பங்காளிங்க..

Sunday, November 4, 2012

ரொம்ப அவசரமா...இளைஞர்களே..இளைஞிகளே!!!


இது ரொம்ப முக்கியமான விஷயம்...முடிஞ்சா உங்க நண்பர்களுக்கு பார்வார்ட் செய்ய முயற்சி பண்ணுங்க..

இது தனியா இருக்கிற பெண்களுக்கு, முக்கியமா நைட்டு டூட்டி போற பெண், ஆண் எல்லோருக்கும் பாதுகாப்பானதா இருக்கும்..சின்ன குன்டூசியிலே இருந்து..கடைசியா போற சவப் பெட்டி வரைக்கும் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா னு  உரசிப் பாக்குறோம்...இதையும் பார்த்துருங்கோ..இது நம்மோட உடம்போட ஒட்டிக் கெடக்குற விஷயம் இது..

இப்போ விசயத்துக்கு வாரேன், இப்போ எல்லோர் கையிலும் செல் போன் இருக்கு, அதுல நோக்கியா..அது இதுன்னு நிறைய இருக்கு..

ஆனா செல் போனுக்கு மேல இருக்கிற விசயம்தான் நமக்கெல்லாம் தெரியுது.அதுக்குள்ளே நம்மளோட பாதுகாப்புக்கு நிறைய விஷயம் புதைஞ்சு கிடக்கு, அது யாருக்காவது தெரியுமா?

அந்த எழவு எல்லாம் நமக்கெதுக்கு, என்ன பிரச்சினை என்றாலும் ஒரு கால் பண்ணா என்னோட ஆளு போட்ட வேலையை போட்ட படி போட்டுட்டு ஓடி வந்திடுவான்..அப்படீன்னு நினைக்குறீங்களா..

உண்மைதான்..ஆனா அந்த நம்பரே ஒர்க் ஆகலைனா என்ன பண்ணுவீங்க நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் எண் தற்போது தொடர்பு எல்லைக்கு அப்பால இருக்காரு னு  ஒருத்தர் சொல்வாரே...கேட்டிருக்கீங்களா ..அப்போ என்ன செய்வீங்க?

இது எல்லாத்தையும் விட இப்போ முக்கியமான விஷயம், இப்போ நடக்கிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு விசயம்தான்..அதை விட மேல ஆளைக் கடத்திட்டு போயிடுறாங்க..அந்த மாதிரியான நேரத்துல நம்மால என்ன செய்ய முடியும்..

அதுக்குத்தான் இந்த பாதுகாப்பு டிப்ஸ்..

செல்போனுக்கு உள்ளேயும் நிறைய விஷயங்கள் இருக்குது...அதையும் தெரிஞ்சிக்கோங்க..ஒரு பிரபல பிராண்டு செல் போன் வாங்குன மூணு மாசத்துல பல்லை இளிச்சிடுது , அது எப்படி? விஷயம் இருக்கு.

டிப்ஸ்.1

1
2
3
4
5
6
9
10
11
12
13
14
15
மேல எதுக்கு நம்பர் போட்டு வச்சிருக்கான் னு  பாக்குறீங்களா..கொஞ்சம் பொறுங்க..

இப்போ உங்க செல் போனை எடுங்க..*#06# இந்த மாதிரி டைப் பண்ணுங்க..உடனே உங்க போனோட சீரியல் நம்பர் வரும்..அதுல 7 மற்றும் 8 ஆம் நம்பர் 00 நு வந்தா அது ஒரிஜினல் பேட்டரியிலே செய்யப் பட்டது..

ஒருவேளை 02 அல்லது 20 னு  இருந்தா அது எமிரேட்ஸ் நாட்டுல அசெம்பிள் செய்யப் பட்டதாம்..அதனுடைய குவாலிட்டி சரியா இருக்காதாம்.

சரி 08 அல்லது 80 னு  இருந்தா அது ஜெர்மன்ல தயாரிச்சது..பேட்டரி கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்..

01 அல்லது 10 னு இருந்தா பேட்டரி நல்லா இருக்கும், ஏன்னா அது பின்லான்ட்ல தயாரிக்கப் பட்டதாம்.

13 அல்லது 31 இருந்தா அது எசர்பைஜன்ல தயாரிக்கப்பட்டது..ஆபத்தானது, பாதுகாப்பு கிடையாது..

குறிச்சுக்கோங்க...

டிப்ஸ்.2

அடுத்தது..ரொம்ப அவசரத்துக்கு...இது வேற மாதிரியான அவசரம்கோ..யாருமே இல்லாத இடத்துல ஆபத்துல மாட்டிக்கிட்டீங்க..கீழே விழுந்ததுல செல்போன் டேமேஜ் அல்லது லாக் ஆகிடுச்சு...அல்லது லாக்கை எடுக்க முடியலை..அந்த மாதிரியான நேரத்துல 112 என்ற எண்ணை  அடிச்சா அது எமெர்ஜென்சி காலா மாறிடுமாம்.
நீங்க லாக்கை ஓபன் பண்ணனும்னு அவசியமே கிடையாதுங்க..
ட்ரை பண்ணிப் பாருங்களேன்..

டிப்ஸ்.3

ஏதோ அவசரத்துல உங்க காரை லாக் பண்ணிட்டீங்க..சாவியை மிஸ் பண்ணிட்டீங்கனு வைங்க..ரிமோட் வேற வீட்டுல இருக்குதுன்னு வைங்க..அப்போ,.உங்க வீட்டுக்கு போன்  பண்ணி அங்கெ வீட்டுல இருந்து காரோட அனலாக் கீயை பிரஸ் பண்ணச் சொல்லுங்க...நீங்க உங்க போனை கார் கதவு திறக்குற இடத்துல வச்சா கார் கதவு திறந்திடும்..இதுவும் உண்மைதான்..இதை எங்க ஏரியா காலேஜ் பசங்க டெஸ்ட் பண்ணிப் பார்த்திட்டாங்க.

டிப்ஸ்.4

அப்புறம் இந்த நோக்கியா பொன் வச்சிருக்கிறவங்களுக்கு ஒரு வசதி என்னானா, செல் போன்  பேட்டரி ரொம்ப லோவா இருக்குனு வச்சிக்கோங்க..அந்த நேரத்துல அவசரமா கால் பண்ண வேண்டியிருக்கும்..அப்போ சார்ஜரும் இல்லைன்னு வச்சிக்கோங்க..உடனே..*3370# ங்கிற நம்பரை டயல் பண்ணீங்கன்னா உங்களுக்கு 50 சதவிகிதம் சார்ஜ் கிடைச்சிடும்..திருப்பி அப்புறமா நீங்க சார்ஜ் பண்ணிக்கலாம்..இது நோக்கியா மாடல்ல மட்டும் இந்த வசதி..

டிப்ஸ்.4

செல் போன் திருடர்களுக்கு ஆப்பு வைப்பது எப்படி?

கையிலே வச்சு பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும், திடீருன்னு காணாம போயிடும்..இப்போ வேற தீவாளி டைம்..இந்த தைம்முல எதை நம்மகிட்டே இருந்து அடிப்பாங்கன்னு தெரியாது..இந்த மொபைலோட சீரியல் நம்பரை குறிச்சி வச்சிக்கிட்டா ரொம்ப நல்லது. ஒருவேளை உங்ககிட்டே இருந்து செல் போனை எடுத்திட்டு போயிட்டா கூடா நீங்க அந்த செல் போன் சர்வீசை வேலை செய்யவிடாம தடுக்கலாம்..இந்த சீரியல் நம்பரை அந்த செல் போன்  நிருவனத்துக்கிட்டே சொல்லிட்டா..அப்புறம் அந்த திருட்டுப் பய..எத்தனை சிம் போட்டாலும் அதை வேலை செய்ய வைக்க முடியாது..

இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிரயோசனமா இருக்கும்னு நினைக்குறேன்..



12 comments:

  1. இக்கட்டானா சூல்நிலையிலும் அவசரத்திற்கும் உதவும் தகவலை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இது மிகவும் பயனுள்ள தகவல் என்று தோன்றியதால் தொகுத்து வழங்கி இருக்கின்றேன்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

      Delete
  2. பயனுள்ள அருமையான
    இதுவரை அறியாத தகவல்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி...
      மன்னிக்கவும் அது என்ன த ம 2?

      Delete
  3. Awesome post, informative, I like that emergency call number technique. Keep it up bro, thanks for sharing.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ..

      Delete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி..கண்டிப்பாக இணைகின்றேன்...

    ReplyDelete
  5. நன்றி சிவா அவர்களே..

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...