"ஆல்கஹால்" குடிச்சான் மட்டையாயிட்டன்னு சொல்றத கேள்விப்
பட்டிருப்பீங்க..ஆனால் அந்த சரக்கு யோகாவின் பயிற்சிகளை கத்துக்
கொடுக்கின்றது என்பது பலரும் அறியாத ஒன்று. சமீபத்தில் இ.கு.
சங்கம் கண்டுபிடித்த தகவலின் படி, பலவிதமான யோகப் பயிற்சிகளுக்கு மூல காரணமாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சங்கம் கண்டுபிடித்த தகவலின் படி, பலவிதமான யோகப் பயிற்சிகளுக்கு மூல காரணமாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சரக்கு தொடர்ந்து குடிப்பவர்களுக்கு யோக கலை எளிதில் கை கொடுக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை என்பதையே இப்படங்கள் காட்டுகின்றது.
அதுபோல தென் தமிழ்நாட்டினில் இருந்து சென்னை வரும் இளைஞர்கள் ஆங்கிலம்
கற்பதற்கு, பேசுவதற்கு மிகவும் சிரமப் படுகின்றார்கள். ஆனால்
ஆல்கஹாலின் உந்துதலால் இங்கிலாந்தில் உச்சரிக்கும் ஓசையோடு எளிமையாக
அவர்களாலும் ஆங்கிலம் பேச முடிகின்றது. அதுவும் அரை மணி
நேரத்திற்குள்ளாகவே. முப்பது நாட்களில் ஆங்கிலம் பேச வேண்டுமா? என்ற
புத்தகத்தை மூட்டை கட்டி வையுங்கள். முப்பது நிமிடத்தில் ஆங்கிலம்
பேசுங்கள்...
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
குறிப்பு: மேற்கூறிய அனைத்துமே தவறான வழிகாட்டுதலாகும். அதனால் இந்த மாதிரியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போகாதீர்கள். சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள். நன்றி..
//இ.கு.
ReplyDeleteசங்கம்//
உறுப்பினர் படிவம் எங்கே கிடைக்கும்....இல்ல சங்கத்துல சேரத்தான்.
மன்னிக்கணும்...இந்த வருஷம் மெம்பர்ஷிப் முடிஞ்சிடுச்சு...அடுத்த வருசம்தான் இனிமே பதிவு செய்ய முடியும்..
Delete//குறிப்பு: சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள்..//
ReplyDeleteஇப்படி சொல்லீட்டா மட்டும் கேட்ருவோமாக்கும்.
நீங்க கேட்க மாட்டேன்க னு எங்களுக்கு நல்லாவே தெரியும்...அதுனாலதான் ரொம்ப சின்ன எழுத்துல போட்டிருக்கோம்...சினிமாவிலும் அப்படித்தானே போடுறாங்க...
Deleteஅந்த "குறிப்பு"ன்னு போட்டு எழுதி இருக்கிறத யாராவது படிச்சிட போறாங்க நண்பா... இன்னும் கொஞ்சம் சின்னதா எழுதுங்க :-)
ReplyDeleteமுயற்சி பண்ணேன்...முடியலை தலைவா! அடுத்தவாட்டி குறிப்பே போடாம விட்டு விடுறேன்...சரிதானே..
Delete
ReplyDelete\\குறிப்பு: மேற்கூறிய அனைத்துமே தவறான வழிகாட்டுதலாகும். அதனால் இந்த மாதிரியான விளம்பரங்களை பார்த்து ஏமாந்து போகாதீர்கள். சரக்கு உங்கள் கவுரவத்தை, உங்கள் உடலை கெடுத்து உங்கள் வாழ்க்கையை நாசமாக்கும் என்பதை மறவாதீர்கள். நன்றி..\\ எல்லாத்தையும் படம் முழுக்க காண்பிச்சிட்டு கடைசியில இப்படி பண்ணாதீங்கன்னு டைட்டில் போடும் தமிழ் சினிமா எபக்ட்!! Haa....haa...haa.....
நல்ல அறிவுரை.
ReplyDelete