பங்காளிங்க..

Thursday, October 18, 2012

கண்ணால் காண்பது பொய்யா?


என் கண்ணே, என் கண்மணியே..னு வசனம் பேசுவானுங்க..அந்த கண்ணைப் பத்தி வேறு என்ன தெரியும்னு கேட்டா,
பார்க்க முடியும் னு சொல்வாங்க..இன்னும் சிலரை கேட்ட அழ முடியும்னு சொல்வாங்க...அதைப் பத்தி ஒரு நாலு வரியாவது தெரிய வேண்டாமா? கண்ணழகி யைப் பத்தி வண்டி வண்டியா கதை விடுவாங்க..ஆனா அந்த கண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரிய வேண்டாமா?

சரி எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிடுறேன்...உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க...

1 . சராசரி மனுஷன் ஒரு நிமிசத்துக்கு 12 முறை கண்ணை சிமிட்டுவானாம்.

2 . அந்த இத்தனூண்டு கண்ணை செயல்படுத்துறதுக்கு 2 மில்லியன் சிறு சிறு கருவிகள் இருக்குதாம்.


3 . 576 மெகா பிக்சல் திறன் கொண்டதாங்க நம்மோட கண்ணு..


4 . கண்ணுக்குள்ளே இருக்கிற கார்னியாஸ் ங்கிற நாளத்துல மட்டும் ரத்தம் ஓட்டம் இருக்காதாம்...தண்ணீர் போன்ற திரவம் மட்டுமே ஓடிக்கிட்டு இருக்குமாம்.


5 . அந்த சின்னக் கண்ணாலே ஒரு மணி நேரத்துல 36000  பிட்ஸ் டேட்டாவ சேகரிக்க முடியுமாம்...


6 . கண்ணுக்குளே இருக்கிற அந்த பந்து 28 கிராம் எடை கொண்டதாம்.


7 . கண்ணை திறந்து வச்சிக்கிட்டே யாராலும் தும்ம முடியாதாம்..


8 . சரசாரிய ஒரு நாளைக்கு 40000 முறை நாம கண்ணை சிமிட்டுரோம்னு ஆய்வுல கண்டுபிடிச்சு இருக்காங்க.. 

 இந்த அளவிற்கு சிறப்பான கண்ணால மேல காண்பிச்சு இருக்கிற வேண்டாத விசயத்த பார்க்காம நம்ம நல்லதுக்கு தேவையானதா மட்டும் பாருங்க..
கண் தானம் செய்வீர்!!

4 comments:

  1. Replies
    1. ஆச்சரியக்குறியை விட்டுடீங்க! வருகைக்கு நன்றி..

      Delete
  2. வலைபதிவுன்னா இப்படித்தான் இருக்கணும்!
    கண்களைப்பற்றி சொன்ன செய்திகள், அதனுடன் சேர்த்து சொன்ன வாழ்க்கை நெறிமுறை, இறுதியாக சமூகப்பார்வயுடன் கூடிய கருத்து. பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தோழரே, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...