பங்காளிங்க..

Sunday, July 29, 2012

வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு முஸ்லீம் !!!

இது எனது நண்பன் ஒருவன் எனக்கு அனுப்பிய ஒன்று. இது எனது சொந்த படைப்பு அல்ல. இது ஒரு வைரஸ் நிரப்பப்பட்டுள்ள மின்னஞ்சலின் தலைப்பு ஆகும். அது வெளி வந்திருக்கும்  விதம் ஆங்கிலத்தில் "BLACK MUSLIM IN THE WHITE HOUSE".

இதுவரை இதை அனுப்பியவர்கள் விவரம் தெரியவில்லை. ஆனால் ஒருவேளை உங்கள் நண்பரிடம் இருந்து கூட அல்லது மொத்த குரூப்பில் இருந்து கூட வெளி வரலாம். அப்படி வந்தால் என்ன ஆபத்து என்று பார்க்கின்றீர்களா?
 
இது உங்கள் கம்பியூட்டரின் சி டிரைவை ஒன்றுமே இல்லாமல் அழித்து விடுமாம். அந்த மின்னஞ்சலை திறந்ததும் ஒரு ஒலிம்பிக் டார்ச் ஒன்று எரியத் தொடங்கி உங்கள் சி டிரைவ் மற்றும் உங்கள் மின்னஞ்சல் தகவல்கள் என்று ஒட்டுமொத்த கணினி செயல்பாட்டையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
 
மெக்காபீ இதை பற்றி கூறும்போது இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கு மென்பொருள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அறிவித்து இருக்கின்றது. ஆதலால் இந்த தலைப்பினில் வரும் மின்னஞ்சலை உடனடியாக அளித்து விடுமாறு எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

உடனே இது பற்றி நான் கூகிளில் தேடும் போது இது பொய்யான தகவல் என்று வெளிவந்து இருக்கின்றது. எது உண்மை? என்று தெரியவில்லை.. மேலும் அதில் இன்விடேசன் என்ற பெயரில் உங்கள் நண்பர் அனுப்பி இருந்தால் உடனே உங்கள் சிஸ்டத்தை உடனே அணைத்து  விடவும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அப்போ எதுதான் சாமி உண்மை? நல்லா கிளப்புறாங்கப் பா பீதிய...

1 comment:

  1. Thank you sir, But many are threatening us like spreading fake messages like this.
    Anyway essential information!

    Mohamed Salim
    Pune.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...