நான் சின்னவனா இருக்கலாம், உங்க எல்லாரையும் விட வயசுல, பணத்துல தகுதி
குறைய உள்ளவனா கூட இருக்கலாம்..அனுபவத்துல கூட சின்னவனா இருக்கலாம்..ஆனா
நான் சொல்றத கேட்டு நடந்தா உங்களுக்குத் தான் நல்லது..நீ என்னடா
சொல்றதுன்னு கண்டுக்காம போனா அப்புறம் உங்களுக்குத் தான் நஷ்டம்...எனக்கு
ஒன்னும் கிடையாது. அதுனால நான் சொல்றத கேட்டு இனிமேலாவது நடங்க.. யாருடா
இவன் சுத்த பயித்தியக்காரனா இருக்கானே யோசிக்காதீங்க...நான் சொல்றது
வாழ்க்கையிலே நடக்கிறது கிடையாது, சாலையிலே நடக்கிறது....
டயாபடீஸ் நோய்க்கு மருந்து...
இரண்டாம் வகை டையபடீஸ் நோயை விரட்டனும்னு நினைச்சா தினமும் 2
கிலோமீட்டர் நடந்து போங்க..உடம்புல இருக்கிற வெயிட்டு குறையிறப்ப தானா அந்த
இரண்டாம் வகை டையபடீஸ் குறையுமாம். கூடுமானவரைக்கும் தினமும் 45 நிமிஷம்
சமதளத்துல நடக்கனுமாம்..தயவு செஞ்சு மாடிப் படி, ஏறி இறங்காதீங்க, அதை விட
சமதளத்துல நடக்குறது ஆயிரம் மடங்கு பெரிய விஷயம்
ஹார்ட் அட்டாக் ???
அதிகமாக பெண்களுக்குத் தான் நெஞ்சு வலி திடீரென்று வரும்..காரணம்
அவர்கள் ஆண்களை விட அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள்..புடவை விலை 100
என்றாலும் அதிர்ச்சியடைவார்கள்..புடலங்காய் விலை கிலோ 10 என்றாலும்
அதிர்ச்சியடைவார்கள்.. அவர்களை கேலி செய்யவில்லை. எளிதில்
உணர்ச்சிவசப்படும் அவர்களைப் போன்றவர்களுக்கு ஹார்ட் அட்டாக் என்பது மிக
எளிதில் வந்து விடும். அதனை தடுப்பதற்கு அவர்கள் தினமும் 20 நிமிடங்கள்
நடந்தாலே போதுமானது. கிராமப் புற, மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள்
கோயில்களுக்கு சென்று விட்டு வருவதனால் சற்று உடலில் தேர்ச்சி பெறுவார்கள்.
ஆனால் நகரத்தில் அபார்ட்மெண்டில் இருக்கும் பெண்கள் வேறு வழியே
கிடையாது...கண்டிப்பாக மொட்டை மாடி அல்லது கார் பார்க்கிங் இடத்தினில்
தினமும் 20 நிமிடம் நடந்தால் மைனர் ஹார்ட் அட்டாக் எல்லாவற்றையும்
தடுத்துவிடலாம் என்கின்றது ஆய்வு. சரி ஆண்களுக்கு இல்லையா? அவர்களுக்கும்
இருக்கின்றது...அவர்கள் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டியது
அவசியமாகின்றது.
புத்திக்கூர்மை தீட்டப்படுது...
மைன்ட்
ஷார்ப் ஆக மாறுவதற்கு தினமும் நடப்பது ஒரு காரணம் என்றும் ஆய்வினில்
கண்டறியப் பட்டுள்ளது. ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது ஏதாவது ஒரு குளறுபடி
என்று இருக்கும் நேரத்தில் பெண்கள் மாற்றாக டிவி பார்ப்பது என்று ஆண்கள்
மாற்றாக தம் அடிப்பது என்றும் அதனால் அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆகிவிட்டதாக
நினைக்கின்றார்கள். அதற்கு மாற்றாக அவர்கள் பத்து நிமிடம் அமைதியாக மிக
மெதுவாக நடந்தால் புதிய வழி பிறக்கும், பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர
புது யுத்தி தோன்றும் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
குறைந்த ரத்த அழுத்தம் வராமல் தடுக்க
தினமும்
10 நிமிடங்கள் என்று கணக்கிட்டு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் நடந்தால்
குறைந்த ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ
வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.
ஸ்ட்ரோக் என்னும் வலிப்பு வராமல் தடுக்க
வாரம் 12 .5 மைல் தூரம் நடந்தால் திடீரென்று வரும் பக்கவாதம் தடுத்து நிறுத்தப் படுகின்றதாம்..
புத்துணர்ச்சிக்கு
நல்ல
மூடே இல்லை, நல்ல மூடுல இல்லை, என்னை கொலைகாரனாக்காதே என்று புலம்பும்
ஆண்களும் சரி..நான் மூட் அவுட், என்னை கொஞ்சம் தனியா விடுங்க நு சொல்ற
பெண்களும் சரி..எல்லா பிரச்சினைகளையும் ஓரங்கட்டி வச்சிட்டு கொஞ்ச நேரம்
அமைதியா நடந்து பாருங்க...மூடு எல்லாம் தானா வரும்...எல்லா மூடும்...உங்க
பிரச்சினைக்கு ஏத்த மாதிரியே..
கலோரியோட வில்லன் யாரு?
தினமும்
20 நிமிஷம் நடந்தா ஒரு வருசத்துல 7 பவுண்டு கலோரிய உடம்புல இருந்து
நீக்கிடலமாம் னு லண்டன் ஆராய்ச்சியிலே கண்டுபிடிச்சிருக்காங்க..
இன்சோம்னியா பேரு நல்லா இருக்கு, ஆனா இது வியாதிங்க...
என்ன
வியாதி? நைட்டு ஆனா தூக்கம் வராது..எப்படி வரும்? மனசுல இவ்வளவு பிரச்சினை
இருக்கிறப்ப? பாதி நேரம் கரண்ட் கிடையாது..வர்ற கரன்ட்டுல பிள்ளைங்கள
தூங்க வைக்கணும்..வியாபாரம் நட்டம்..சிலரு நினைச்சுக்கிறாங்க...நைட்டு
தூங்குறதுக்கு முன்னாடி 1 மணி நேரம் நல்ல நடந்தா களைப்புல
தூங்கிடுவோம்னு...அது முழுக்க முழுக்க தப்புன்னு ஆராய்ச்சில
சொல்றாங்க...அவங்க எதுக்கு அதை சொல்றாங்கன்னா? பகல் முழுக்க வேலைப்
பார்த்திட்டு அப்புறமா நைட்டும் ஒரு மணி நேரம் நடந்த மூட்டு தேய்மானம்
வந்திடும்..அதை விட காலையிலே எழுந்து ஒரு மணி நேரம் நல்லா நடந்திட்டு வந்தா
நம்ம சோம்பல் நீங்கி மத்த வேலையும் சுருசுருப்பா போகும்...நைட்டும்
சூப்பெரா தூக்கம் வரும் னு சொல்றாங்க..
எலும்போட உறுதிக்கு ரொம்ப நல்லது..
ரொம்ப
வேண்டாங்க..ஒரு 15 நிமிஷம் நடந்தா போதும்...எலும்போட பலம்
கூடுமாம்..தேய்மானம் இருக்கத்தான் செய்யும்...ஆனா அந்த தேய்மானம் மத்த
வேலைகளை செய்யுறதா விட நடக்கிறதுல ரொம்ப குறைவாகத்தான் ஆகுமாம்..
ஆயுட்காலம் கூடும்..
நம்ம
பாட்டி தாத்தா வயசு எல்லாம் பார்த்தீங்கன்னா, குறைஞ்சது 80 , 90 தான்
ஆகுது..ஆனா நமக்கு 50 கூட வராது போலிருக்கு...என்ன காரணம்? நாமெல்லாம்
இரண்டு அடி தூரம் போகனுமினா கூட பைக்குலதான் போவோம்..ஆனா அவங்க இரண்டு மைல்
தூரம் போகனுமினாலும் நடந்துதான் போவாங்க..அதாங்க வித்யாசம்..
இப்போ சொல்லுங்க...என் பேச்சை கேட்டு நடப்பீங்களா? மாட்டீங்களா?
நீங்களா சின்னவர்?
ReplyDeleteஅறிவிலும் அனுபவத்திலும் என்னைவிடப் பெரியவர்தான்.
பதிவுக்குப் பாராட்டுகள்.
எல்லாம் உங்க ஆசிர்வாதம் தலைவரே...
Deleteகவர்ந்திழுக்கும் கவர்ச்சியான தலைப்பு
ReplyDeleteஉள்ளே அனைவரும் அவசியம்
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
அடங்கிய அருமையான பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
எதிர்மறை செய்திகள்தான் இன்று பிரபலமடைகின்றன..முன்பெல்லாம் நான் படித்து தூரப் போட்ட விசயங்கள்தான் இன்று பலருக்கு மருந்தாக பயன்படுகின்றது. படித்ததை பகிர்வதில் ஒரு தனி இன்பமே இருக்கின்றது...வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி..
Deleteநடந்துற வேண்டியதுதான்!
ReplyDeleteஅந்த பயம் இருக்கட்டும், நடந்துதானே ஆகணும்!!! வருகைக்கு நன்றி...
Deleteம்ம்ம்ம்ம்ம்
ReplyDeleteரொம்ப நடந்துட்டீங்களோ!!! வருகைக்கு நன்றி..
DeleteOK OK
ReplyDeleteநல்ல பதிவு தான் தலைப்ப பார்த்து ஏமாந்த பயல்கள்ள நானும் ஒருத்தன்.. நல்ல விசயங்கள இப்படி தான் கொண்டு சேர்க்க வேண்டி இருக்கு..
ReplyDeleteமருந்து கசக்கத்தானே செய்யும்...
Deleteஅருமையான பதிவுய்யா, இது அநேகருக்கு பயன்படக் கூடியது, என் பேஸ்புக்ல பகிர்ந்துள்ளேன்.
ReplyDeleteநன்றி...நல்ல கருத்துக்கள் எந்த வழியிலும் பரப்பலாம்.
Deleteகாலால் நடந்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படி நடந்தால் போதுமா இல்லை தலையாலும் நடக்கவேண்டுமா?!!!
ReplyDeleteநீங்கள் மனதளவில் அமைதியாய் காலால் நடந்தாலே போதுமானது ஐய்யா. வருகைக்கு நன்றி..
Deleteநல்ல உபயோகமான பதிவு.வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..
Deleteநல்ல பயனுள்ள தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வருகைக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி...
Deleteபயனுள்ள பதிவு.அருமை.வாழ்த்துக்கள்!
ReplyDelete>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எனக்கு இருக்கிறது வெறும் எலும்பு மட்டும்தான்.
ஒருவேளை நடந்து நடந்து அதுவும் தேஞ்சு போய்டுச்சினா....?
நீங்க சொன்னா சரிதேன் :-)
ReplyDelete