாங்க..

பாரதியாரே! நீ அவசரப்பட்டு ஆணுக்கு பெண் சரிசமம்னு சொன்னே.
உண்மையில் பெண்ணுக்கு பெண் சரிசமம்னு நீ பாடியிருந்தா நல்லா இருந்திருக்குமே...

இன்னைக்கு பதிவுக்கு தலைப்பு ஒண்ணுமே கிடைக்கலை...ஹி ஹி ஹி 

8 comments:

  1. நல்லாச் சொன்னீங்க... நன்றி !

    ReplyDelete
  2. /// திண்டுக்கல் தனபாலன் said...

    நல்லாச் சொன்னீங்க... நன்றி ! ///

    உண்மைதான் பாஸ்!!!

    ReplyDelete
  3. /// கவிதை வீதி... // சௌந்தர் // said...

    ரைட்டு.. ///

    தேங்க்ஸ் !!!

    ReplyDelete
  4. இப்போ காலம் மாறிக்கிட்டு வருது, சீனியர் பொம்பளை ஆபீசருங்க ஜூனியர் பொம்பளை ஆபீசருங்களை அழ வைப்பாங்க. வந்து வைச்சிருக்கு பாருன்னு திட்டித் தீர்ப்பாங்க சில சமயம் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கும்...ஏன் மேடம் இப்படி பண்றீங்க நு கேட்டா நான் மட்டும் இந்த போஸ்டுக்கு சாதாரனமாவா வந்தேன் னு திருப்பி நம்மளையே கேள்வி கேப்பாங்க../// நான் அனுபவித்த துயர்!

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீங்க...

    மாமியர் டார்ச்சரை தாங்கிக்கிற மருமகளுங்க இன்னுமா இருக்காங்க...? ஒருவேளை அவங்களுக்கு வரதட்சனை கொடுமை சட்டம் பற்றி தெரியாமல் இருந்திருக்குமோ...

    ReplyDelete
  6. /// J.P Josephine Baba said...

    நான் அனுபவித்த துயர்! ///


    சகோதரிக்கு அன்பு வணக்கங்கள்,

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. /// HOTLINKSIN.COM திரட்டி said...

    சரியாகச் சொன்னீங்க...

    மாமியர் டார்ச்சரை தாங்கிக்கிற மருமகளுங்க இன்னுமா இருக்காங்க...? ஒருவேளை அவங்களுக்கு வரதட்சனை கொடுமை சட்டம் பற்றி தெரியாமல் இருந்திருக்குமோ... ///


    தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருபவர்கள் அநேகம் பேர் இருக்கின்றார்கள். பிறந்த வீட்டின் கௌரவத்திற்காக புகுந்த வீட்டினில் சிலர் இன்னமும் வேதனைப் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...