நம்ம வாழ்க்கையிலே ஒரு அங்கமா மாறிக்கிட்டு வர்ற கூகிளைப் பத்தி சில விஷயம் நாம தெரிஞ்சிக்கிறது ரொம்ப அவசியம்னு நான் நினைக்கிறேன்..நீங்க என்ன நினைக்கிறீங்க?
பிள்ளை பிறந்தா பேரு வைக்குரதுலே இருந்து கடைசியா ஈடுகாடு போற சடங்கு வரைக்கும் நாம கூகிள் குழுவை நம்பி இருக்கோம்..ஆனா அவங்க என்ன செய்யுறாங்க னு தெரியுமா? .
கூகிள் என்பதே ஒட்டுமொத்த இணையதளம் என்று கிடையாது, ஆனால் நமது வாழ்க்கையில் இன்று கூகிள் தேடுதல், ஜிமெயில், யூ-டியூப், கூகிள் வரைபடங்கள் மற்றும் கூகிள் தயாரிப்புகளோடு ஐக்கியமாகி விட்டோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் படி அதைப் பற்றி விசாரிக்கையில் அவர்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பாக எட்டு இடங்களில் தகவல் பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்து நமது தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வருகின்றார்கள். இதில் உலகத்தினில் இருக்கும் அனைத்து மொழிகளும் இதனுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது இடங்களைப் பார்வையிட அவர்கள் பிரத்யேக மிதிவண்டி ஒன்றை அளிக்கின்றார்கள். அதில் சென்று அங்கே அமைக்கப் பட்டிருக்கும் செர்வர் மற்றும் கேபிள் மற்றும் பைப் லைன்களை பார்த்து வரலாம்.
கூகிள் என்பதே ஒட்டுமொத்த இணையதளம் என்று கிடையாது, ஆனால் நமது வாழ்க்கையில் இன்று கூகிள் தேடுதல், ஜிமெயில், யூ-டியூப், கூகிள் வரைபடங்கள் மற்றும் கூகிள் தயாரிப்புகளோடு ஐக்கியமாகி விட்டோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதன் படி அதைப் பற்றி விசாரிக்கையில் அவர்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பாக எட்டு இடங்களில் தகவல் பாதுகாப்பு பெட்டகத்தை அமைத்து நமது தகவல்கள் அனைத்தையும் சேகரித்து வருகின்றார்கள். இதில் உலகத்தினில் இருக்கும் அனைத்து மொழிகளும் இதனுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது இடங்களைப் பார்வையிட அவர்கள் பிரத்யேக மிதிவண்டி ஒன்றை அளிக்கின்றார்கள். அதில் சென்று அங்கே அமைக்கப் பட்டிருக்கும் செர்வர் மற்றும் கேபிள் மற்றும் பைப் லைன்களை பார்த்து வரலாம்.
இது தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம், இந்த இடத்தின் உள்ளே கேமிராக்கள் அனுமதி இல்லை, நார்த் கரோலினாவில் இருக்கின்ற இந்த
படத்துல இருக்கிறது எந்திரன் படத்துல வர்ற ரோபோ கிடையாது. இவர் கூகிள் தகவல் பெட்டகத்தை பாதுகாக்கும் காவலர்.
படத்துல இருக்கிறது எந்திரன் படத்துல வர்ற ரோபோ கிடையாது. இவர் கூகிள் தகவல் பெட்டகத்தை பாதுகாக்கும் காவலர்.
ஒருவேளை திடீருன்னு ஏதாவது ஆச்சுனா என்ன பண்றது...ஒட்டுமொத்த உலகமும் இதை
நம்பித்தானே இருக்கு, அதுனால ஒவ்வொரு வினாடிக்கும் பாதுகாப்பா இன்னொரு
பேக்கப் எடுத்து வச்சிக்கிட்டே இருக்கும். அதுக்குத்தான் இந்த தனி செர்வர்.
இதுதான் அப்லோடிங், டவுன்லோடிங் எல்லாத்துக்கும் இதுதான் மெயின்
செர்வராம்.
ஏதோ பால் பண்ணையிலே எடுத்திட்டு நம்மளை ஏமாத்துறான் னு நினைக்காதீங்க..இது
லோவா என்ற பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒன்று. அந்த
சிலிண்டர் எல்லாமே..சர்வர் இருக்கும் அறைகளை வெப்பம் தாக்காமல்
குளிர்விப்பதற்காக கொடுக்கப்படும் கேஸ் மட்டுமே..சுற்றி குளுமையாக இருக்க
வேண்டும் என்பதற்காக மரம், பூங்காக்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இந்த கலர் பைப்பு எதுக்கு தெரியுமா? புளூ கலர் பைப்புல குளிர்ந்த தண்ணீர்
ஓடிக் கிட்டு இருக்கும். அந்த சிவப்பு கலர்ல உள்ளே இருந்து வர்ற வேப்பத்துல
வெந்நீரா வரும்.. திருப்பியும் அதே வெந்நீர் குளிர்ந்த நீர மாறி மஞ்சள்
பைப்புல ஓடிக்கிட்டே இருக்குமாம். ஒரு சுழற்சி முறையிலே சுத்திகிட்டே
இருக்குமாம்.
இது தீயில் வந்த புகை மூட்டம் கிடையாது. இது டல்லஸ் தகவல் பாதுகாப்பு
பெட்டகத்தில் எடுக்கப்பட்ட ஒன்று. இது உள்ளே இருக்கும் வெப்பத்தை
குளிர்வித்து வெளியே வரும் புகை மூட்டம். பார்த்தால் ஏதோ தீ கொழுந்து
விட்டு எரிவது போன்ற தோற்றத்தில் இருக்கும்.
இந்த புளூ கலர் லெட் எல்லாம் எரிஞ்சுதுனா எல்லாம் பெர்பெக்டா ஓடுதுன்னு
அர்த்தமாம். இல்லேனா எங்கியோ பிரச்சினைன்னு பார்ப்பாங்களாம். லெட் எதுக்கு
யூஸ் பண்றீங்க? நல்லா பவர்புல் லைட்டா போட வேண்டியதுதானே னு கேட்டதுக்கு அதுதான் நல்ல எரியும்..கரண்ட்டு ரொம்ப ஆகாது, எதுக்கு பணத்தை வேஸ்ட்டு பண்ணனும்னு கேட்குறாங்க..
இது பின்லேண்டுல தகவல் பாதுகாப்பு பெட்டகத்துல எடுக்கப்பட்ட ஒண்ணுங்க..லாங் ஷாட்டுல எடுத்திருக்காங்க..குளிர் காலத்துல எடுத்தது. எப்படி பனி படந்திருக்கு பாருங்க..(புது வெள்ளை மழை, இங்கு பொழிகின்றது..அப்படீன்னு டூயட் பாடப் போறீங்களா?)
ஹாமினா, பின்லேண்டுல இந்த மிகப் பெரிய செர்வர் அமைச்சு வச்சிருக்காங்களாம்.
இதுக்காக ஒரு பழைய பேப்பர் மில்லை விலைக்கு வாங்கி புதுப்பிச்சு
வச்சிருக்காங்களாம். எவ்வளவு மழை, வெள்ளம், புயல்னு வந்தாலும் தாங்குற
மாதிரி இதை வச்சிருக்காங்களாம்.
ஒவ்வொரு தகவல் பெட்டகத்திலும் இம்மாதிரியான மகிழ்வு மன்றங்கள்
இருக்கும்...ஊழியர்கள் தனது நேரத்தை இங்கே செலவழித்து கொள்வார்கள். இது
ஹாமினா என்ற பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்த அண்ணாச்சி பேரு, மைக் பர்ஹாம், இவர் என்ன செய்யுறாருணா , மதர் போர்டை
பார்ட் பார்ட்டா கழட்டிக்கிட்டு இருக்காரு. முடிஞ்சவரைக்கும் ரிப்பேர்
செய்வாங்களாம்...இல்லேனா இப்படி பார்ட் பார்த்தா கழட்டி அதை சுக்கு நூறா
உடைச்சு நட்டு, போல்ட்டு, பிளாஸ்டிக் னு தனி தனியா பிரிச்சு
வச்சிருவாங்களாம். அவர் பனியன்ல கூட கூர்ந்து பாருங்க கூகிள் னு
போட்டிருக்கு பாருங்க...
இந்த இடத்துல இருக்கிற ரவுட்டர் மற்றும் சுவிட்சாஸ் மூலமா எல்லா மக்களும் எல்லோர் கூடயும் பேச முடியுமாம்.
இதோட ஸ்பீடு எவ்வளவு தெரியுமா? சாதாரண வீடுகள்ல இருக்கிற கனெக்சன் ஸ்பீடை
விட 2000,000 மடங்கு வேகமா இருக்குமாம். பின்னே இருக்காதா?
ஆண்டிப்பட்டியிலே இருந்து அமெரிக்காவுக்கு பேசனுமினா இவ்வளவு ஸ்பீடு
கொடுத்தாதானே முடியும்..
சரி வாங்க, இப்போ நம்ம ஊருக்கு போவோம்!!!
கூகிள் என்பது ஆணா? அல்லது பெண்ணா? னு தலைப்பு போட்டிருக்கேனே!
என்னைப் பொருத்தவரைக்கும் கூகிள் என்பது பொண்ணுதான், எப்படீன்னு யோசிக்கிறீங்களா?
என்னைப் பொருத்தவரைக்கும் கூகிள் என்பது பொண்ணுதான், எப்படீன்னு யோசிக்கிறீங்களா?
கூகிள் செர்ச் ல போயி ஒரு வாக்கியத்தை அடிக்க ஆரம்பிங்க...உங்களை உங்க
இஷ்டத்துக்கு அடிக்க விடாது...அது அதோட இஷ்டத்துக்கு பத்து யோசனை
சொல்லும்...நாம 'வேலை' வேணும்னு கேட்டா அது 'வேளாண்மைய' பத்தி சொல்லும்..நம்ம
இஷ்டத்துக்கு விடவே விடாது..அப்ப அது பொண்ணுதானே..
நல்லவேளை என் வீட்டுல இதைப் பாக்கலை!!!!!
very amazing...
ReplyDeleteநன்றி சகோதரி!, வருகைக்கும், கருத்திற்கும்
Deleteநாம் அதிகமா பயன்படுத்தற கூகிள் பத்தின விவரங்களை தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்தான்.
ReplyDeleteத.ம
உண்மைதான் சகோ, பயன்களை மட்டும் அனுபவிக்கிறோம்...பயன் வந்த பாதையை மறந்து விடுகின்றோம்...
Deleteநன்றி - அறிந்து கொண்டேன் தகவலுக்கும் பகிர்வுக்கும் மீண்டும் நன்றி
ReplyDeleteநன்றி தோழரே,
Deleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்....
//நம்ம இஷ்டத்துக்கு விடவே விடாது..அப்ப அது பொண்ணுதானே..//
ReplyDeleteகண்டுபிடிப்பு ஹஹா ஹா
கரெக்டா...கோர்த்து விட்டுடீங்களே தோழரே....எப்படி மனைவியை சமாளிப்பதுன்னு கூகில செர்ச் பண்ண வேண்டியதுதான் இனி நம்ம வேலை..
Deleteமிகவும் பயனுள்ள தகவல்!
ReplyDeleteSupparo Superrrrrrrrrrrrru
ReplyDeleteபயனுள்ள பதிவு..
ReplyDeleteமுடிவு அருமை.
பதிவை காட்டிலும் முடிவைத்தான் ரொம்ப நேசிக்கிறீங்க போலிருக்கு, அனுபவம் அதிகம் போல
Deleteஅய்யா பின்னிட்டீங்கய்யா. இதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் தோணுமா. நிஜமாவே இது பால் பண்ணைதானே.
ReplyDeleteநான் நினைச்சேன்...அண்ணாமலை படத்துல வர்ற ரஜினிகாந்து மாதிரி பட்டை எல்லாம் போட்டிருக்கப்பவே தெரியும்...நீங்க பால் பண்ணை நியாபகமாகவே இருப்பீங்கன்னு...
Deleteஆமா எப்படி மௌஸ் நகர்த்தினா குப்பை கொட்டுற மாதிரி செய்ஞ்சீங்க. தூள்
ReplyDeleteஉங்களுக்கு என் மேல எதுக்குங்க இவ்வளவு கொலை வெறி? நான் பூ விழுற மாதிரி இருக்கேன்னு, நினைச்சேன்? உங்களுக்கு அது குப்பை மாதிரி தெரியுதா? பலே, பலே...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..
DeleteNice
Delete