பங்காளிங்க..

Tuesday, February 5, 2013

குழந்தை கையில் கத்தி! சரியா, தவறா?

ஒரு ஆசிரியை தனது பிள்ளைகளுக்கு ஒரு கட்டுரை எழுதும் வேலை கொடுத்தாள். அந்த கட்டுரையின் தலைப்பு "கடவுளிடம் நீங்கள் வேண்டுவது என்ன?" நிறைய குழந்தைகள் நிறைய விசயங்களை எழுதிக் கொடுத்தது. அதில் ஒரு குழந்தை நான் டிவியாக பிறக்க வேண்டும்...அப்போதுதான் என்னை சுற்றி எல்லோரும் இருப்பார்கள். அப்பா என்னிடம் அதிக நேரம் செலவழிப்பார். அம்மா நாடகங்கள் பார்க்க என்னையே சுற்றி சுற்றி வருவாள். அண்ணா எப்போதும் என்னிடம் வந்து கார்டூன் பார்ப்பான். அக்காவும் என்னிடம் வந்து சினிமா பார்ப்பாள். பாட்டி, தாத்தா கோயில் குளங்களை பார்ப்பார்கள். எப்போதும் இந்த வீட்டினில் எனக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆகையால் என்னை டிவியாக மாற்றி விடு என்று எழுதி இருந்தது.

இந்த கட்டுரையை அந்த ஆசிரியை வீட்டினில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். படித்தவள் அப்படியே அழுது விட்டாள். அவள் அழுவதை பார்த்து வேகமாய் டிவியை அணைத்து விட்டு ஓடி வந்த கணவன்... மனைவியை பார்த்தான். மனைவி கையில் வைத்திருந்த கட்டுரையை படித்தான். முட்டாள் பெற்றோர்கள்....அவனை இழுத்து வைத்து அடிக்கணும்..இவனுக்கெல்லாம் எதுக்கு பிள்ளைங்க, அந்த குழந்தைய நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வா...நாம நம்ம பிள்ளைகளோடு வளர்க்கலாம்...சொல்லிவிட்டு இதுக்கு போய் அழுறியே, வேலையை பாரு...என்று சொல்லிவிட்டு திரும்பினான்.. பின்னர் அவளது அப்பா மற்றும் அம்மாவிடம் காட்டினாள்....அவர்களும் பாவம் அந்த குழந்தை என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்ட பெத்தவங்களால ஊருக்கே அவமானம்...அந்த வீட்டுல பெருசுங்க ன்னு இருந்து என்ன பிரயோசனம்...பேரன், பேத்தியை விட இதுகளுக்கு என்ன வேண்டிக்கிடக்குது..இதுக்கு அவங்க பரலோகம் போயிடலாம்..சற்று கோபத்தோடு சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்..

இவள் எழுந்து அனைவர் முன்னும் சென்று நின்றாள். எல்லோரும் ஒரு நிமிடம் கவனியுங்க..இந்த கட்டுரையை எழுதியது எனது கடைக்குட்டி மகள்தானே தவிர வேறு யாரும் இல்லை...நமக்கெல்லாம் எதுக்கு பிள்ளைகள்??...

நம்மில் ஒருவருக்கு கூட குற்ற உணர்ச்சி இல்லையே....இதுதான் நமது உறவின் லட்சணம்....நாளை என் வேலையை ராஜினாமா செய்யப் போகின்றேன்.... அழுத்தம் திருத்தமாய் சொன்னாள் ......பாட்டி, தாத்தா, அப்பா விக்கித்து போய்  நின்றார்கள்....?? பரலோகம் போவார்களா?

8 comments:

  1. சிறியதாய் இருந்தாலும் நறுக்கென்று இக்கால வாழ்க்கை முறையை இடித்துரைத்தது.நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி...

      Delete
  2. Replies
    1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரி...

      Delete
  3. Replies
    1. இது முடிவு அல்ல, ஒரு குழந்தையின் வாழ்க்கை துவக்கம்...

      Delete
  4. தொலைக்காட்சி முழுநேர பொழுது போக்கு சாதனமானதிலிருந்தது பெண்கள் சிந்திக்கிறதே இல்லை. ஒரு முடமான சமுதாயத்தை உருவாக்குவதில் தொ.கா. விற்கு முக்கியப் பங்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. தொலைகாட்சி அந்த வீட்டினில் எத்தனை முக்கியமாக கருதப் படுகின்றது என்று அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கின்றதே....இப்படி கட்டுரை எழுதக் கூட முடியாமல் எத்தனை, எத்தனை குழந்தைகள் நம்மோடு வாழ்கின்றார்களோ தெரியவில்லையே...

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...