பங்காளிங்க..

Tuesday, September 11, 2012

ஜெயாவை ப்பற்றிய கேலிச்சித்திரம் - ஒன்றும் தவறில்லை!!!

கேலிச்சித்திரம் வெளியிட்ட லக்பிமா பத்திரிக்கைக்கு கண்டனத்தை தெரிவியுங்கள் என்று நமது வலைப்பூ நண்பர்கள் கொதித்து போயிருக்கின்றார்கள். காரணம் ஒரு பெண்ணை, தமிழக முதலமைச்சரை இழிவு படுத்தி விட்டார்களாம்?? அதனால் அந்த கேலிச்சித்திரத்தை வெளியிட காரணமாக இருந்த ஹசந்தா மற்றும் அந்த பத்திரிகை துறையைச் சார்ந்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமாம். 

அவர்களிடம் கேட்டால் இது கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்கள், இவர்களை கேட்டால் இது ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கும் செயல் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இந்த விசயத்தில் ஒவ்வொரு தமிழனும் முதலமைச்சரையும், பிரதமரையும் அவமதித்து விட்டதாக கொண்ட்தளித்து கொண்டிருக்கும் வேளையில் தனது கட்சிக்காரனை, மன்மோகன் சிங்கை அசிங்கப் படுத்தி விட்டதாக எந்த ஒரு காங்கிரஸ் காரனும் இன்று வரை போர்க்கொடி தூக்க வில்லை.
பிறகு எப்படி அவன் மன்னிப்பு கேட்பான்? மானமில்லாத காங்கிரஸ் வாதிகளால் மானமுள்ள தமிழனும் சேர்த்து அசிங்கப் படுகின்றானே!!??!! இதனை என்னவென்று சொல்வது? இந்த செய்தி வந்ததும் அவரவர் போட்டி போட்டுக் கொண்டு அந்த இணையத்தை தேடித் பார்த்தால் அந்த ஒரு செய்தி மற்றும் அந்த கேலிச்சித்திரத்தை மட்டும் காணவில்லை. பிரச்சினையின் விபரீதத் தை உணர்ந்து அவர்களாகவே அதனை நீக்கி விட்டார்கள். 

ஒரு விஷயத்தை நன்கு தெளிவு படுத்தி பார்க்க வேண்டும். இதனை வெளியிட்டது யார்? இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலா, அவர்தான் இந்த பத்திரிக்கையின் முதலாளி. இந்த மாதிரியான கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட காரணம் என்ன? கடந்த மாதம் டெசோ மாநாடு நடத்திய கலைஞரின் மீது வராத ஆத்திரம் தமிழக முதலமைச்சர் செயலலிதா மீது வரக் காரணம் என்ன?

ஈழத் தமிழர்களுக்கு கலைஞரை விட தமிழக முதலமைச்சர் அதிகளவில் குரல் கொடுக்கிறார் என்று பொருள் கொள்ள வேண்டுமா?

ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று தீர்மானம் வெளியிட்டும் மன்மோகன் சிங் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்ற கோபமா? ஏன் , எப்படி இந்த கேலிச்சித்திரம் உருவானது?????

ஹசந்தா அவன் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாய், அதுவும் அவனது சொந்த நாட்டு மக்களின் மீதுள்ள பற்றால் இந்த செய்தியை வெளியிட்டு அவனது தேசப் பக்தியை வெளியிட்டு கொண்டான். அதனால் அவன் பார்வைக்கு அது தவறில்லை...

ஆனால் தமிழனுக்கு என்று ஒரு உணர்வு, தேசப் பற்று, நாட்டுப் பற்று இருக்கின்றதே...அதை அவர்கள் பார்க்கத் தொடங்கினால் இந்த உலகம் தாங்காது..அதே தொனியில் இன்று ஒவ்வொரு தமிழனும் துடி துடித்து கொண்டிருக்கின்றான். இன்று நமது வலைப்பூ நண்பர்கள் முதல் ஒவ்வொருவரும் இந்திய பிரதமரையும், தமிழ்நாட்டு முதல்வரையும், ஒரு பெண்ணையும் அவமதித்து விட்டதாக கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதை பற்றி கலைஞரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கப் போனால் அவர் விழுப்புரத்தில் நடக்க விருக்கும் முப்பெரும் விழா விற்காக தொண்டர்களை சந்தித்து உற்சாகம் கொடுக்க சென்று விட்டாராம். 

இப்படி எல்லாம் நம்மில் பிளவு இருக்கும் போது லக்பிமா போன்ற ஆயிரம் பத்திரிக்கைகள் அவர்களின் கீழ்த்தரமான செயல்களை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த கண்டனக் குரல்கள்தான் அந்த செய்தியை அந்த இணையப் பக்கத்தில் இருந்து நீக்க முக்கிய காரணம் என்று நான் நம்புகின்றேன்.

வாழ்க தமிழ், வளர்க தமிழன் ஒற்றுமை...கண்டனங்களை வெளியிட்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் தமிழர்களின் உணர்வுகளை, ஒற்றுமையை உரசிப் பார்த்து பலத்தை புரிந்து கொண்ட ஹசந்தாவிற்கு இது ஒரு எச்சரிக்கை பதிவே!!!!

7 comments:

  1. சூப்பர் ஷா(ட்)(க்).... - விக்ரம்

    ReplyDelete
  2. நல்ல தகவல்

    ReplyDelete
  3. /// Anonymous

    சூப்பர் ஷா(ட்)(க்).... - விக்ரம் ///

    உண்மைதான், ஆனாலும் சிங்களவர்களுக்கு இது போதாது...

    ReplyDelete
  4. /// Anonymous
    நல்ல தகவல் ///

    இன்னமும் பலருக்கு இந்த விஷயம் தெரியாது...

    ReplyDelete
  5. ///
    அருள்
    இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க. ///

    நன்றி தோழர் அருள் அவர்களே..

    நான் ஏற்கனவே உங்கள் பதிவினைப் படித்து, நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து மின்னஞ்சலுக்கும் எங்கள் கண்டனத்தை தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்திற்கு நன்றி...

    ReplyDelete
  6. சிறுமை பட்டாலும் அண்ணாந்துதானே பார்க்கிறான் என்கிறார்களா இந்திய தேசிய பேராயக்கட்சியினர்?

    ReplyDelete
  7. சிங்களன் மட்டும்தான் இது போன்ற மட்டமான புத்தி யுடையவனா?
    இந்த இணைப்பை பாருங்கள்....யாருக்கு அதிகமான குரூரமான எண்ணம் என்று..
    http://www.youtube.com/watch?v=lw0nPN4hjI0

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...