பங்காளிங்க..

Monday, August 8, 2011

அந்த 3 *****கள்!!!


அன்பு தோழர்களே,

எச்சரிக்கை!

உங்களுக்கு இந்திய பிரதமரை பிடிக்காமல் இருக்கலாம், காங்கிரஸ் தலைவரையோ அல்லது முக்கிய பெரும்புள்ளிகளை பிடிக்காமல் இருக்கலாம். அந்த விரக்தியில் இருக்கும் போது #90 அல்லது #09 என்ற எண்ணை உங்கள் அலைபேசியில் இருந்து மறந்தும் அழுத்தி விடாதீர்கள்...

ஜெஹாதி என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாத இயக்கம், இந்த அலைபேசியில் ஒரு மிகப்பெரிய தீவிரவாத செயலில் ஈடுபட காத்திருக்கின்றது....

அதற்க்கு அவர்கள் பயன்படுத்தும் உத்தியே மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்கள்.

அதை அழுத்தும் போது உங்களது அலைபேசி எண் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் சென்று விடுமாம். பிறகு அதில் இருந்து அவர்கள் விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் பேசி விட்டு, அல்லது கொலை மிரட்டல் விடுத்து விட்டு அவர்கள் தப்பித்து கொள்வார்கள். ஆனால் இணையதள குற்றவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபடும்போது அகப்படுவது உங்களது அலைபேசி எண் தான் என்பதை மறவாதீர்கள்.

யாராவது அறிமுகமற்ற நபர் தொடர்பு கொண்டு இந்த எண்ணை அழுத்தினால் உங்களுக்கு 500 ரூவாய்க்கு டாப்-அப் ஆகி விடும் அல்லது விலை உயர்ந்த பரிசு காத்திருக்கின்றது என்று சொன்னால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விடுங்கள். இல்லாவிட்டால் பின்னாளில் உங்கள் வாழ்க்கை துண்டாகி போகும் என்பதை மறக்காதீர்கள். மேலும் இந்த அழைப்பினில் பேசுபவர் ஒரு பெண்ணாகவும் அதுவும் உங்களது மொழியினில் கூட உரையாட வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றார்கள்.

இந்த தகவல் மோட்டோராலா மற்றும் நோக்கியா நிறுவனத்தால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

உங்களுக்கு நான் சொல்வதில் ஐயமெனில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை தெரிவு செய்து பார்த்து கொள்ளுங்கள்...

http://www.chennai.bsnl.co.in/News/MobileDosNDonts.htm

8 comments:

 1. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நல்ல தகவலுக்கு நன்றிங்க

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள எச்சரிக்கை பதிவு... நன்றி நண்பரே

  ReplyDelete
 4. ///

  ரியாஸ் அஹமது said...
  AMMMMMMMMADIYOVVVVVVVVVVVVV///

  நீங்க பெரிய ஆளுதான், அம்மா ஆட்சினே உடனே அம்மாடியோவ் னு கூவுறீங்களா?

  ReplyDelete
 5. /// Rathnavel said...

  அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.///

  பிளாக்கரை பொழுது போக்காகவும் பயன்படுத்தலாம், பயனுள்ளதாகவும் மாற்றி அமைக்கலாம் என்று நம்புகின்றேன்...

  ReplyDelete
 6. /// அரசன் said...
  நல்ல தகவலுக்கு நன்றிங்க ///


  எப்போதுமே நல்ல தகவல்கள் உங்களோடு இருந்து விட கூடாது, நாலு பேரை சென்றடைய வேண்டும்...அதனால் உடனடியாக நாலு பேருக்கு சொல்லுங்க...உங்கள் பேராதரவிற்கு நன்றி....

  ReplyDelete
 7. /// மாய உலகம் said...
  மிகவும் பயனுள்ள எச்சரிக்கை பதிவு... நன்றி நண்பரே ///

  கூடுமானவரை பயனுள்ள செய்திகளே என்னிடமிருந்து வரும், ஆனாவத்தில் சொல்லவில்லை, அப்படியே பழகி போய்விட்டேன்..

  ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...