பங்காளிங்க..

Saturday, October 6, 2012

சீனாவின் கொலைக்களம்......எச்சரிக்கை ப்பதிவு!!

துப்பாக்கி ஏந்தி கொல்லவில்லை, தீவிரவாதிகளாக ஊடுருவிக் கொல்லவில்லை...கலப்பட பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மனித உயிர்களோடு விளையாடுகின்றார்கள்.


மெலமயின் என்ற பவுடர் கலக்கப்படும் பால்தான் விஷம் கலந்த பாலாக மாறுகின்றது. கிட்டத்தட்ட ஸ்லோ பாய்சன் என்று கூட சொல்லலாம்.
பொதுவாக இந்த பவுடர் எதற்க்கு அதிகமாக பயன்படுத்துகின்றார்கள் தெரியுமா? கீழே படத்தில் இருக்கும் பிளாஸ்டிக் வகை தயாரிப்புகளுக்கு இதனை பயன்படுத்துகின்றார்கள்.

அடுத்தது அமெரிக்காவில் வீடுகளில் ரிசிஷ்டன்ட் பலகைகள் தயாரிக்க இதனை பயன்படுத்துகின்றார்களாம்.

அது மட்டுமல்லாமால் தொழிற்சாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் இந்த பவுடர் பயன்படுத்தப் படுகின்றது.

ஆனால் சீனா மட்டும் இதனை பால் பவுடரில் கலந்து விற்கின்றது. என்ன காரணம்?  ஏன் இந்த பவுடரைக் கலக்கின்றார்கள் தெரியுமா? இந்த பவுடரை க்கலக்கும் போது தானாகவே அசல் பால் பவுடரின் அளவை குறைத்து விடும். இது அந்தளவிற்கு விலை குறைவு.

இதனை ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்க முடியாதா? முடியாது? காரணம் இதன் நிறம் மற்றும் வாசனை. நிறம் வெண்மையாக இருக்கும். வாசனை - வாசமே இருக்காது. பிறகு எப்படி இதனை பரிசோதிக்க முடியும்.

பாலில் அதிக சத்து என்பது ப்ரோட்டீன். அதே ப்ரோட்டீன் அதாவது நைட்ரஜன் சத்து இந்த மெலமயின்  னில் இருக்கின்றது. பிறகு எங்கிருந்து கண்டுபிடிக்க முடியும். உண்ட பிறகு வரும் விளைவுகளை வைத்துதான் கண்டுபிடிக்க முடியுமாம்.

என்ன விளைவு அப்படி வந்து விடும்? பெரிதாக ஒன்றுமில்லை. சிறுநீரகத்தில் கற்கள் உருவாக்கி விடும். அப்புறம் சிறுநீர் கழிக்க முடியாமல் போகும். இதில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது பச்சிளங் குழந்தைகளும், வயதானவர்களும்தான். ஏனெனில் அவர்கள்தான் அதிகளவில் இதனை உட்கொள்கின்றார்கள்.


அவர்கள் அடுத்தது டாயலிசிஸ் முறைக்குத் தான் அழைத்து செல்லப் படுகின்றார்கள். டயாலிசிஸ் முறை என்பது என்ன? ரத்தத்தை சுத்தம் செய்வது? அதாவது எங்கெல்லாம் அடைப்பு எற்பட்டிருக்கின்றதோ அதனை சுத்தம் செய்வது. இதற்க்கு குறைந்தது 4 மணி நேரமாவது ஆகும். இதை போன்று பாதிக்கப் படுபவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் இதைப் போன்று டயாலிசிஸ் முறையை அவர்கள் ஆயுள் காலம் வரை மேற்கொள்ள வேண்டிய கொடுமை நேரிடுகின்றது.

ஐய்யையோ அப்படி எனில் எவ்வளவு அளவு மெலமயின் சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்டு சமாதானம் ஆகாதீர்கள். இது சாப்பிடவேக் கூடாத பொருள் ஆகும்.

எதில் எல்லாம் இந்த பவுடர் கலந்திருக்கின்றதோ...அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விடுங்கள். குறிப்பாக சீனாவில் உற்பத்தியாகும் வண்ணவண்ண கவர்களை பாக்கிங் கொண்ட பொருட்களை தூர எறியுங்கள்.

இந்தியாவில் எதில் எல்லாம் இந்த பொருள் கலந்திருக்கின்றதோ தெரியவில்லையே என்று அவர்களுக்கே தெரிய வாய்ப்புகள் இல்லை. காரணம் அவர்கள் பால் பவுடர் இங்கே தயாரித்தாலும், அந்த பாலில் கலக்கப்படும் பவுடரை சீனாவில் வாங்கி இருந்தால்? நமது நிலைமை????? உசார்....


இந்த தகவல்களை மின்னஞ்சல் மூலமாக எனக்கு அளித்த நண்பர் திரு. கே.ஜி.கோபாலகிரிஷ்ணனுக்கு மனமார்ந்த நன்றி...

8 comments:

  1. பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு
    பதிவாகத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...

      Delete
  2. This is really shocking.Say no to Chinese products.Avoid all the Chinese products.

    ReplyDelete
    Replies
    1. நம் வாழ்வோடு பல இடங்களில் கலந்து விட்டது சீனாவின் கலப்பட பொருட்கள், கூடுமானவரை தவிர்த்தல் நல்லது...

      Delete
  3. Replies
    1. நிதர்சனமான உண்மை. இப்படி தெரிந்து இவ்வளவு ஆபத்துக்கள். தெரியாமல் எத்தனையோ??

      Delete
  4. சமீபத்தில் தான் சீனாவின் கெமிகல் அரிசி மற்றும் முட்டை குறித்து ஒரு பதிவர் எழுதியதை படித்து அதிர்ந்தேன் இப்ப கெமிகல் பால் குறித்து எழுதியிருக்கிறீர்கள்.

    இலாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மனித உயிர்களோடு விளையாடும் அரக்கர்களை என்னவென்று சொல்வது :(

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...