பங்காளிங்க..

Saturday, September 15, 2012

நாற்றும், குட்டி சுவர்க்கமும் என்ன சொல்லுதுனா???

நேற்று தற்செயலா இணையத்த துழாவிக் கிட்டு இருக்கிறப்ப அந்தக் கொடுமைய பாக்க நேர்ந்தது...சகோதரி ஆமினாவும், தோழர் நிருபனும் ஏதோ கருத்துவேறுபாட்டுல இருக்காங்க... சத்தியமா யார் முதல்ல ஆரம்பிச்சாங்க னு எனக்கு தெரியல, இடையிலே நுழைஞ்சு நான் விஷயம் தெரியாம பேச விரும்பலை, நான் பஞ்சாயத்து செஞ்சு வைச்சு தீர்ர்ப்பு சொல்ற அளவுக்கு பெரிய அப்பாடக்கரும் கிடையாது.

என்னை பொறுத்தவரை இருவருமே சிறந்த பதிவாளர்கள். அந்த இரண்டு ஜாம்பவான்களும் மோதிக் கொள்வதில் என்னைப் போன்ற எத்தனையோ பதிவர்கள் பாதிக்கப் படுவார்கள். காரணம் இருவரது தொகுப்புகளுமே மிக அருமையானதாக இருக்கும். எங்களில் பலர், வீட்டு பிரச்சினைகளில் இருந்து, அலுவலக பிரச்சினைகளில் இருந்து மாறுபட்டு வந்து இந்த வலைப்பூவில் தேடி அமர்கின்றோம். ஒவ்வொரு பதிவுகளிலும் வரும் பதிவுகளை படித்து சிரித்திருக்கின்றோம், அழுதிருக்கின்றோம், உணர்ச்சி வசப் பட்டிருக்கின்றோம்.....

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமைகள் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிவு, துறை என்று எடுத்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் கருத்துக்கள், முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும்.. ஆனால் நீ எழுதவே கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றே நான் நம்புகின்றேன்.

எனக்கு சகோதரியின்  "குட்டி சுவர்க்கமும்" பிடிக்கும், தோழரின் "நாற்றும்" பிடிக்கும்..இப்படிப்பட்ட குட்டி சுவர்க்கத்தில் அவரது மதத்தினைப் பற்றி எழுதுவது அவரது உரிமை, அதைப் பிடிக்காதவர்கள் அதனை படிக்க வேண்டாமே..நாற்றினில் அவர் ஹிட்ஸ் வெறியராக இருப்பது அவரது விருப்பம்..அதையும் நாம் குறை சொல்ல இயலாது. அவரது திறமையை உலகம் பார்க்க வேண்டும் என்று எண்ணுகின்றார். நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று நான் யாரையுமே சுட்டிக் காட்ட முடியாது, காரணம் உலகில் யார் பெரியவர் என்ற தர்க்கம்தான் உருவாகும்...நம் எல்லோரையும் விட பெரியது நமக்கு மேல் இருக்கும் ஒரு சக்திதான்...(அது இந்துவோ, முஸ்லீமோ, பௌத்தமோ, அல்லது கிறித்துவமோ) ஏதோ ஒன்று. அவரவருக்கு விருப்பமான பெயரில் கடவுளை அழைத்து கொள்கின்றோம்.

கடவுள் ஒருவர்தான்...அது நம் மனசாட்சியாய் இருக்கின்றது...ஊர்க்காரன் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்..மறவாதீர்கள் சகோதர, சகோதரிகளே...

4 comments:

  1. சகோ தங்கள் பக்க நியாயத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது...

    இது இலகுவில் முடியக் கூடிய பிரச்சனையில்லை... இதன் பின்னணியில் ஒரு கூட்டமே அவரை ஆட்டிப் படைக்கிறது...

    எது எப்படியிருப்பினும் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் என்னையும் உள்ளே கொண்டு வந்து புகுத்தியவர் இந்த ஆமினா தான்...

    இந்த பதிவை படியுங்கள் பிரச்சனை ஆரம்பித்த காரணம் தெரியும்...

    http://www.mathisutha.com/2012/05/r.html

    ReplyDelete
    Replies
    1. /// ♔ம.தி.சுதா♔

      சகோ தங்கள் பக்க நியாயத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது...

      இது இலகுவில் முடியக் கூடிய பிரச்சனையில்லை... இதன் பின்னணியில் ஒரு கூட்டமே அவரை ஆட்டிப் படைக்கிறது...

      எது எப்படியிருப்பினும் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் என்னையும் உள்ளே கொண்டு வந்து புகுத்தியவர் இந்த ஆமினா தான்...

      இந்த பதிவை படியுங்கள் பிரச்சனை ஆரம்பித்த காரணம் தெரியும்... ///

      அன்புள்ள தோழருக்கு,

      சமீபத்தில் ஒரு வசனம் கேட்டேன்..."நோ ஒன் இஸ் பெர்பெக்ட் இன் திஸ் வேர்ல்ட்". எல்லாரும் ஏதாவது தவறுகள் செய்திருப்பார்கள். அதை பெரிதுபடுத்தாமல் பேசாமல் விட்டுச் செல்வதே நல்லது என்று நம்புவன் நான்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

      Delete
  2. ஹாய் சிவா.. நலமா இருக்கீங்களா???

    உங்க பதிவுக்கு நன்றி...

    சில புரிதல்களுக்காக...

    //சத்தியமா யார் முதல்ல ஆரம்பிச்சாங்க னு எனக்கு தெரியல,//

    சில நாட்களாக பின்னூட்டத்தின் வாயிலாக என்னை பற்றி வதந்தி பரப்பிட்டு வந்தார். அதன் விளைவாகவே என் பதிவு!

    //.நாற்றினில் அவர் ஹிட்ஸ் வெறியராக இருப்பது அவரது விருப்பம்..அதையும் நாம் குறை சொல்ல இயலாது.//

    நிச்சயமாக முடியாது தான் சகோ. ஆனால் மீண்டும் மீண்டும் மதவெறி என்ற வார்த்தையை பயன்படுத்துவதாலேயே நானும் ஹிட்ஸ் வெறி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாகிறது!

    நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. /// ஆமினா ஹாய் சிவா.. நலமா இருக்கீங்களா??? உங்க பதிவுக்கு நன்றி...

      சில புரிதல்களுக்காக...

      //சத்தியமா யார் முதல்ல ஆரம்பிச்சாங்க னு எனக்கு தெரியல,//

      சில நாட்களாக பின்னூட்டத்தின் வாயிலாக என்னை பற்றி வதந்தி பரப்பிட்டு வந்தார். அதன் விளைவாகவே என் பதிவு!

      //.நாற்றினில் அவர் ஹிட்ஸ் வெறியராக இருப்பது அவரது விருப்பம்..அதையும் நாம் குறை சொல்ல இயலாது.//

      நிச்சயமாக முடியாது தான் சகோ. ஆனால் மீண்டும் மீண்டும் மதவெறி என்ற வார்த்தையை பயன்படுத்துவதாலேயே நானும் ஹிட்ஸ் வெறி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியதாகிறது!

      நன்றி சகோ ///

      அன்புள்ள சகோதரிக்கு,
      எனது பதிவிற்கு உங்கள் பதிலை கொடுத்தமைக்கு நன்றி...இறைவனின் அருளால் நான் நலமாய் இருக்கின்றேன். நன்றி...நமது பதிவுகளில் நாம் எல்லோரையும் திருப்தி படுத்த இயலாது. விருப்பமுள்ளவர்கள் படித்து கருத்து சொல்வார்கள், சிலர் படித்து விட்டு மட்டுமே சொல்வார்கள், சிலர் மிக முக்கியமான செய்தியை கூட அவர்களது பின்னூட்டத்தால் மொக்கையாக்கி விட்டு செல்வார்கள்...நான் பல நேரங்களில் பதிவுகளோடு சேர்த்து பின்னூட்டத்தையும் படிப்பேன். காரணம் ஒரு பதிவின் தன்மை எல்லோர் பார்வைகளிலும் எப்படி பிரதிபலிக்கின்றது என்று பார்ப்பேன். எது எப்படியாக இருந்தாலும் மதத்தையோ, சாதியையோ அல்லது ஆண், பெண் வேறுபாட்டையோ அல்லது உடல் ஊனத்தையோ குறிக்காமல் இருந்தால் அந்த பின்னூட்டம் அழகானதாய் காணப்படும். ஒரு சிலர் மிக எளிமையாக சூப்பர், போர், என்று ஒற்றை வார்த்தைகளில் கருத்து தெரிவிப்பார்கள். அது கூட அழகுதான்...புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்..

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...