பங்காளிங்க..

Friday, October 5, 2012

மஞ்சள் Vs வெள்ளை - வெற்றி யாருக்கு?


நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தது திமுக....சென்னையில் மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டத்தாலும், ஆங்காங்கே தோண்டப்படும் பாதாளச் சாக்கடை திட்டத்தாலும் ஏற்கனவே அல்லோலகப்பட்டுக் கொண்டிருக்கின்றது சென்னை மாநகரம். இந்த நேரத்தில் மனித சங்கிலி போராட்டம் என்று ஆரம்பிக்குமேயானால் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாகும்...இதை மனதில் கருதி சென்னை காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக கூறப்படுகின்றது.

ஒருவேளை காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தால் ஆளும்கட்சி பயந்து விட்டது என்று சொல்வீர்கள்...மறுப்பு தெரிவித்த காரணத்தால் காவல்துறை யாருக்கோ பயந்து எங்களுக்கு அனுமதி மறுத்து விட்டது என்று சொல்லி இருக்கின்றார்கள். இது ஒன்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு புதிதல்ல. மக்களுக்கும் அது பழகி விட்டது...உண்மையில் இந்த கறுப்பு சட்டை, துண்டு அறிக்கை எல்லாம் எதற்காக?? தமிழ் நாட்டு மக்களுக்காகவா? இல்லை கட்சித் தொண்டர்களுக்காகவா? இல்லை சொந்த பேரன்களுக்காகவா? 

தமிழ்நாட்டு மக்கள் - தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொருவரும் சொல்லொனாத் துயரம் அடைந்தார்கள்...ஒவ்வொரு நாளும் அடித்து கொல்லப் பட்டார்கள், கட்சத் தீவை காவு கொடுத்த காரணத்தால் தமிழன் இன்றளவிலும் தாக்கப்படுகின்றான். விலைவாசி உயர்வு, மின்வெட்டு என்பது இன்று மட்டும் அல்ல...அம்மையார் ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே இருக்கின்றது. அப்போதெல்லாம் கறுப்பு சட்டை அணியவில்லை.

கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் - தனது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களின் வீடுகளில் ரெய்டு செய்யப்பட்டு, ஒரு சிலர் சிறையில் கூட அடைக்கப்பட்டார்கள்..வீரபாண்டி ஆறுமுகம் எப்போதோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஒவ்வொரு சிறையாக மாற்றப் பட்டார். அப்போதெல்லாம் தொண்டர்களுக்காக வராத கறுப்பு சட்டை தற்போது புதிதாய் வந்திருக்கின்றதே...அன்று கூட கறுப்புச் சட்டை போராட்டம் நினைவிற்கு வரவில்லை.

பேரன்கள் - இப்போது தனது சொந்த மகன், மகள் வயித்து பேரன்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கின்றது என்பது தெரிந்ததும் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தப் படுகின்றது..அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடத்தப் பட்டு உடனடியாக அன்றே கறுப்புச் சட்டையை அணிந்து கொள்கின்றார். தனது மகளின் மருமகன் மீது வழக்கு...தனது பேரனின் மீது வழக்கு பதியப்பட்டு தேடப் பட்டு வருகின்றார் என்றதும் உள்ளம் பதை பதைக்கின்றது. அவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவர் என்பதில் நிச்சயம் மாறுபட்ட கருத்து எதுவுமில்லை. ஆனால் அதற்க்கு தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் இருப்பதாக ஒரு கறுப்புச் சாயத்தை பூசிக் கொள்ளவேண்டாமே..

கலைஞரின் ஆட்சியில் கடுமையான மின்வெட்டு என்று சொல்லியதால்தான் செயலலிதா அம்மையாரை மக்கள் ஆட்சியில் அமரவைத்தார்கள். மீண்டும் அதே நிலைமை தொடர்கின்றது. ஒன்றும் பலனில்லை. தற்போது எல்லாரும் நம்புவது கூடங்குளம் அணு உலையை மட்டுமே..சரி கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி ஆகின்றது என்றே வைத்துக் கொள்வோம்..அதில் கிடைக்கும் மின்சாரம் அனைத்தும் தமிழகத்திற்கு கிடைக்குமா? அதனை மத்திய அரசு ஏற்குமா? அதனை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து கொஞ்சமாக தமிழ்நாட்டிற்கு கொடுக்கப் போகின்றது. அதை விட ஒட்டு மொத்த மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வேண்டி ஏன் போராட்டம் நடத்தக் கூடாது? அந்த உரிமை தமிழக முதலமைச்சருக்கு இல்லாமல் போனது துரதிருஷ்டமே.. காரணம் எதிர்கட்சியாக இருப்பதே...ஐயா...நீங்க ஐந்து வருடம் ஆட்சியில் இருந்து, மத்தியிலும் கூட்டணியில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆணையம் மூலமாய் ஏன் தண்ணீர் பெற்றுத் தரமுடியாமல் போனது? அப்போது உச்சநீதிமன்றத்திற்கு விடுப்பு கொடுத்து விட்டார்களா? இப்போது அது கிடைத்து விட்டதே? அது எப்படி?

மத்தியில் ஆளும் கூட்டணி அரசிற்கு கண்டனம் தெரிவித்து கறுப்புச் சட்டையை ஏன் போடக் கூடாது? முல்லை பெரியாறு அணை கட்டும் முயற்சியை தடுக்க முடியவில்லை..அவர்கள் நாங்கள் கட்டியே தீருவோம் என்று சொல்கின்றார்கள்...காவிரி ஆணையத்தில் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் தண்ணீர் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. என் உடன்பிறப்பே என்று சொல்லி சொல்லியே கட்சத் தீவை காவுக் கொடுத்தீர்களே? அதை உங்களால திருப்பி பெற முடிஞ்சதா? காஷ்மீரை நாங்க கொடுக்க மாட்டோம் என்று இந்திய உணர்வுப் பூர்வமாய் சொல்லிக் கொண்டிருக்கும் இழிச்சவாயத் தமிழர்கள் நாமே..ஆனால் கட்சத் தீவை யாரைக் கேட்டு கொடுத்தார்கள்??. வடக்கே ஒரு நியாயம், தெற்க்கே ஒரு நியாயமா?

சட்டையை மாற்றுவதை விட கூட்டணியை மாற்றுங்கள் தலைவரே...தமிழ்நாட்டு மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள்......

1 comment:

  1. Sattaiyai maatruvathu easy sir, kootaniyai maathunaa sikkalaayidum, alagiriyum ulle poyiduvaaru, tamilnaattul thurai thayanithiyum ulle poyiduvare.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...