பங்காளிங்க..

Monday, August 15, 2011

சுதந்திர தியாகி "ஷிரேயா" வின் சுதந்திர தின செய்திஇன்று
நாம் சுதந்திரம் கொண்டாடுவது ஒரு போலித்தன்மை கொண்ட விசயமாகும்.

உண்மையில் சுதந்திர தினத்தை மனதார கொண்டாடுவது தியாகிகளும், இன்றைய நாட்டை பற்றி முழுதும் அறியாத ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகள்தான்...

கொஞ்சம் பெரிய பிள்ளைகள்கூட இன்று எந்த சினிமா வரும்? என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தது கல்லூரி மாணவர்கள் கேட்கவே வேண்டாம், அவர்களும் சினிமா, கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்து எஸ்.

ஒரு சில பெரியவர்களே அப்பாடி மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டது என்று கலைஞர்,ஜெயா முன் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது அந்த தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒரு தியாகியை அழைத்து உட்கார வைத்து சுதந்திரத்தை பற்றி பேசுகின்றார்கள் என்றால் அப்படி எதுவுமே கிடையாது. எவளாவது ஒரு நடிகையை உட்கார வைத்து கொண்டு சுற்றி அமர்ந்து கும்மாளம் அடிக்கிறது சன், கலைஞர், மற்றும் ஜெயா டிவி, நம் நாட்டு தியாகிகளை ஒரு முதலமைச்சராக இருக்கும் அல்லது இருந்தவர்களே மதிப்பதில்லை. அப்புறம் எப்படி சாமானிய மக்கள் அல்லது வளரும் தலைமுறைக்கு நாட்டின் தன்மை, அருமை புரியும்??

எஸ்.எம்.எஸ் அலம்பல்கள்....
உண்மையில் சுதந்திரம் கிடைத்த அன்று என்ன நடந்தது தெரியுமா? எல்லா முதலாளி வர்க்கமும் சேர்ந்து ஏழை தொழிலாளர்களை அல்லது ஏழை தியாகிகளை, போராளிகளை அழைத்து அன்று முழுவதும் எல்லா சேவைகளிலும் இலவச மாய் கொடுத்து உதவினார்கள். ஆனால் இன்று அன்று மட்டும் குறுஞ்செய்தி அனுப்பினாலே ஒரு குறுஞ்செய்திக்கு 50 பைசா முதல் 1 ரூவாய் வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள். எதற்கு யாரும் சுதந்திரத்தை பற்றி வாழ்த்துக்கள் தெரிவித்து விட கூடாது என்பதற்காகவா? அதனால் யாரும் அன்று எந்த விதமான வாழ்த்து செய்தியும் அனுப்பவதில்லை. சந்தோசங்களை பகிர்வதில்லை என்பதே வேதனையின் உச்சகட்டம்.

நேற்று கூட இந்த கலைஞர் தொலைக்காட்சியில் ஜெயலலிதா காலம் தாழ்த்தி கொடி ஏற்றியதாக வருத்தம் தெரிவித்தார்கள். அதனால் குழந்தைகளும் பெரியவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லி அந்த செய்தியை அதோடு நிப்பாட்டி இருக்கலாம்,. ஆனால் இவர்கள் இதை எல்லாம் செய்ய ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கின்றது என்று கேட்டிருந்தார்கள்.?

ஒரு பெரிய மனுஷன் பேசுற பேச்சா அது? தமிழ் வருட பிறப்பை ஏப்ரல் 14 கில் இருந்து மாற்றுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கின்றது, அன்று நீ செய்தது அயோக்கியத்தனம் என்றால் இன்று அவள் செய்வதும் அயோக்கியத்தனமே, அன்று நீ செய்தது புத்திசாலித்தனம் என்றால் இன்று அவள் செய்தததும் புத்திசாலித்தனமே என்று எடுத்துக்கொள். சரி இந்த அம்மா ஒழுங்காக இல்லையே, நீயாவது ஒரு பத்து தியாகிகளை அழைத்து கௌரவித்து இருக்கலாமே...5 படங்கள், பட்டிமன்றங்கள், நடிகை, நடிகர் பேட்டி என்று அசத்தி இருந்தீர்களே? இதைவிட வெட்ககேடான செயல் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்ன?

நண்பர்களே, நீங்கள் இந்த சுதந்திர தினத்தை சுதந்திரமாக கொண்டாடி கொண்டிருக்கிறோமா என்பதை சிந்தித்து பாருங்கள்.. சும்மா கடமைக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள்...

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைக்கையிலேயே"

முதலில் நீ ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன் என்று சொன்னார்கள். உண்மை அதுவல்ல முதலில் நீ ஒரு தமிழன் அதன் பிறகுதான் இந்தியன்...மற்ற மாநிலங்கள் நம்மை மதிக்காத போது ஏன் இந்திய பிரதமரே தமிழ்நாட்டினை ஒதுக்கும் போது நாம் மட்டும் எப்படி அவர்களை தலைவர்களாக ஏற்று கொள்ள முடியும்...இந்த நன்னாளில் நமது கச்சத்தீவை மீட்கும் பணியில் இறங்குவோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

நம்மை கடந்த ஐந்து ஆண்டுகளாக சீரழித்த திமுக மற்றும் காங்கிரஸ்சுக்கு நமது கண்டனங்களை காணிக்கையாக்குவோம். எத்தனை எத்தனை இன்னல்கள், எத்தனை எத்தனை வேதனைகள், அத்தனையும் உங்கள் மற்றும் நமது குடும்பங்களுக்கே என்பதை மறக்காதீர்கள்.

இன்றுவரை நமக்கு கிடைக்கா நியாயங்கள்.....

1 . காவேரி நதி நீர் பிரச்சினை....
2 . ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பிரச்சினை
3 . முல்லை பெரியார் அணை பிரச்சினை
4 . கட்ச்சத்தீவு மீட்பு போராட்டம்
5 . ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினை.
6 . கொலை, கொள்ளை, பாலியல் மற்றும் கற்பழிப்பு புகார்கள்.
7 . கடுமையான விலைவாசி ஏற்றம்
8 . மின்வெட்டு

இப்போதும் நாம் வெட்கமில்லாமல் கொடி ஏற்றி மிட்டாய் கொடுத்து ஒரு போலியான சுதந்திர தினம் கொண்டாடி வருகின்றோம்.நமக்கெல்லாம் இது தேவையா என்பதை நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்...

நம் வீட்டினில் இழவு விழுந்திருக்கின்றது,...நாம் ஏதாவது விழாக்கள் கொண்டாடுவோமா? நமது உறவுகள் ராமேஸ்வரத்தில் இருந்து 35 கிலோமீட்டருக்கு அப்பால் காங்கிரஸ் கூட்டணியால் மற்றும் ராஜபக்சே குடும்பத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றார்கள். இப்போது நம்மால் எப்படி இந்த விழாவை கொண்டாட முடியும்,

ஒவ்வொரு நாளும் நம் மக்கள் இந்திய கொடியை அணிவதால் தாக்கப்பட்டார்கள். நம்மிடம் வாலாட்டுவது அனைத்துமே ஒரு குட்டி நாடுகள்தானே... இலங்கை, அடுத்தது ஆஸ்ட்ரேலியா....ஏன் தலைமை சரி இல்லை,...கேடுகெட்ட அரசியல் தலைவர்களை கொண்டுள்ளது காங்கிரஸ். சுவீஸ் வங்கியில் இருந்து யாராவது ஒருவர் இந்தியனை தாக்கினால் இந்தியா சும்மா இருக்காது என்று விரைவில் சோனியாவும், மன்மோஹனும் தெரிவித்தாலும்
ஆச்சரியம் இல்லை.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...