பங்காளிங்க..

Tuesday, August 23, 2011

இதை மட்டும் சொல்வதற்கு வெக்கமாயில்லையா?


தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...

அம்மா , அப்பா, ஆத்தா பயங்கர பெய்ன்னாஇருக்கே என்று கதறுவார்கள்

சிரிக்கும்போது மட்டும் இ..ஈ..

இஇ இ இ ஈஎன்று சிரித்து விட்டு பயங்கர காமெடியா இருக்கு என்று சொல்வார்கள்

சூடு பட்டால் மட்டும் உ...ஊ..

உ உ என்று ஊதிவிட்டு இப்போ ரிலீபா இருக்கு என்று சொல்வார்கள்

அதட்டும்போது மட்டும் எ..ஏ...

என்ன, ஏய் எதுக்கு, எப்படி என்று கேட்டு விட்டு நான்-சென்ஸ் என்று சொல்லிக்கொள்வார்கள்

ஐயத்தின்போதுமட்டும் ஐ..

"ஐ" ரொம்ப சூப்பெரா இருக்கே என்று சொல்லிக்கொள்வார்கள்

ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ...

ஒ... ஓமை காட், சான்சே இல்லை என்று ஆச்சரியபடுவார்கள்

வக்கணையின் போது மட்டும் ஒள...

ஔ..வ் ....வ டைர்டியா இருக்கு என்று வக்கணைப்பார்கள்

விக்கலின்போது மட்டும் ...?

இக் ...இக் என்று விக்கல் எடுத்த பின் "ஷிட்" என்று சலித்துகொள்வார்கள்

என்று தமிழ் பேசி மற்ற நேரம்

வேற்று மொழி பேசும்

தமிழரிடம்

மறக்காமல் சொல்

உன் மொழி

தமிழ் மொழியென்று !!!

என்ன இருந்தாலும் நாங்கள் தமிழர்கள், முதலில் தமிழ் வார்த்தைதானே சொல்கின்றோம் என்று பினாத்தி கொள்ளாதீர்கள் , முழுவதும் தமிழ் ஆதிக்கம் பெற வேண்டும்.

ஒரு மராட்டியனும், கன்னடனும், மலையாளியும் இப்படி சொல்வதில்லை. தமிழனை தவிர...

வேதனையுடன்

- மின்சார சிவா


No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...