செல் போன் வந்தபிறகு நம்ம மக்களோட பாடு பெரும் திண்டாட்டமாகி
போயிடுச்சு...சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும், தொல்லைகள் ரொம்ப
அதிகமாயிடுச்சு...இதுனால பல பொண்ணுங்களோட வேலை, நிம்மதி, வாழ்க்கை,
சந்தோசமும் போச்சு..பல பொண்ணுங்க இந்த செல் போன் மோகத்துல சீரழிஞ்சு போன
வரலாறும் இருக்கு...
இதுதான் இப்படீன்னு பார்த்தா இந்த வியாபாரிங்க...முன்னாடி எல்லாம் வீடு வீடா வந்து விளம்பரம் பண்ணாங்க..இன்னும் சிலர் நோட்டீஸ் கொடுத்தாங்க..அதுக்கு அடுத்தாப்புல ரேடியோ எப் எம் னு வந்தாங்க..அதுக்கப்புறமா டிவி பொட்டிக்குள்ளேயும் வந்தாங்க..ஆனா அதுல எல்லாம் காசு கண்டமேனிக்கு போகுதேன்னு யோசிச்சாங்க..இப்போ என்னடானா நாம நம்பி கொடுக்கிற நம்ம விலாசத்தை இந்த போன் கம்பெனிகாரங்க இந்த மாதிரியான வியாபார முதலாளிகளுக்கு சில லகரத்தை வாங்கிட்டு கொடுத்திடுறாங்க..
அந்த மொதலாளிங்க என்ன செய்யுறாங்க...ஒரு பொம்பள பிள்ளைய வேலைக்கு வச்சிக்கிட்டு சார் லோன் தாரோம், சார் கடன் கொடுக்கிறோம், சார் வீடு கொடுக்கிறோம் னு நம்ம போன் நம்பருக்கு போன் பண்ணி உயிரை வாங்குறாங்க..அவங்க தப்பு கிடையாது..அவங்க பொழைப்பை பாக்குறாங்க..ஆனா எதிராளியோட சந்தர்ப்ப சூழ்நிலையை அவங்க புரிஞ்சிக்க வாய்ப்பு கிடையாது..அவங்க சொல்ல வேண்டியது சொல்லிட்டு போயிடுவாங்க...எத்தனை பேரு வண்டி ஒட்டிக்கிட்டு இருப்பான், எத்தனை பேரு ஏதோ அவசர காலோ னு அவசர, அவசரமா வண்டிய நடு ரோட்டுல பிரேக்கை போட்டு பின்னாடி இருக்கிறவன்கிட்டே வசவு வாங்கிகிட்டு போனை எடுத்தா சார் நான் ஐசிஐசிஐ இலே இருந்து பேசுறேன்னு கேட்டா எவ்வளவு கோவம் வரும்,
எப்படி நம்ம நம்பெரு அவனுங்க கைக்கு போகுது? இதுவே நாம நமக்கு வந்த ராங் காலை பத்தி விசாரிச்சா போலீஸ் கம்ப்ளைன்ட் இருக்கா? எப்ஐஆர் இருக்கானு நமமலையே கேட்பானுங்க? ஆனா அவனுங்களுக்கு மட்டும் நம்ம பேரு, முகவரி எல்லாம் கரெக்டா கிடைக்குதே? அது எப்படி?
இப்போ அதை தடுக்கிறதுக்கு அரசாங்கம் ஒரு வசதியை செஞ்சு கொடுத்திருக்கு...அது என்னா நம்பருணா 1909 ...இந்த போன் நம்பருக்கு போன் பண்ணி, கம்ப்ளைன்ட் கொடுக்கலாம், இது ஒரு இலவச சேவை எண். இதுக்கு நீங்க எஸ் எம் எஸ் கூட அனுப்பி புகாரை தெரிவிக்கலாம்.
அதே சமயம் போன் பண்ணி சொல்றதா இருந்தா அந்த தொல்லை கொடுக்கிற எண் கடைசி 3 நாளுக்கு உள்ள வந்ததா இருக்கணும்..புகார் கொடுக்கிறப்ப புகார் தெரிவிக்கப்படுபவரின் நம்பர், எந்த நேரம், எந்த நாள் என்பதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். உடனே அது ஒரு புகார் எண்ணை உங்களுக்கு தெரிவிக்கும். மேலும் 7 நாட்களுக்குள் உங்களுக்கு அந்த புகாரை பற்றிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும். உடனே உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிவியுங்கள்.

Thanks for the valuable Info. Noted.
ReplyDeleteபயனுள்ள தகவல்!
ReplyDelete