செல் போன் வந்தாலும் வந்துச்சி...சைபர் கிரைம் குற்றங்கள் கண்ணா பின்னான்னு கூடிக் கிட்டே போகுது.. இப்போ, எல்லா பொண்ணுக கையிலும் செல் போன். ஆத்திர அவரசத்துக்கு ன்னு இருந்த காலம் இப்போ மலையேறி போச்சு..எல்லாரோட கையிலும் இப்போ செல் போன்...வித விதமான மாடல், வித விதமான ரிங்-டோன், சூப்பர் காமெரா, இப்படி பல பல வசதிகள்...இது தவிர ஒருத்தர்கிட்டே பேசுறப்பவே இன்னொருத்தரும் ட்ரை பண்ணா பாட்டு வரும்..அவருக்கு சந்தேகமே வராது...என்னா டெக்னாலஜி??!!!??
நாம தினமும் பாக்குறோம், அந்த பொண்ணுங்க கையிலே பஸ்சுக்கு காசு இருக்கோ இல்லையோ, சாப்பாடை எடுத்து வச்சுதோ இல்லையோ? கரெக்டான ஸ்டாப்புல இறங்குதோ இல்லையோ? ஆனா செல் போன் ல மட்டும் பேசுறதை நிப்பாட்டுறதே கிடையாது. இதையே மேட்டரா வச்சிக்கிட்டு பத்து பொண்ணுககிட்டே சர்வே எடுத்து பார்த்தோம், (உனக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா டா) அப்பா அம்மா அந்த பொண்ணுகளை நம்பி காலேஜுக்கோ, வேலைக்கோ அனுப்புறாங்க..இன்னும் சொல்லப் போனா அவங்களை நம்பி பொம்பளை பிள்ளைங்க முன்னேறனும்னு அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கிறாங்க..ஆனா அவங்க மொபைல் போன்ல அவங்க பாய் பிரண்டுக்கு பேசுறதுக்கு முன்னுரிமை கொடுத்து பெத்தவங்களை ஏமாத்துறதா நினைச்சு அவங்களே ஏமாந்து போறாங்க..
இப்படித்தான் ஒரு பொண்ணு சமீபத்துல திடீருன்னு தற்கொலை பண்ணிக்கிடுச்சி...காதல் தோல்வியா இருக்குமோ நு விசாரிக்க ஆரம்பிச்சாங்க..பெத்தவங்க அவளோட மொபைலே தேடுனாங்க..எதுவுமே சந்தேகப்படும்படியா இல்லை..அப்புறம் வேலை செய்யுற இடத்துல விசாரிச்சாங்க..அதுக்கப்புறமா அவ போற பஸ்சுலேயும் விசாரிச்சாங்க..எதுவுமே கிடைக்கலை...கடைசியிலே போலீஸ்கிட்டே போனாங்க..
அவங்க சைபர் கிரைம் கிட்டே சொல்லவும்..அவங்க அந்த மொபைல்ல இருக்கிற ஒவ்வொரு பொண்ணுக நம்பருக்கும் போன் போட்டு பார்த்தாங்க..என்ன ஆச்சரியம்??? போன் போட்டு பேசுனப்ப எல்லோருமே ஆம்பளை பசங்க??? எங்கே தப்பு நடந்திருக்கு? அந்த பொண்ணு மொபைல்ல எல்லா ஆம்பளைப் பசங்க பெயரையும் பொம்பளை பேருல சேவ் பண்ணி வச்சிருக்கு..உதாரணத்துக்கு ராஜா ங்கிற பெயரை ராஜி, மோகன் கிற பெயரை மோகனா, இப்படி மாற்றி வச்சிருக்கு...அப்போ என்ன அர்த்தம்? வீட்டுக்கு தெரியாம பெயரை மாத்தி வச்சி பெத்தவங்களை ஏமாத்தி கிட்டு இருந்திருக்கு. கடைசியில் அதுல இருக்கிற ஒரு பொண்ணோட நம்பர் மட்டும் சுவிட்ச் ஆப் ல இருந்துச்சி..விசாரிச்சதுல அவன்தான் இந்த பொண்ணு தற்கொலைக்கு முக்கிய காரணம்????????????................
இதுனால பெத்தவங்க பொண்ணுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்திட்டு கடமை முடிஞ்சதா நினைக்காதீங்க..அவ்வப்போது கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..என் பொண்ணை நான் சந்தேகப்படலாமா? அவ அப்படிப்பட்டவள் கிடையாது நு நீங்க நினைக்கிறது உண்மைதான்..அவங்க தப்பு செய்யலைனா நீங்க காலம் முழுக்க நிம்மதியா இருக்கலாம்...ஒருவேளை தவறான வழியிலே போயிருந்தா? ஒருவேளை யார்கிட்டேயும் தப்பா மாட்டி இருந்தா அப்போ இந்த மாதிரியான உங்களோட கண்காணிப்பு அவங்களோட எதிர்காலத்தையும், மானத்தையும், உயிரையும் காப்பாத்துமே? ஆகவே பெற்றோர்களே உசார்!!
Very Nice, Thanks for your info..
ReplyDeleteIn my opinion, in this modern technological times, it is unavoidable to use gadgets. Instead of spying/monitoring our own kids, the best thing to do is to develop a positive relationship with our children(so they wont be afraid of discussing any topic), develop mature thinking in them, give them self confidence and the intelligence to make correct decisions.
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் மிக மிகத் தேவையான பதிவு.
ReplyDeleteமனப்பூர்வ பாராட்டுகள்.
சிந்திக்க வைக்கும் பதிவு...
ReplyDeleteபெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளை கண்காணிப்பது என்பதே இல்லாமல் போய்விட்டது... காரணம் அலுவலகம் போய்வருவதற்கே பெற்றோர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கே போய் பிள்ளைகளைக் கவனிப்பது...
நல்ல பகிர்வு !
ReplyDeleteதமிழ் மணத்தில் ஒட்டு போட்டால் No such post என்று வருகிறது... சரி செய்யவும்.
பகிர்வுக்கு நன்றி...
இதை எல்லாம் எடுத்து பெற்றவர்களிடம் சொன்னால் நம்மை அடிக்க வறாங்க .. கேட்டால் தங்க கம்பியை சந்தேகப் படுகின்றோமாம் !!! போங்க பாஸ் !
ReplyDeleteLoveely blog you have here
ReplyDelete