பங்காளிங்க..

Monday, October 29, 2012

பெண்கள் தண்ணி அடிக்கலாமா? எப்போ அடிக்கலாம்? அதிர்ச்சி ரிப்போர்ட்..

சமீபத்தில் ஒரு கார்டியாலாஜிஸ்ட் உறவினர் ஒருவரை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன்..உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், நான் சொல்கின்றேன் என்று சொன்னார். பல நண்பர்கள் , உறவினர்கள் பல கேள்விகளை கேட்டனர். எனது சகோதரி ஒரு கேள்வி கேட்டார். நான் அவள் கேட்பதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு அவ்வளவா கேள்வி கேட்க வராது. அதுனால அவள் கேட்கும்போது அருகில் இருந்து கவனித்தேன்..முதலில் ஒரு கேள்வி கேட்டாள்..அதாவது நைட் தூங்கி எழுந்திருக்கும் போது அதிகமாக சிறுநீர் வெளியே வருதே...அதுவே பகல் நேரத்துல குறிப்பிட்ட நேரத்துல மட்டும்தான் வருதே...அது ஏன்னு கேட்டா?

உடனே நாங்க எல்லோருமே சிரிச்சோம்..நானும்தான்...அடச் சீ? இதை எல்லாம் ஒரு கேள்வின்னு கேட்டுகிட்டு இருக்கியே?  உடனே டாக்டர்...சிவா..அவ கேக்குறதுல தப்பே கிடையாது...இப்படி சிரிக்கிறியே..உனக்கு அதுக்கு பதில் தெரியுமா? நு என்னை பார்த்து ஒரு முறை முறைச்சார். நைட்டு தூங்குறதுக்கு முன்னாடி அதிகமா தண்ணி குடிச்சா காலையிலே அதிகமா வரும் னு நான் படிச்ச மருத்துவத்தை என்னோட ஞானத்தை பயன்படுத்தி சொன்னேன்...(அப்படீன்னு ஒன்னு இருக்கா உனக்கு)

சரி தம்பி, நைட்டு தண்ணி குடிக்கலேனாலும் காலையிலே அதிகமா ஒன்னுக்கு வரும் தெரியுமா னு சொன்னாரு, அவர் அந்த "ஒன்னுக்கு" னு சொன்ன வார்த்தை என்னை என்னவோ செய்தது. கூறுகெட்ட டாக்டரு..இப்படி பொம்பளைங்க இருக்கிறப்ப அசிங்கமா "ஒன்னுக்கு" னு சொல்றாரே...டீசண்டா பேசத் தெரியலையே இவருக்கு...என் சகோதரி எவ்வளவு நாகரிகமா சிறுநீரு னு சொல்றா? இவரெல்லாம் என்ன டாக்டருக்கு படிச்சாரு? (மனசுக்குள் திட்டிக் கொண்டேன்)..அவரே தொடர்ந்தார்..சிவா இப்போ நாகரிகம் முக்கியமில்லை...கேள்வியின் தன்மைதான் முக்கியம்.. உன் சகோதரி கேட்டதில் தவறு இல்லை..பலருக்கு தெரியாத உண்மை இது..என்று சொல்லிவிட்டு தொடங்கினார்.

நாம் பகல் பொழுதில் நிற்கும் போதோ அல்லது ஓடும்போதோ நமது உடலில் இருக்கும் அல்லது சேரும் நீரானது புவிஈர்ப்பு தன்மையால் உடல் முழுவதும் பரவி விடும்.முக்கியமாக கால் பகுதிகள் வரை சென்று பரவி இருக்கும்..அதுவே இரவு நாம் படுக்கும் போது நமது உடல் சமதளத்திற்கு வந்து விடும். அப்போது நமது கால் பகுதியும்..இடுப்பிற்கு கீழ் பகுதியும் சமதளத்திற்கு வந்து விடும். அப்போது நமது சிறுநீரகமானது (கிட்னி) தண்ணீரை லாவகமாக எடுத்துக் கொள்ளும். அது நிரம்பும் வரை பிரச்சினை இல்லை., நிரம்பியதும்...உடலை சுத்தம் செய்த நீரானது வெளியேறும் பட்சத்தில் அது சிறுநீராக சொல்லப் படுகின்றது.

அதனால் காலையில் எழுந்ததும் ஒண்ணுக்கை அடக்கி வைக்காமல் கழித்து விடுவது மிக நல்லது. காரணம் அப்படி அடக்கும் போது சிறுநீரகத்தில் இருக்கும் அசுத்த நீர் மீண்டும் நம் உடலோடு கலந்து விடும்..அதுவே பல துவாரங்களை அடைத்து விட வாய்ப்புகள் இருக்கின்றது. நான் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்..ஆனால் அவர் அடிக்கடி "ஒன்னுக்கு", "ஒன்னுக்கு" என்று சொன்னதை கேட்டு நான் முகம் சுழித்தேன்..அப்படியே என் சகோதரியை பார்த்தேன்..அவள் எதையுமே சட்டை செய்யாமல் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சரி..சரி..நேரமாச்சு, நாம கிளம்புவோமா? என்று அவளை அங்கிருந்து அப்புறப் படுத்த முயற்சி செய்தேன்..பலனில்லை..அடுத்தது அவள் கேட்ட கேள்வியில் ஒட்டுமொத்த கும்பலும் ஆடிப் போயி விட்டது. டாக்டர் அங்கிள்..பெண்கள் தண்ணி அடிக்கலாமா? எப்போ, எவ்வளவு தண்ணி அடிக்கலாம்? சீ நாயே..வாயை மூடு, எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க பாரு...பேசமா வந்து தொலையிரியா? அடுத்த மாசம் உனக்கு கல்யாணம் டி, நீ இப்படி கேட்டதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டா அவ்வளவுதான்?

டாக்டர் மாமா...உடனே என்னை பார்த்து கண்ணசைத்தார்..(பார்த்தியா, உன்னை  விட சின்ன பிள்ளை, எப்படி புத்திசாலித்தனமா கேக்குது, நீயும்தான் இருக்கியே? அவர் பார்வையின் அர்த்தம் இதுதான்) என்பதை புரிந்து கொண்டேன்..உடனே அவர் பதில் அளிக்க ஆரம்பித்தார்..

பாப்பா, தூங்குறதுக்கு முன்னாடி ஒரு அவுன்சு அல்லது ஒரு கிளாஸ் தண்ணி அடிச்சா? ஸ்ட்ரோக் அல்லது ஹார்ட் அட்டாக் லே இருந்து விடுதலை..அது மட்டுமல்லாம கால் உளைச்சல்..முட்டு அசதி இலே இருந்து கூட விடுதலை கிடைக்கும்..நல்லா தூக்கம் வரும்..
(நான் உடனே பெப்பர் போடணுமா? ஐஸ் போடலாமா னு கேட்க என்னை ஒரு முறை முறைத்தார்..நான் ஒன்னும் தப்பா கேட்கலையே..)

காலையிலே எழுந்த பிறகு ரெண்டு கிளாஸ் தண்ணி யடிச்சா, நமது உள் உறுப்புகள் எல்லாம் நல்லா புத்துணர்ச்சி பெற்றிடும்...உடனே நான் குறுக்கிட்டு அங்கிள், (ஸ்மெல் வருமே னு கேட்க..அதுக்கு அவர் நல்லா பல்லை துலக்கிட்டு அடிச்சா எந்த நாத்தமும் வராது..நீ கொஞ்சம் வாய மூடுறியா னு கேட்குற மாதிரியே இருந்தது...இவனுங்க பேசுறத காட்டிலும் நான் என்னத்தை அப்படி தப்பா கேட்டுட்டேன்)

அதே மாதிரி மதிய உணவு சாபிடுரதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு கிளாஸ் தண்ணி யடிச்சா போதும்..சாப்பாடு நல்லா செரிமானம் ஆயிடும்..நிறைய பேரு சொல்வாங்க தண்ணியடிச்சிட்டா சாப்பிட முடியாதுன்னு..அது தப்பு..அரை மணி நேரத்துக்கு முன்னாடி தண்ணியடிக்கலாம்.

அடுத்தது குளிக்கிறதுக்கும் முன்னாடி கூட ஒரு கிளாஸ் அடிக்கலாம்...குறைந்த ரத்த அழுத்தம் கட்டுபடுத்தும்..(இப்போதான் கரெக்டா பாயிண்டுக்கு வந்திருக்காரு, குளிச்சதும்..போதை தெளிஞ்சு வாடை எல்லாம் போயிடும்..னு நான் மறந்து போய் சத்தமா சொல்ல) அந்த டாக்டர் அங்கிளே என் தலையிலே ஓங்கி ஒரு கொட்டு வச்சிட்டாரு..

அட மடையா இருபத்தி நாலு மணி நேரமும் சரக்கு நினைப்புலேயே இருக்காதே...உன் தங்கச்சி கேட்டது குடிக்கிற தண்ணீர்...அவள் எல்லோரும் ரசிச்சு கேட்கட்டுமே னு சாதாரண பாசையிலே கேட்டா, நானும் அதே அர்த்தத்துல பதில் சொன்னேன்..உன்னை மாதிரி அறிவாளிகளுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தானே விளங்குது னு சொல்ல நான் கப்சிப்...

3 comments:

  1. நல்ல பதிவு. ஆனா தலைப்பு பயங்கர வில்லத் தனமா இருக்கு. ஜானகி,மங்களூர்.

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...