சென்னை போன்ற மாநகரங்களில்
வெளிநாட்டவர், வெளிமாநிலத்தவர், வெளி மாவட்டத்தினரின் படையெடுப்பால் வீடு
விற்பனை, வீடு வாடகை எல்லாம் பயங்கிரமான விலைகளில் ஏழை, நடுத்தரம்
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெருகி விட்டது. மீறி போய்க் கேட்டால்
தயவு தாட்சண்யம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். உனக்கு ஏத்த மாதிரி உன்னோட
பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி வீடு மேல்மருவத்தூருக்கு பக்கத்துல, அல்லது
திண்டிவனம் தாண்டி ஒரு 350 சதுர அடியிலே காலி மனை இருக்கு, போட்டிரலமா?
கண்டிப்பா எனக்கு அதுல 2 பெர்சன்ட் கமிசன் கொடுத்திரனும். ஐயா என்ன இது?
நான் எக்மோர் ல வேலை பாக்குறேன்..திண்டிவனத்துல இடத்தை வாங்கிப் போட்டு
நான் என்ன செய்யுறது?
என்னை கேட்டா? உங்க பட்ஜெட்டுக்கு அங்கனத்தான் வீடு கிடைக்கும், சீக்கிரம் சொல்லுங்க..அதுவும் அப்புறம் கிடைக்காது..என்னவோ வெந்நீரை காலில் ஊற்றியவாருதான் பேசுவார்கள். சரி அப்படி எனில் நாமெல்லாம் வீடு கட்டவே முடியாதா? வீடு வாங்குவதே மிகப் பெரிய லட்சியமாக இருக்க வேண்டுமோ? சரி வாடகைக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது அதை விட மிகக் கொடுமையானதாய் இருக்கும், ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் போடும் கண்டிசனைப் பார்த்தால் தீவிரவாதிகள் கொடுக்கும் நிபந்தனைகளை விட கொடுமையானதாய் இருக்கும்.
இரண்டு பேருக்கு மேல் வீட்டினில் ஆள் இருக்க கூடாது., தண்ணீர் கொட்ட கூடாது., விருந்தாளிங்க இரண்டு நாளைக்கு மேல தங்க கூடாது. சத்தம் போட கூடாது. சவுண்ட் கூட வைக்க கூடாது..குப்பையை கொட்ட கூடாது..இப்படி எத்தனயோ கூடாது???
அதுனால இப்போ அதிநவீன வசதிகளைக் கொண்ட வீடுகளை MS எம்எஸ் என்ற நிறுவனம் கட்டிக் கொடுக்கின்றது. மிகக் குறைந்த செலவினில் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி கட்டிக் கொடுக்கின்றது.
பயன்கள் - இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு எல்லா வசதிகளையும் பெற்றுத் தருகின்றது. நல்ல காற்றோட்டம்...நல்ல தண்ணீர், சூரிய ஒளியில் மின்சாரம்...இப்போது நமக்கு இருக்கும் பெரும் பிரச்சினையே இந்த மின்சாரம்தான்..அந்த மின் வெட்டு என்பது அறவே இருக்காது..அது மட்டுமல்லாமல் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பே கிடையாது. அந்தளவிற்கு பாதுக்காப்பாய் இருக்கும். அந்த வீட்டின் மாடல்களை உங்களுக்காக தருகின்றேன்...பாருங்கள்..இன்றே பதிவு செய்யுங்கள்...MS Homes.

அதுல பாருங்க, உங்க வீட்டுல திருடன் பயம் இருக்கவே இருக்காது, தைரியமா
நீங்க எந்த ஊருக்கு வேணுமினாலும் உங்க வீட்டோட போயிட்டு வரலாம்...
தினமும் வெயில்ல சுத்துரதால சூரிய ஒளியிலேயே மின்சாரத்தை பயன்படுத்திக்கலாம்..எவனுக்கும் கரண்ட்டு பில்லு கட்ட வேண்டாம்..பேருந்து கட்டணம் கட்ட வேண்டாம்..எங்கன வேணுமினாலும் ஜன்னல் வாசல் கதவு வச்சிக்கோங்க..அது உங்க இஷ்டம்..வாஸ்து படி ரூமை மாத்த வேண்டாம்...வீட்டையே திருப்பி வச்சிக்கலாம்.,
எப்படி நம்ம எம் எஸ் ஹோம்ஸ் பிளான்?
இப்படிக்கு
CEO
Minsaara Siva HOMES

அமரிக்காவில் நிறைய பேர் இப்படித்தான் நிஜமாவே சுத்திகிட்டு இருக்காங்களாம்!!
ReplyDelete