பங்காளிங்க..

Thursday, September 20, 2012

"பன்னி" கூட சிங்கிளாத்தான் வரும்

முதலில் இந்திய சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மற்றும் டீசல் விலை கடுமையான உயர்வு போன்றவற்றிற்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். நடுத்தர மற்றும் ஏழைகளின் வயிற்றினில் அடிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி, எத்தனை பிரச்சினைகளை கொண்டு வந்தாலும்  நிலக்கரி சுரங்க ஊழலை மறக்க மாட்டோம்...

தலைவரு ரசினிகாந்து சில நேரம் சில விஷயத்தை பஞ்ச் டயலாக்கா பேசுவாரு..கண்ணா சிங்கம் சிங்கிளாத்தான் வரும், பன்னிங்கதான் கூட்டமா  வரும் னு சொல்வாரு..உக்காந்து ரூம் போட்டு யோசிச்சேன்..பன்னி கூட சிங்கிளா நிறைய இடத்துல வருதே..அப்புறம் ஏன் தலைவரு அப்படி சொன்னாரு??? அதை அப்பால பார்ப்போம்! இப்போ மேட்டருக்கு வருவோம்...

அந்த "பன்னி" யைப் பத்தி இப்போ எதுக்கு? கண்றாவி னு சொல்றவாளுக்கு எல்லாம் இந்த பதிவு சமர்ப்பணம் ..

கொஞ்சம் அந்த "பன்னி" ய கற்பனை பண்ணிப் பாருங்க, எந்த இடத்துல வருது? கற்பனையை வேற எங்கியாவது சாக்கடை, ஓடை, குட்டத்துல போக விட்டுராதீங்க..உங்க வீட்டு ஹால்ல, பெட்ரூம்ல கூட அந்த சிங்கிள் "பன்னி" இருக்கத்தான் செய்யுது??? அதாங்க அந்த உண்டியல் "பன்னி". அது ஏங்க, சேமிப்பு பண்ற இடத்துல எல்லாம் காலம், காலமா பன்னிய பொம்மையா செஞ்சு வச்சிருக்காக..ஏதாவது குரங்கு, பாம்பு, அப்படி செஞ்சு வைக்க வேண்டியதுதானே...

ஏன் அந்த நாத்தம் பிடிச்ச கண்ராவிய நடு ஹால்ல வைச்சு அலங்காரம் பண்ணனும்...ரெண்டு, மூணு பேங்க் காரங்கிட்டே விசாரிச்சேன்...  
ஹிஹிஹிஹி னு வழியிறாங்கலேத் தவிர பதில் ஒருத்தருக்கும் தெரியல...

அப்புறம் நம்ம கூகிள் அண்ணாச்சியை தேடி பார்த்தேன்..பதில் கிடைச்சது..அதான் உங்ககிட்டே சொல்லிக்கலாமுன்னு வந்திருக்கேன்...அதாவது 18 ஆவது நூற்றாண்டுல எல்லாம் "பைக்" னு(pygg) ஒரு வகையான களிமண்ணுல வீட்டுல ஜார், சின்ன சின்ன மண் செம்பெல்லாம் சமையக்கட்டுல யூஸ் பண்ணிருக்காங்க..அந்த காலத்துல இருந்த பொம்பளைங்க அப்பப்ப வர்ற காசை அந்த "பைக்" கில (pygg) செய்யப்பட்ட ஜார் ல காசை போட்டு வைச்சிருக்காங்க..கிட்டத்தட்ட சேமிப்பு மாதிரி, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு போட்ட காசை எடுக்க கூடாது, அப்படியே இருக்கணும்னு அதை மூடி போட்டு வைச்சிருக்காங்க. எப்போ அந்த ஜார் காசா நிரம்புதோ..அப்போ அதை எடுத்து திருவிழா, வீட்டு விசேசத்துக்கு பயன்படுத்திகிட்டாங்க..அந்த ஜார் நிரம்பின பிறகு அதை உடைச்சு எடுத்திருக்காங்க..



சரி அதுக்கும், நம்ம கதையோட ஹீரோ "பன்னி"க்கும் என்ன சம்பந்தம்?

அந்த ஆங்கில வார்த்தை "பைக்கு" (pygg) தான் நாளடைவிலே மாறி "பிக்" னு (pig) வந்திடுச்சு னு சொல்றாங்க. ஆனா அந்த காலத்துல இருக்கிறவங்க ரொம்ப கற்பனை வளம் அதிகம்..அப்போ எல்லாம் உள்ள குழந்தைகளுக்கு ஜாரோட அடையாளம் தெரியனும்னு பன்னி முகம் கொண்ட ஜார் களை உருவாக்கி விற்க ஆரம்பிச்சாங்க..."பன்னி" உண்டியல் தயாராயிடுச்சு னு சொல்றாங்க..

இன்னும் சிலர் என்ன சொல்றாங்க னு பார்த்தா அது கொஞ்சம் ஏத்துக்கிற மாதிரி இருக்கு எனக்கு. அதாவது ஒரு விவசாயி ஒரு "பன்னி"ய வளர்த்தாருனா, அதுக்கு பலன் உடனே கிடைக்காது..அவர் அந்த "பன்னி"க்காக பண்ற செலவை உடனே அனுபவிக்க முடியாது, அந்த பன்னி நல்லா வளர்ந்து, கொழு, கொழுன்னு மாறி அதை கறியாக்கு னாதான் அவர் போட்ட முதல் கிடைக்கும்..அது மாதிரி அந்த பன்னி உண்டியல்ல போடுற காசு முழுசா நிரம்பினாதான் அந்த சேமிப்பு முழு பலன் அடையும்கிறது ஒரு எண்ணம். உண்மைதானே...

ஏதாவது முன்ன, பின்ன இருந்தா கோச்சுக்காதீங்க...திட்டுறதா இருந்த மனச திறந்து திட்டிட்டு போயிடுங்க..உள்ளுக்குள்ள புதைச்சு வைச்சு அப்புறம் ஹார்ட் அட்டாக் வந்திடுப் போகுது....

4 comments:

  1. அடேங்கப்பா... பன்றிக்கு பின்னால இவ்ளோ விளக்கம் இருக்கா... ஓ.கே... ஓ.கே... காங்கிரஸ்... குட் காம்பினேஷன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழரே, பன்னி பொம்மையோட உண்டியல் அழகே தனிதான்..சத்தியமா காங்கிரசுக்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ..

      Delete
  2. பன்றி சிங்கள் ஆகவும் கூட்டமாகவும் வரும் அது சூழ்நிலையை பொறுத்தது. ஆனால் சிங்கம் கூட்டமாக தான் வரும். zoo ல் தான் சிங்கம் சிங்கிளாக இருக்கும். நம்ம முதிய நடிகர் ரஜனி சிங்கத்தை காட்டில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது தெரியாமல் பஞ்ச் விட்டிருப்பார். அதை விட்டு தள்ளுங்க.

    ReplyDelete
    Replies
    1. தலைவரே, நான் சொல்ல வந்தது, "பன்னி" மாடல் உண்டியலைப் பற்றி மட்டும்தான்..தலைவரோட பஞ்ச் டயலாக்கை சொன்னதா கோர்த்து விட்டுறாதீங்க..

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...